Saturday, July 17, 2021

நண்டு மசாலா

 












தேவையான பொருட்கள்

நண்டு – 1/2 கிலோ

வெங்காயம் – 2 பொடியாக

தக்காளி – 2 பொடியாக நறுக்கியது

கறிவேப்பிலை – சிறிதளவு

இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

பிரியாணி இலை – 1

பட்டை – 1

ஏலக்காய் – 4

சோம்பு – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு


அரைப்பதற்கு

துருவிய தேங்காய் – 1 கப்

சோம்பு – 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

பச்சை மிளகாய் – 3

பூண்டு – 10 பல்


 செய்முறை:


முதலில் நண்டை நன்கு சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 

பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், சோம்பு,கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

பின் அத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.

பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறவும்.

பின் தக்காளியை சேர்த்து நன்கு கரையும் வரை வதக்கவும் .

பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

நன்கு கிளறி, பின் மூடி வைத்து, எண்ணெய் தனியே பிரியும் வரை வதக்கவும்.

பின் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை சேர்த்து நன்கு மசாலா நண்டில் சேரும் வரை கிளறிவிடவும்.

பின் அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து நண்டை வேக வைக்க வேண்டும்.

அதற்குள் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதினை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி, 5 நிமிடம் மிதமான தீயில் மூடி வைத்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கவும் ..

No comments:

Post a Comment