Wednesday, July 26, 2017

ஆத்தூர் மிளகு மட்டன் கறி

















தேவையான பொருட்கள்


மட்டன் – அரை கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/2  ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 1/2  ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
 உப்பு – தேவையான அளவு

மசாலாவுக்கு

மிளகு  – 1 ஸ்பூன்
சீரகம்  – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2  ஸ்பூன்
வரமிளகாய் – 4
மல்லித்தூள்(அ)முழு மல்லி – 1 ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 2
முந்திரி – ஐந்து
ஏலக்காய் – 3
தேங்காய் – பாதி (ஒரு மூடியில்)
இஞ்சி   –  நெல்லிக்காய் அளவு
பூண்டு  –  5-6 பல்

செய்முறை

முதலில் மசாலாவுக்கு உரிய மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய், மல்லித்தூள்(அ)முழு மல்லி, பட்டை, கிராம்பு, முந்திரி, ஏலக்காய், தேங்காய், இஞ்சி, பூண்டு என அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கெள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மட்டன், மஞ்சள் தூள், உப்பு ,வெங்காயம், மற்றும் தக்காளியை போட்டு நன்கு பிசைந்து வைத்துக் கெள்ளவும்.
அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கெள்ளவும்.

கலந்து வைத்த மட்டன் கலவையை 10-15 நிமிடம் ஊறவைக்கவும்

ஒரு கனமான வாணலியில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது இரண்டையும் நன்கு வதக்கி அதனுடன் ஊற வைத்த மட்டன் கலவையையும் சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கவும்.

தண்ணி தேவைபட்டால் சிறிது ஊற்றி நன்கு வேகவிட்டு புதினா கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

வெண்டைக்காய் மண்டி





















தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 1 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - 8 பல் (நறுக்கியது)
தக்காளி - 1
புளி - 1 எலுமிச்சை அளவு
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
 உப்பு - தேவையான அளவு
ஊற வைத்து கழுவிய அரிசி நீர் - சிறிது

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
 சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, பெருங்காயத் தூளையும் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர் அத்துடன் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்பு அதில் வெண்டைக்காயை சேர்த்து, அதில் உள்ள பிசுபிசுப்புத்தன்மை போகும் வரை வதக்க வேண்டும். அதற்குள் ஊற வைத்து கழுவிய அரிசி நீரில் புளியை சிறிது நேரம் ஊற வைத்து,
சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, வெண்டைக்காய் பாதியாக வெந்ததும் அத்துடன் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்

காளான் கிரேவி





















தேவையான பொருட்கள்:

காளான் - 1 பாக்கெட்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்

அரைப்பதற்கு...

வெங்காயம் - 1
தக்காளி - 2
பட்டை - 1 இன்ச்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 2 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளியானது நன்கு மென்மையாக வதங்கியதும்,
அதனை இறக்கி குளிர வைத்து, மிப்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டூ பேஸ்ட் சேர்த்து வதக்கி, காளானையும் உடன் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து மல்லி தழை தூவி இறக்கவும் ..

வெஜிடபிள் ஸ்டூ



















தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 1,
வெங்காயம் - 1,
பீன்ஸ் - 100 கிராம்,
கேரட் - 100 கிராம்,
பச்சைமிளகாய் - 5,
உப்பு, கறிவேப்பிலை - தேவையானவை,
தேங்காய்ப்பால் - 1 டம்ளர்.

செய்முறை :

காய்கறிகள் மற்றும் வெங்காயத்தை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய காய்கறிகளுடன், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு வேகவைக்கவும்.

வேக வைத்த காய்கறிகளை மீண்டும் அடுப்பில் வைத்து சூடானதும் இதில் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அதில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

Sunday, July 16, 2017

நாட்டுக்கோழி கிரேவி

















தேவையான பொருட்கள்:

நாட்டுக் கோழி - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 1/4 கப்
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
தண்ணீர் - 3/4 கப்
உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு...

தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - 1/2 இன்ச்
பூண்டு - 4 பற்கள்
சோம்பு - 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச்
ஏலக்காய் - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 1.



செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* நாட்டுக்கோழியை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 2-3 முறை நீரில் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

* மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும்.

* ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த, பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக 5 நிமிடம் குறைவான தீயில் வதக்க வேண்டும்.

* பிறகு அதில் நாட்டுக்கோழியை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, 1 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும்.

* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து கொத்தமல்லியைத் தூவி இறக்கவும் .