Saturday, February 11, 2017

முள்ளங்கி சாம்பார்

Image result for முள்ளங்கி சாம்பார்




 தேவையான  பொருட்கள்

துவரம் பருப்பு -1கப்
 காய்கறி - முள்ளங்கி
 புளி - ஒரு சிறிய  உருண்டை (சிறிய  எலும்பிச்சை பழ அளவு )
சாம்பார்  பொடி - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி -1/2ஸ்பூன்
பெருங்காயம் - 1/2ஸ்பூன்
கறிவேப்பிலை - 5இதழ்கள்
 உப்பு  - தேவையான அளவு
தாளிக்க  தேவையான  பொருட்கள்
ஆயில் -1/2ஸ்பூன்
கடுகு - 1/2ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4ஸ்பூன்
கறிவேப்பிலை - 3இதழ்கள்
கொத்தமல்லி தழை -1ஸ்பூன்

 செய்முறை

புளியை  1/2மணிநேரம்  2 டம்ளர் தண்ணீரில்  ஊர வைக்கவும்.
துவரம் பருப்பை  21/2 டம்ளர்  தண்ணீர்  விட்டு  குக்கரில் 5 விசில் வரை அடுப்பில்  வைத்து  இறக்கவும்  ஒரு  கடாயில்  புளி  தண்ணீரை  விட்டு
அதில்  காய் ,உப்பு ,மஞ்சள் பொடி ,பெருங்காயம் ,கறிவேப்பிலை அனைத்தையும்  போட்டு  அடுப்பில்  வைத்து  சுமார்  20-25 நிமிடங்கள்  நன்றாக  கொதித்த  பின் வெந்த  பருப்பை  போட்டு  10 நிமிடங்கள் கொதித்த  பிறகு  இறக்கி  வைத்து ,எண்ணெயில்  கடுகு ,
உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை கொத்தமல்லிதழை  சேர்த்து
தாளித்து  பரிமாறவும் .
முள்ளங்கிக்கு  பதில்  முருங்கை , வெண்டைக்காய் ,கத்திரிக்காய் ,
குடை  மிளகாய் .இவை  அனைத்தும்  சேர்த்து  சாம்பார்  செய்யலாம்....

பாவக்காய் பிட்லா

Image result for பாவக்காய் பிட்லா


தேவையான  பொருட்கள்

துவரம்  பருப்பு   -  ஒரு கப்
பாவக்காய்  - இரண்டு  சிறியது(  அல்லது  பச்சை  தக்காளி )
புளி              -   எலும்பிச்சை பழ  அளவு
மஞ்சள்  பொடி  - 1/2 ஸ்பூன்
உப்பு                -   தேவையான  அளவு
தேங்காய்  எண்ணெய் - 2 கரண்டி

வறுக்க  தேவையான  பொருட்கள்
கடலை  பருப்பு  - 11/2 ஸ்பூன்
உளுத்தம்  பருப்பு  - 1 ஸ்பூன்
வற்றல்  மிளகாய்  - ஐந்து
தேங்காய்   -    1/2 கப்(தனியாக பொன்னிறமாக வறுக்கவும் )

தாளிக்க தேவையான  பொருட்ககள்

கடுகு- 1/4 ஸ்பூன்
உள்ளுதம்பருப்பு - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது


செய்முறை  

புளியை இரண்டு  டம்ளர்  தண்ணிர்  விட்டு 1/2 மணி  நேரம் ஊரா  வைத்து  கொள்ளவும்.
 துவரம் பருப்பை  கூக்கரில்  வேக  வைத்து  கொள்ளவும். .
 கடாயில் கொஞ்சம்  எண்ணை  விட்டு பாவக்காயை விதையை நீக்கி,
 பொடியாக நறுக்கி போட்டு  ஒரு  நிமிடம்  நன்றாக  வறுக்கவும் .
வறுத்த  பாவக்கையை புளி  தண்ணீருடன்  சேர்த்து  அடுப்பில் வைத்து ,
 உப்பு  மஞ்சள்  பொடி  கறிவேப்பிலை  சேர்த்து   1/2 மணி  கொதிக்க  விடவும் .
பிறகு வேகவைத்த  துவரம்  பருப்பை  போட்டு கலக்கவும்,
 பின்பு வறுத்து  அரைத்து வைத்துள்ள  பொருட்களையும்  சேர்த்து ,
 நன்றாக கொதிக்க  வைத்து  இறக்கி வைக்கவும்.
கடுகு உளுத்தம் பருப்பு  கறிவேப்பிலை  தாளித்து கொட்டி கொத்தமல்லி  தழை  தூவி   பரிமாறவும்

Thursday, February 2, 2017

கத்தரிக்காய் சட்னி




தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் - 4
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிது
மிளகுத் தூள் - சிறிது
கடுகு - சிறிது
உளுத்தம்பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
எண்ணெய் - சிறிது.

செய்முறை :

* கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

* வெந்ததும் இறக்கி, மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் அதில் அரைத்த கத்தரிக்காய் விழுதை கொட்டவும்.

* கடைசியில் சிறிது மிளகுத் தூள் தூவி கொதி வந்ததும் இறக்கவும். (ஒவ்வாமை ஏற்படாமலிருக்கும்).

கேரளா கொண்டைக்கடலை குழம்பு

















தேவையான பொருட்கள் :

கொண்டைக்கடலை  - 1 கப்
சின்ன வெங்காயம்  -  50 கிராம்
சிகப்பு மிளகாய்  - 4
மஞ்சள்தூள்  - 1 /2 தேக்கரண்டி
தனியா  - 1  தேக்கரண்டி
சீரகம்  - 1 /2 தேக்கரண்டி
துருவிய தேங்காய்  -  1 /2 கப்
இஞ்சி  - 1 அங்குலத்துண்டு
பச்சை மிளகாய்( நீளமாக அரிந்தது)  -  2
புளி  -  எலுமிச்சை அளவு

தாளிக்க :

கடுகு -  1 /4 தேக்கரண்டி
கறிவேப்பிலை  - 2 இணுக்கு
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)  - 3  மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள்
எண்ணெய்  - 1 மேசைக்கரண்டி

செய்முறை :

* கொண்டைக்கடலையை 10  மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த பின் வேக வைத்து கொள்ளவும்.

* புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும்

* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் விடாமல் சிகப்பு மிளகாய், தனியா, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், கடைசியில் துருவிய தேங்காய் என ஒவ்வென்றாக தனித்தனியாக போட்டு சிவக்க வறுத்து ஆற விடவும்.

* வறுத்த பொருட்களுடன், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.

* அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வேகவைத்த கொண்டைக்க்கடலை, அரைத்த விழுது, பச்சைமிளகாய், புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். குழம்பு திக்ககும் வரை கொதிக்க விடவும்.

* குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வெங்காயம் சேர்த்து வதக்கி, குழம்பில் ஊற்றவும்.