Monday, October 7, 2019

புளியோதரை என்ற புளிசோறு



















தேவையான பொருட்கள் :

உதிரியாக வடித்து ஆற வைக்கப்பட்ட சாதம் – 3 கப்
புளி – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்

தாளிப்பதற்கான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் – 6
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
வேர்க்கடலை – 1/4 கப்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிது

வறுத்து பொடியாக்குவதற்க்கான பொருட்கள்:
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
 தனியா – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5

புளியோதரை செய்முறை:

புளியை தண்ணீரில் நன்கு கரைத்து, 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவைக்கவும்
ஒரு வாணலியில் கடலை பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பை போட்டு மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். கொஞ்சம் வறுபட்ட நிலையில் அதில் தனியா, மிளகு, வெந்தயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். இந்த கலவை நன்கு வாசனை வர துவங்கியதும் அடுப்பை நிறுத்தி விடவேண்டும். பிறகு அந்த கலவையில் பெருங்காய தூள் சேர்த்து ஆறவிட வேண்டும். அனைத்தும் நன்கு ஆரிய உடன் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
இப்போது  வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட வேண்டும்.
கடுகு பொரிந்ததும், அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய்,
கருவேப்பிலை, பெருங்காய தூள், மஞ்சள் தூள் ஆகியயவற்றை
சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பிறகு இதில் வேர்க்கடலை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இந்த கலவையில், நாம் இதற்கு முன்பு அரைத்து வைத்துள்ள
புளியோதரை பொடியை போட்டு நன்கு கலக்க வேண்டும்.
சிறிது நேரத்திற்கு பிறகு இதில் புளி  கரைசலை ஊற்ற வேண்டும்.
 பிறகு அது ஒரு அளவு கெட்டியாகும் வரை நன்கு கொதிக்கவிட்டு
 அதில் தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
இந்த கலவை நன்கு கொதித்து கெட்டியான பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு ஆறவிட வேண்டும். இப்போது சாப்பாட்டிற்கு தேவையான அளவு கலவையை எடுத்துக்கொண்டு அதில் சாதத்தை போட்டு கிளறினால் சுவையான புளியோதரை தயார்.