Friday, January 11, 2019

ஆட்டிறைச்சி குடல் குழம்பு





















தேவையான பொருட்கள்

குடல் செட் 1 ( பொடியாக  நறுக்கியது )
சின்ன வெங்காயம் 26
தக்காளி 3
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி
பச்சை மிளகாய் 12
பட்டை 1 இன்ச்
கிராம்பு 4
சோம்பு 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1 கப்
வரமிளகாய் துருவல் 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையானஅளவு
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பில்ல கொஞ்சமாக
கொத்தமல்லி இலைகள் 1 கைப்பிடி
எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி

செய்முறை

மிக்ஸியில் பட்டை , கிராம்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் அனைத்தையும்,
 சேர்த்து நன்றாக நைசாக விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பிறகு மிக்ஸியில் பச்சை மிளகாய் , தேங்காய் துருவல் மற்றும் சோம்பு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக மையமாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

மிக்ஸியில் தக்காளியை சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

பிரஷர் குக்கரில் எண்ணெய்  விட்டு நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து,
 நன்றாக வெடிக்க ஆரம்பித்த உடன் அதனுடன் கறிவேப்பிலை  சேர்த்து,
நன்றாக வதக்க வேண்டும்.

இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

தக்காளி அரைத்த விழுதையும் மற்றும் தேங்காய் அரைத்த விழுதையும் சேர்த்து,
 நன்றாக வதக்க வேண்டும்.

மஞ்சள்தூள் , வரமிளகாய் தூள் , தேவையான அளவிலான உப்புத்தூள், கரம்மசாலா தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து  நன்றாக பச்சை மணம் போகும் வரை வதக்க வேண்டும்.

இப்பொழுது பொடியாக நறுக்கிய குடல் துண்டுகளை சுத்தமாக சுடுதண்ணீர் ஊற்றி நன்றாக கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூன்று தடவை கழுவி கொள்ள வேண்டும்.

 நன்றாக கழுவிய குடல் துண்டுகளை பிரஷர் குக்கரில் போட்டு நன்றாக வதக்க வேண்டும் அதனுடன் 3 கப் தண்ணீர்சேர்த்து  ,   அதன் பிறகு பிரஷர் குக்கரின் மூடியை மூடி விசில் பொருத்தி மிதமான தீயில் 15 நிமிடங்கள் வைத்து விடவும்.

அதன் பிறகு அடுப்பை அணைத்து விடவும் பிரஷர் முழுவதுமாக அடங்கியதும் பிரஷர் குக்கரின் மூடியை திறந்து பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவவும்.

காரைக்குடி ஆட்டு கறி குழம்பு


























தேவையான பொருட்கள்


ஆட்டுகறி - 1/2 கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 4
சீரகம், ‌மிளகு, சோம்பு - தலா 1 தே‌க்கர‌ண்டி
பட்டை, லவங்கம் - ‌சி‌றிது
கா மிளகாய் - 6
இஞ்சி - ‌பெ‌ரிய து‌ண்டு
பூண்டு - 2 முழுதாக
ப மிளகாய் - 4 கீறியது
தே‌ங்கா‌ய் - 1/2 முறி



செய்முறை ‌

க‌றியை வேக வைக்கவும். இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், மிளகு, காய்ந்த மிளகாயை எ‌ண்ணெ‌ய்‌வி‌ட்டு வதக்‌கி அரை‌‌க்கவு‌ம். ‌
வெங்காயத்தையும், தக்காளியையும் நா‌ன்கு து‌ண்டுகளாக அ‌ரி‌ந்து எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வதக்கி அரைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வை‌த்து, எண்ணை‌ய் ஊற்றி, கா‌ய்‌ந்தது‌ம் ‌‌ப‌ச்சை ‌மிளகா‌ய் போ‌ட்டு வத‌‌க்‌கி அரை‌த்து வை‌த்‌திரு‌க்கு‌ம் மசாலாவை‌ப் போடவு‌ம். ‌ ‌
பிறகு த‌க்கா‌ளி, வ‌ெ‌ங்காய ‌விழுதை‌ச் சே‌‌ர்க்கவு‌‌ம்.
இ‌தி‌ல் கறியை போ‌ட்டு தேவை‌ப்ப‌ட்டா‌ல் ‌மிளகா‌ய் பொடியை போ‌ட்டு, தேவையான அளவு உ‌ப்பு சே‌ர்‌த்து வத‌க்‌கி தண்ணீரை ஊற்றி விட்டு அடுப்பில் ‌மிதமான நெரு‌ப்‌பி‌ல் ,
அரை மணி நேரம் வேக வைக்கவும்.
தே‌ங்காயை மைய அரை‌த்து க‌றி வெ‌ந்தது‌ம் சே‌ர்‌த்து இற‌க்கவு‌ம்.

கொழும்பு கோழி குழம்பு


















தேவையான பொருட்கள்;

கோழி இறச்சி 1 Kg -
பச்சை மிளகாய் 10
ஏலக்காய் 5
கருவாப்பட்டை 3
வெங்காயம் 2
மல்லி தூள் 2 தேக்கரண்டி
ஜீரகம் 1 தேக்கரண்டி
ஜீரகம் தூள் 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம்  தூள் 1 தேக்கரண்டி
கறிமசாலா 2 தேக்கரண்டி
எண்ணெய் 4 மேசைக்கரண்டி
மஞ்சள் 2 தேக்கரண்டி
பூண்டு 4 பற்கள்
இஞ்சி பூண்டு அரைத்தது 2 தேக்கரண்டி
தேங்காய் பால் 1 கப்
நல்லமிளகு தூள் தேவைக்கு
கருவேப்பிலை தேவைக்கு
உப்பு தேவையான அளவு

தயாரிக்கும் முறை;

முதலில் இறைச்சியை நன்றாக கழுவி ஓரளவு பெரிய துண்டாக நறுக்கி,
உப்பும் மஞ்சளும் இறைச்சியில் நன்றாக கலந்து இறைச்சியை ஊற வைக்கவும்.
வெங்காயங்களை தனியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைவிட்டு எண்ணை சூடானதும்,
ஏலக்காய் கருவாப்பட்டை பூண்டு கறிவேப்பிலை ஜீரகம் போட்டு வதக்கியதும்,
பச்சை மிளகாயை போட்டு அது வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் போடவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் 1 தேக்கரண்டி மஞ்சள் போடவும்.
மஞ்சள் வாசனை நீங்கியதும் இஞ்சிபூண்டு அரைப்பையும் போட்டு மீதமுள்ள,
 கறிமசாலா ஜீரகம் மல்லி நல்ல மிளகு தூள்களையும் போட்டு
இறைச்சியையும் போட்டு நன்றாக கிறளி மூடி வைத்து 20 நிமிடம் வேக விடவும்.
நன்றாக வெந்ததும் தேங்காய் பால் விட்டு ஓரிரு தடவை கொதித்ததும் பால் பச்சை வாசனை போய் ஓரளவு வற்றியதும் இறக்கிவிடவும் ....

Thursday, January 3, 2019

நாட்டுக்கோழி குழம்பு





















தேவையான பொருள்கள்:

நாட்டுக்கோழி – 1/2 கிலோ
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
தயிர்  – 2 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
மல்லித்தழை – சிறிது
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைக்க வேண்டியவை:
மிளகாய் வத்தல் – 5
கொத்தமல்லி – 5 மேஜைக்கரண்டி
சீரகம் – 1 மேஜைக்கரண்டி
மிளகு – 1 மேஜைக்கரண்டி
தேங்காய் துருவல் – 100 கிராம்
தாளிக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
பட்டை – 1 இன்ச் அளவு
கிராம்பு – 2
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
கோழி துண்டுகளை நன்கு சுத்தப்படுத்தி வைக்கவும். தக்காளி, வெங்காயம் மற்றும் மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, சீரகம், மிளகு எல்லாவற்றையும் போட்டு கிளறி அடுப்பை அணைத்து, ஆற விட்டு மிக்ஸ்சியில் விழுதாக அரைத்து கொள்ளவும். தேங்காயையும் நன்கு வறுத்து மிக்ஸ்சியில் அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு கறிவேப்பில்லை, வெங்காயம்,  பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் தயிர், அரைத்து வைத்துள்ள பொருட்கள் மற்றும் கரம் மசாலா தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு  நிமிடம் கிளறி அதனுடன் உப்பும் கோழித்துண்டுகளையும் சேர்த்து மசாலா எல்லா இடங்களிலும் படும்படி நன்கு கிளறி விட்டு  அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு கொதித்து கறி வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான நாட்டுக்கோழி குழம்பு தயார்.

பகரா பேங்கன்




















தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - கால் கிலோ
தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
வெங்காயம் - 100 கிராம்
தனியா - 3 டீஸ்பூன்
எள், சீரகம் - தலா 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப
வேர்க்கடலை - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
எண்ணெய், சீரகம் - தாளிக்க தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

வாணலியில் தனியா, எள், வேர்க்கடலை, சீரகம், மிளகு, முந்திரியைத் தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் சேர்த்து நைஸாகப் பொடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, நறுக்கிய தக்காளி போட்டு வதக்கியதும், அதனுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து மேலும் வதக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கி, பின்னர் அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மேலும் வதக்கவும்.
பிறகு புளிக்கரைசல், அரைத்த மசாலா பொடி, மசாலா விழுது சேர்த்து வதக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து, கத்திரிக்காயுடன் சேர்த்து, எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.
இதை  சப்பாத்தி, இட்லியுடன் சாப்பிடலாம் ..

காளான் கிரேவி























தேவையான பொருட்கள்:

காளான் - 200 கிராம்

 மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு

அரைப்பதற்கு...

வெங்காயம் - 1
தக்காளி - 2
பட்டை - 1 இன்ச்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 2 சிட்டிகை



செய்முறை:

காளானை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளியானது நன்கு மென்மையாக வதங்கியதும், அதனை இறக்கி ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் காளானை சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு அதில் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கவும் ..

மட்டன் குடல் குழம்பு
























தேவையான பொருட்கள் :

ஆட்டு குடல் – முக்கால் கிலோ
வெங்காயம் – 4
தக்காளி – 4
தேங்காய் – ஒரு மூடி அரைத்தது (கசகசாவுடன்)
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா – கொஞ்சம்
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
கரம் மசாலா – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி, புதினா – தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
குக்கரில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு,
மஞ்சள் தூள் சிறிது போட்டு குடலுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி ,பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின்
 நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி சேர்த்து மைய வதக்கவும்.
இப்பொழுது மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அடுத்து வேக வைத்த குடலை போடவும்.
நன்றாக கொதி வரும் போது அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
ஓரங்களில் எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வரும் போது கொத்தமல்லி, புதினா தழை தூவி இறக்கி பரிமாறலாம்.

சப்பாத்தி ,தோசை, இட்லிக்கு சரியான டிஷ் இந்த மட்டன் குடல் குழம்பு..

உருளைக்கிழங்கு முட்டைக்கறி

























தேவையான பொருட்கள் :

முட்டை – 6
உருளைக்கிழங்கு – 100 கிராம்
வெங்காயம் – 50 கிராம்
தேங்காய் – கால் மூடி
எலுமிச்சம் பழம் – 1
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு – 25 கிராம்
பச்சைமிளகாய் – 8
கடுகு – அரை தேக்கரண்டி
நெய் – 25 கிராம்
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – 4 கொத்து.



செய்முறை :

முட்டையை வேக வைத்து தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு சூடானதும் கடுகு, முந்திரி போட்டு சிவந்ததும்,
வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த தேங்காய் விழுது
சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
தேங்காய் கொதித்து பச்சை வாடை போனவுடன்
முட்டை, உருளைக்கிழங்கு,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து
10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
கடைசியாக கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

வீட்டு மசாலா சிக்கன் குழம்பு

























தேவையான பொருட்கள் :

சிக்கன் – அரை கிலோ
தேங்காய் (துருவியது) – 1 கப்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 6
பச்சை மிளகாய் – 6
தேங்காய் எண்ணெய்
சின்ன வெங்காயம் -1
பெரிய வெங்காயம் -1
தக்காளி – 1
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
வெந்தயத்தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்- ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
சின்னவெங்காயம், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும்
அதில் தேங்காய் துருவலை போட்டு வறுத்த பின்னர் அதோடு கொத்தமல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா பொடி, மஞ்சள் தூள் யாவும் போட்டு சிறிது கிளறி விடவும்.
கலவை பொன்னிறமாக வந்ததும் அதனை விழுதாக அரைத்துத் தனியாக வைத்து கொள்ளவும்.
அதே கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
இப்போது சிக்கன் துண்டுகளைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து மெதுவாக கிளறவும்.
பின்னர் இரண்டு கப் நீர் ஊற்றி மெதுவாக கிளறி விடவும்.
இப்போது பாத்திரத்தை மூடி சிக்கனை வேக விடவும்.
பாத்திரத்தைத் திறந்து நறுக்கி வைத்த பெரிய வெங்காயம்,
தக்காளி ஆகியவற்றைப் போட்டு மேலும் சிறிது தண்ணீர் ஊற்றவும்.
இப்போது பாத்திரத்தை மூடி 20 நிமிடங்கள் மறுபடியும் வேக வைக்கவும்.
பின்னர் மூடியைத் திறந்து அரைத்து வைத்த தேங்காய் மசாலா
விழுதினை போட்டு நீர் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
சிறிது கறிவேப்பிலை போட்டு குறைவான தீயில் 5 நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும் .. 

யாழ்ப்பாண தேங்காய் பால் மீன் குழம்பு























தேவையான பொருட்கள்


கழுவிய மீன் துண்டுகள் – 500 கிராம்
வெட்டிய வெங்காயம் – 100 கிராம்
வெட்டிய பச்சை மிளகாய் – 04
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பழப்புளிக் கரைசல் – 1 கப்
தேங்காய்ப்பால் – 03 கப் (முதற்பால் உட்பட)
கருவேப்பிலை – தேவையான அளவு


செய்முறை

ஒரு பாத்திரத்தில்,மீன் துண்டுகள்,  வெங்காயம் , பச்சை மிளகாய்,
கருவேப்பிலை என்பவற்றைப் போடவும்.
அதனுடன்,தேங்காய்ப் பால், பழப்புளிக் கரைசல், உப்பு,
மிளகாய்த் தூள் என்பவற்றையும் சோ்த்துக் கொள்ளவும்.
சேர்த்த கலவையை நன்றாகக் கலக்கவும்.
பாத்திரத்தை அடுப்பில்  மிதமான சூட்டில் வைக்கவும்.
மீன் குழம்பு நன்றாகக் கொதித்து, எண்ணெய் வரும்போது,
அதனுடன், மிளகு, நற்சீரகம்,
உள்ளி(சிறு வெங்காயம்)  என்பவற்றை  இடித்துப் போடவும்.