Saturday, February 24, 2018

கீரை கடைசல்


















தேவையானபொருள்கள் –

அரைக்கீரை – 4 கப்
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 3
பூண்டுப் பல் – 3
தக்காளி – 1 (சிறியது)
சோடா உப்பு – 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு


தாளிக்க –

எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை –

கீரையை நன்றாக ஆய்ந்து தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்தி வைக்கவும். பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோலுரித்து சிறிதாக நறுக்கிக் வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கீரை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, தேங்காய் துருவல்,உப்பு, சோடா உப்பு எல்லாவற்றையும் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.
கீரையில் தண்ணீர் சத்து இருப்பதால் தண்ணீர் சேர்க்கத் தேவை இல்லை. கை விடாமல் 2 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
ஆறிய பின் மிக்ஸ்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
 அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் , கறிவேப்பிலை போட்டு தாளித்து கீரையோடு சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.

Friday, February 23, 2018

மட்டன் கிரேவி





















தேவையான பொருட்கள்

ஆட்டுக்கறி - 1/2கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 3
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
ஏலக்காய், பட்டை - தலா 2
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மட்டனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், பட்டை சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி பின் மிளகாய் தூள் சேர்த்த வதக்கவும்.

அடுத்து நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவேண்டும்.

பின்னர் கழுவிய மட்டனை சேர்த்து உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

பின் குக்கரை மூடி முன்று விசில் வரும்வரை அடுப்பில் வைத்து இறக்கவும்.

Saturday, February 10, 2018

செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவி



















தேவையான பொருட்கள்: 

நண்டு - 1 கிலோ 
வெங்காயம் - 3 (நறுக்கியது) 
தக்காளி - 4 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் 
வரமிளகாய் - 4 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 
மிளகு - 2 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
மல்லி - 2 டீஸ்பூன் 
சோம்பு - 1/2 டீஸ்பூன் 
துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன் 
முந்திரி - 4 
பச்சை மிளகாய் - 3-4 
உப்பு - தேவையான அளவு 
கறிவேப்பிலை - சிறிது 
கொத்தமல்லி - சிறிது 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் நண்டை சுத்தமாக கழுவி நீரை முற்றிலும் வடிகட்டிக் கொண்டு, பின் ஒரு பாத்திரத்தில் அதனைப் போட்டு, நண்டு மூழ்கும் அளவில் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் பாத்திரத்தை இறக்கி, நீரை வடிகட்டி விட வேண்டும். (இப்படி செய்வதால் நண்டு வாடை அதிகம் இருக்காது மற்றும் சாப்பிடும் போது நண்டு மென்மையாக இருக்கும்.) பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம், சோம்பு, மல்லி சேர்த்து லேசாக வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து, அதோடு தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஓர் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, கரம் மசாலா, தக்காளி, உப்பு சேர்த்து கிளறி, மிதமான தீயில் 3 நிமிடம் மூடி வைக்க வேண்டும். பின் அதில் நண்டு சேர்த்து பிரட்டி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து, 15 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவி ரெடி!!!

மட்டன் மசாலா குழம்பு
















தேவையான பொருள்கள்

மட்டன் - அரை கிலோ
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 15 பல்
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கடுகு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 100 மில்லி
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 150 கிராம்
கொத்தமல்லி - சிறிதளவு


செய்முறை

மட்டனை முதலில் நன்கு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். பின்பு அதை நன்கு ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். இஞ்சி, பூண்டையும் விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். மற்றொரு சட்டியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் விட்டு தாளிக்க வேண்டும். பின்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு இஞ்சி, பூண்டு கலவையை, பச்சைத்தன்மை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

இதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து, மீண்டும் நன்கு வதக்க வேண்டும். பின்பு அரைத்த மிளகாய், சீரக கலவையை சேர்க்க வேண்டும். பின்னர் வேகவைத்த இறைச்சியை, தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்பு தேவையான அளவு உப்பு போட்டு, பதம் பார்த்து இறக்கி விட்டு, நறுக்கிய கொத்தமல்லியை தூவ வேண்டும். 

பெப்பர் மட்டன் ரோஸ்ட்
























தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

மசாலாவிற்கு...

தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2-3
கறிவேப்பிலை - சிறிது
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது

வறுப்பதற்கு...

மிளகு - 2 டீஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்


செய்முறை

முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவி, குப்பரில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூடி 5-6 விசில் விட்டு, குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சோம்பு மற்றும் மிளகை ஒரு வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, உப்பு சேர்த்து, வேக வைத்துள்ள மட்டனை அப்படியே வாணலியில் போட்டு, தீயை அதிகரித்து, மட்டன் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் கொத்தமல்லித் தூவி கிளறி இறக்கினால், செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் ரெடி!!!