Saturday, July 2, 2016

சிக்கன் ஆப்கானி
















தேவையான பொருட்கள்,

சிக்கன் - முக்கால் கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 4
பிரியாணி இலை - 4
பட்டை - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

ஊற வைப்பதற்கு,
தயிர் - 1 கப்
வெங்காய பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
எள் - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 4 பற்கள்

செய்முறை,

 சிக்கன் துண்டுகளை நன்கு நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் முந்திரி, எள், பூண்டு சேர்த்து நைசாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரைத்த முந்திரி பேஸ்ட், வெங்காய பேஸ்ட், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து கலந்து, 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
3 மணிநேரம் ஆனப் பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்த பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
பிறகு அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, 20 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
பின் உப்பு, கரம் மசாலா, மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.
அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 25 நிமிடம் தீயை குறைவில் வைத்து, சிக்கனை வேக வைக்க வேண்டும்.
சிக்கன் வெந்ததும், அடுப்பை அணைத்து, கொத்தமல்லி மற்றும் குங்குமப்பூவை தூவி அலங்கரிக்கவும்.

மட்டன் நீலகிரி குருமா















தேவையானவை 

மட்டன் - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 3 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

தாளிக்க :
பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 2

அரைக்க 1 :
தேங்காய் - 2 துண்டு
கசகசா - ஒரு தேக்கரண்டி 

அரைக்க 2 :
புதினா, கொத்தமல்லி - தலா அரை கைப்பிடி கட்டு
பச்சை மிளகாய் - 2

செய்முறை 

குக்கரில் மட்டனுடன் மஞ்சள் தூள், ஒரு பிரிஞ்சி இலை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.
அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கலவை கொதித்ததும் தீயை மிதமாக வைத்து அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
கொதித்ததும் வேக வைத்த மட்டனை சேர்த்து உப்பு போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
மட்டனுடன் சேர்ந்து நன்கு கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் புதினா விழுதை சேர்த்து கொதிக்க விடவும். குருமா கெட்டியானதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

மட்டன் ட்ரை ஃப்ரை



தேவையானவை

மட்டன் - 350 கிராம்
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தயிர் - 100 மில்லி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2

செய்முறை
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா பொருட்கள் மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்கவும். அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
மட்டன் வதங்கியதும் தயிர் மற்றும் சீரகம் சேர்த்து பிரட்டி விடவும்.
மட்டன் வேக அதில் இருக்கும் தண்ணீரே போதுமானது, தேவையெனில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி சிம்மில் வைத்து வேக விடவும்.
மட்டன் வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

Friday, July 1, 2016

கப்ஸா பிரியாணி




தேவையான பொருட்கள் :

முழு கோழி - 1
அரிசி - அரை கிலோ (2 1/2 ஆழாக்கு)
எண்ணெய் - 50 மில்லி
பட்டை ஒரு விரல் நீளம் - இரண்டு
ஏலக்காய் - மூன்று
கிராம்பு - நான்கு
வெங்காயம் - மூன்று
தக்காளி - மூன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* முழு கோழியை சுத்தம் செய்யவும்.
* அரிசியை இருபது நிமிடம் ஊறவைக்கவும்.
* அரிசி ஒன்றுக்கு ஒன்றரை பங்கு தண்ணீர் என்றால் 3 3/4 அளவு வரும். நான்கு டம்ளராக எடுத்து கொண்டு சுத்தம் செய்த கோழியை முழுவதுமாக அப்படியே போட்டு வேக விடவும்.
* வேக வைத்து அந்த தண்ணீரை தனியாகவும், கோழியை தனியாகவும் வைக்கவும்.
* சட்டியை காயவைத்து அதில் எண்ணெய், பட்டரை ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும். சிவக்க விட வேண்டாம்.
* பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கி தனியாக வைத்துள்ள கோழி தண்ணீரை அதில் ஊற்றி கொதிக்க விடவும்.
* கொதிவந்ததும் அரிசியை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு வேக வைத்துள்ள கோழியையும் சேர்த்து தீயை குறைத்து தம் போட்டு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.