Tuesday, July 17, 2012


மரித்த என் மனதிலும் !
சில உணர்வு  கவிதைகள் உண்டு !
சாமானியருக்கு புரியும்!
மொழிகளில் இல்லை அது !
அந்த   கவிதைகள்  எனக்கும் !
என் மனதுக்கும்  மட்டுமே புரியும் ............
யாருக்கு புரியாவிட்டாலும் !
என்னாலும்   வாழமுடியுமென !
கடந்த சில வருடங்களில்
மெளனமாய்
சொல்லிக் கொடுத்திருக்கிறது !
அந்த வலி நிறைந்த கவிதைகள் ..............

--- கல்லறை காதலன் - ராஜேஷ் ............

கல்லறை காதலன் ........




தேன் மதுர ! 
காதல் (கள்ள ) மொழிகள் இல்லை என்னிடம் !
மயக்க வைக்கும்  வார்த்தை வசீகரம் இல்லை  என்னிடம் !
சொக்க வைக்கும்  சொத்து  சுகம் இல்லை என்னிடம் !
நாவில்  நஞ்சு  வைத்து  நெஞ்சு கிழிக்கும்  சொற்கள்  என்னிடம் இல்லை !
பஞ்சு மஞ்சத்தில்  பகட்டுடன்  பாதகம் செய்யும்  அற்ப குணம் இல்லை என்னிடம் !

ஆனாலும் !

சங்கு தெறித்து  நான் எழுதும்  கவிதைகளின்  மேல் ஆணை  !
என் நெஞ்சு கிழித்து  நீ நோக்கு !
அதனுள்  நீயும் ! உன் நினைவுகளும்  மட்டுமே இருக்கும் ............

-- கல்லறை காதலன் - ராஜேஷ் ....


Monday, July 16, 2012

பசித்தவன் ....





அன்பே !
பல இரவுகள்  உன்னை  கண்டு !
பயந்து போய்  இருக்கிறோம் !
நானும்  என் கவிதைகளும் !
ஆனாலும் நீ  எங்களை  விடவே இல்லை !
நீ  வராமல் இருக்கும் 
வேளைக்காக !
தவங்கள்  பல நுறு செய்து விட்டேன் !
எனக்காக  மனம்  மாறமாட்டாய ?
அன்பே !
- கல்லறை  காதலன்  ராஜேஷ்
 - பசியை  கண்டு  பயந்த ஒரு இரவில்  எழுதிய என் கவிதை ....

மீன் குழம்பு ....




தேவையான பொருட்கள்,

மீன் - முக்கால் கிலோ
சி. வெங்காயம் - ஐம்பது கிராம்
தக்காளி - இரண்டு
ப. மிளகாய் - ஐந்து
புளி - பெரிய எலுமிச்சையளவு
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
சீரகம் - கால் டீ ஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
எண்ணை - நான்கு டேபிள் ஸ்பூன்
உப்பு – இரண்டு டீ ஸ்பூன்
மசாலா அரைபதற்கு  தேவையானவை ,
வர மிளகாய் - ஏழு
மல்லி விதை - ஒரு டேபிள் ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்


செய்முறை,


முதலில் மீனை சுத்தம் செய்து சிறிய துண்டங்களாக நறுக்கி உப்பு போட்டு பிசறி நன்கு கழுவி வைக்கவும்.வர மிளகாய், மல்லி, சோம்பு மூன்றையும் பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நைஸான விழுதாக அரைத்து வைக்கவும்.வெங்காயத்தில் இரண்டை எடுத்து வைத்து விட்டு மற்றதை தோலுறித்து இரண்டாகவும், தக்காளிகளை நான்காகவும் நறுக்கவும்.ப. மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். தனியாக பிளக்க வேண்டாம்.புளியை மூன்று டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அரைத்த விழுதையும் போட்டு கரைத்து வைக்கவும்.அடுப்பில் வாணலியை வைத்து வெந்தயம் போட்டு வாசனை வந்ததும் வெங்காயம், ப. மிளகாய், கறிவேப்பிலை போட்டு மூன்று நிமிடம் வதக்கவும்.பின் தக்காளி, ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும்.இப்போது புளிக் கரைசலை ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.பின் மீன் துண்டங்களைப் போட்டு (மீனை போட்டவுடன் குழம்பு லேசாக நீர்த்துக் கொள்ளும்) ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.சீரகத்தை நன்றாகத் தட்டி பிறகு இரண்டு வெங்காயத்தையும் வைத்து லேசாகத் தட்டி குழம்பில் போட்டு மூடி பத்து நிமிடம் கழித்து திறந்து லேசாக (மீன் உடைந்து விடாமல் கவனமாக) கிண்டி விடவும். 


- ராஜேஷ் பிள்ளை .

செட்டிநாட்டு இறால் வறுவல்...




தேவையானப் பொருட்கள்

இறால் - 1/4 கிலோ கிராம்
வெங்காயம் - 2 பெரியது ( நறுக்கிக்கொள்ளவும் )
பூண்டு - 10 பெரிய பல்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தக்காளி - 2 பழம்
தேங்காய் - கால் மூடி ( துருவியது)
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - ஒரு விரலளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கையளவு
வத்தல் மிளகாய் - 20 பெருசு.

பூண்டையும் இஞ்சியையும் நன்கு அரைத்துக்கொள்ளவும் , வெங்காயம் நீளவாக்கில் வெட்டிக்கொளவும்.
தோல்,ஓடு நீக்கிய இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். 
தேங்காய் துருவலையும் 15 வத்தல் மிளகாயையும் சோம்பு,சீரகத்துடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு வெங்காயம் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறத்துக்கு வந்தபின் தங்காளியை துண்டங்களாக்கி போட்டு வதக்கவும். 
இறாலையும் மஞ்சள்தூளையும் சேர்த்து பிசறி வாணலியில் போட்டு 5 நிமிடம் வதக்கவும். அப்படியே மறக்காமல் கொஞ்சமா தண்ணி  விட்டு அரைத்து வைத்துள்ள பூண்டு இஞ்சி விழுதையும் தேங்காய், வத்தல் கூட்டணியையும் சேர்த்து நீர் வற்றும் வரை கிளறவும்.
இறாலில் மசால் பிடித்தவுடன் தாளிக்கிற கரண்டியில் சிறிது எண்ணைவிட்டு 5 வத்தல் மிளகாயை வெட்டிபோட்டு கொஞ்சம் கறிவேப்பிலை தூவி தாளிக்கவும், தாளித்தபின் அதனை இறக்கி வைத்துள்ள இறால் வறுவலின் மேல் ஊற்றி சிறிது நேரம் கழித்து பறிமாறவும்.

- ராஜேஷ் பிள்ளை ...

நண்டு குழம்பு.....




தேவையான பொருட்கள்:
நண்டு – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 1/4 கிலோ
தக்காளி- 100
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
பச்ச மிளகாய் – 2
மஞ்சள்த்தூள் – 1/2 ஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் – 3ஸ்பூன்
தனியாத்தூள் – 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் -1/2ஸ்பூன்
பட்டை -1
கிராம்பு -1
ஏலக்காய் – 1
தயிர் – 1/2கப்
கறிவேப்பிலை
அரைத்த தேங்காய் விழுது – 3ஸ்பூன் அல்லது தேங்காய் பால் -1/2 கப்
உப்பு – தேவைக்கு
தேங்காய் எண்ணெய் – தேவைக்கு
முதலில் நண்டை சுத்தமாக அலசி வைக்கவும். அதில் மிளாய்த்தூள்,மஞ்சள்த்தூள்,தனியாத்தூள், சீரகத்தூள்,பெருஞ்சிரகத்தூள், சிறிது தயிர், சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு போட்டு விரவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
காடாயில் நன்றாக எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கிராம்பு,பட்டை,ஏலக்காய் போட்டு தாளிக்கவும் பிறகு வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும் அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட், பச்சமிளகாய், கறிவேப்பிலை, தக்களி சேர்த்து நன்றாக வதக்கவும்
பிறகு விரவி வைத்த நண்டு கலவையினை சேர்த்து வதக்கவும். அதில் அரைத்த தேங்காய் விழுதினை சிறிது தண்ணீர் சேர்த்து இதில் சேர்க்கவும். தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும். விருப்பபட்டால் மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
 -   ராஜேஷ் பிள்ளை ....

இறால் வறுவல்....



தேவையான பொருட்கள்:

500 கிராம் இறால்
250 கிராம் ‌சி‌ன்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) 
தே‌க்கர‌ண்டி இ‌ஞ்‌சி, பூண்டு ‌விழுது 
250 கிராம் தக்காளி (பொடியாக நறுக்கியது) 
அரை தே‌க்கர‌ண்டி சோம்பு
கா‌ல் தே‌க்க‌ரண்டி மஞ்சள் தூள்
தே‌க்கர‌ண்டி மிளகாய் பொடி
100 கிராம் எண்ணெய்
தேவைகேற்ப உப்பு
க‌றிவே‌ப்‌பிலை, கொ‌த்தும‌ல்‌லி நறு‌க்‌கியது.

செய்முறை: 

இறாலை தோ‌ல் ‌நீ‌க்‌கி கழு‌வி வை‌க்கவு‌ம். 
கடா‌யை அடுப்பில் வை‌த்து எண்ணெயை ஊற்றி, அதில் சோம்பு, கறிவேப்பிலை போ‌ட்டு தா‌ளி‌த்து இ‌‌ஞ்‌சி, பூ‌ண்டு ‌விழுது சே‌ர்‌த்து ந‌ன்கு வத‌க்கவு‌ம். ‌
பி‌ன்பு வெங்காயம் போட்டு வதங்கியபின், சுத்தம் செய்யப்பட்ட இறாலையும், உப்பு, மஞ்சள் பொடியையும் போட்டு நன்கு கிளறவும். 
கிளறியபின், தக்காளி, மிளகாய்த்தூளை போட்டு, நன்கு கிளறி மூடி வைக்கவும். நன்கு வறுபட்டப்பின் இறக்கி பரிமாறவும்.

 - ராஜேஷ் பிள்ளை .

நண்டு வறுவல் ......



தேவையான பொருட்கள் 

நண்டு - 4
பூண்டு - முழுதாக 1
கசகசா - அரை தே‌க்கர‌ண்டி
மிளகு - 4 தே‌க்கர‌ண்டி
தேவைக்கேற்ப உப்பு
தேங்காய் - பா‌தி மூடி
சி‌ன்ன வெங்காயம் - 5
ப மிளகாய் அ‌ல்லது கா மிளகாய் - 5
சோம்பு, ‌சீரக‌ம் - 2 தே‌க்கர‌ண்டி
எண்ணெய் - ஒரு க‌ப்
ம‌‌ஞ்ச‌ள் தூ‌ள் - கா‌ல் தே‌க்கர‌ண்டி 

செய்முறை 

ஒரு வாணலியில் சிறிது அளவு எண்ணெய் ஊற்றி துருவிய தேங்காய், கசகசா, சீரகம், சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

வறுத்த மசாலாவுடன் பூண்டு, மஞ்சள் சேர்த்து அறைத்து வைத்துக்கொள்ளவும்.

வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

அதில் சுத்தம் செய்த நண்டுகளை சேர்த்து, அவை நிறம் மாறும் வரை வதக்கவும்.

அறைத்த மசாலாவை இத்துடன் சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.

நண்டு வறுவல் தயா‌ர்.

-ராஜேஷ்  பிள்ளை 

Sunday, July 15, 2012

மயக்கும் மாலை பொழுது.....



பொன் மாலை பொழுது !
நிலவுமகள் ! கண்விழிக்கும் நேரம் !
உள்ளகிடங்கில் அடங்கி கிடந்த !
உன் காதல் நினைவுகள் !
அலை போல் பொங்கி எழுகிறது !
கடற்கரையாக ! 
முட்டி மோத அனுமதி தருவாயா ?
இல்லை !
என் எண்ண !
அலைகளில் கால் நனையாமல்  !
ஏமாற்றம் தருவாயோ ??

  - கல்லறை  காதலன்  ராஜேஷ் ..........

மந்திர புன்னகை............



நான் மயங்குகிறேன் !உந்தன் மந்திர புன்னகையில் !
நெருங்கினாலோ ! மாயமாகிறாய் !
கண்ணீரைத் துடைத்து விட்டு !
கவிதைகளில் களைபாறுகிறேன் !
என்றேனும் !
என்னை நேசிப்பாய் என்ற நம்பிக்கையில் .................

 - கல்லறை  காதலன்  ராஜேஷ் 

வாழ்கை ! விநோதமானது .......



வாழ்கை ! விநோதமானது .......
சில நேரங்களில் ! வாழ்வு சிலிர்பகவும் !
பல  நேரங்களில்  சிரிப்பாகவும் !
இங்கே வாழ்பவன் வீழ்கிறான் !
வீழ்ந்தவன்  வாழ்கிறான் !
வாழ்கை ! விநோதமானது !
வாழ்வியலை !
புரிந்தவன் துறவி ஆகிறான் !
புரியாதவன்  என்னை போல் முட்டாள் ஆகிறான் !
வெறுப்புக்கு உரியவை !
இங்கு  விருப்பு ஆகிறது !
வாழ்ந்து பார் ! நிறுத்தாதே உன் உந்துசக்தியை!!!!!!!!!!
நிறுத்தினால் வீழ்ந்து விடுவாய் !!!
பின்பு மரணம் கூட உன்னை சீண்டாது .....................

#நான் தேடும் தேவதைகள் #


            

           அதிஷ்ட தேவதை  என்னை மறந்தது ஏனோ ?
           வெற்றி தேவதை என்னை விட்டு விலகியது ஏனோ ?
             வாழ்க்கை தேவதை என்னை மறந்தது ஏனோ ?
            காதல் தேவதை என்னை வெறுத்தது ஏனோ ?
            மரண தேவதையும் என்னை மணம் செய்ய மறுப்பதும் ஏனோ ?

                    -- கல்லறை காதலன் ராஜேஷ் ......


Saturday, July 14, 2012

அசாரி கோஸ்ட் (மட்டன்)...



தேவையான பொருட்கள் :
மட்டன் (1/2 இஞ்ச் எலும்புடன் கூடிய கறி) - 800 கிராம்
வெங்காயம் - 4
தக்காளி - 4
வரமிளகாய் - 8
கிராம்பு - 5
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 2 டீஸ்பூன்
எலுமிச்சைப்பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு எண்ணெய் - 7 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை :
1. முதலில் மட்டனை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளியை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. பிறகு வரமிளகாய், கடுகு, வெந்தயம், சீரகம், பெருஞ்சீரகம், கிராம்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, பின் அவற்றை குளிர வைத்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
3. பின் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு எண்ணெயை ஊற்றி, வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும். பின் தக்காளி, இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
4. பிறகு அதில் அரைத்து வைத்துள்ள அந்த பொடியை போட்டு சிறிது நேரம் நன்கு கிளரவும்.
5. அடுத்து அதில் கழுவிய மட்டனை சேர்த்து நன்கு பிரட்டவும். பின் அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளரவும். அதில் ஊற்றிய எண்ணெயும், மசாலாவும் தனியாக பிரியும் வரை பிரட்ட வேண்டும்.
6. பின் அதில் இரண்டு கப் தண்ணீரை ஊற்றி, மூடி போட்டு மூடிவிட்டு அரைத் தீயில் வைத்து மட்டன் வேகும் வரை வேக விடவும்.
7. மட்டன் வெந்ததும், அதில் எலுமிச்சைப்பழச்சாற்றை விட்டு கிளரி இறக்கி விடவும்.
8. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லியை அதன் மேல் தூவி பரிமாறலாம்.
இதோ சுவையான, காரசாரமான அசாரி கோஸ்ட் ரெடி!!!
நன்றி - இணையம் 

சிக்கன் மொகலாய்...



தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
தயிர் - 1/2 கப்
தேங்காய் - 1/4 மூடி
பட்டை - 2
லவங்கம் - 2
முந்தரி - 8
கசகசா - 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
ஃப்ரஷ் கிரீம் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பின் தேங்காயை துருவிக் கொள்ளவும்
பிறகு சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும்.
பின் மிக்ஸியில் துருவிய தேங்காய், கசகசா, முந்திரியை ஒன்றாக போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய வைத்து பட்டை, லவங்கம் போட்டுத் தாளிக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் இஞ்சிபூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் அதில் தனியாத்தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, பிறகு கழுவிய சிக்கனைப் போட்டு தண்ணீர் விட்டு நன்கு வேக வைக்கவும்.
சிக்கனானது நன்கு வெந்ததும், அதில் அரைத்த மசாலாவை சேர்த்து உப்பை சரிபார்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு அதில் ஃப்ரஸ் கிரீம் சேர்த்து கிளறி இறக்கவும்.
இப்போது சுவையான சிக்கன் மொகலாய் ரெடி!!! இதனை சாப்பாடு, சப்பாத்தி போன்றவற்றோடு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
நன்றி - இணையம் 

உருளைக்கிழங்கு முட்டை கிரேவி...




தேவையான பொருட்கள் :
முட்டை - 4
உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - 1
தக்காளி - 1
பட்டை - 2
கிராம்பு - 4
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் முட்டையை வேக வைத்துக் கொள்ளவும். பின் வேக வைத்த ஒவ்வொரு முட்டையையும் இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
பிறகு உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து, அதன் தோலை உரித்து விட்டு, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து தக்காளி மற்றும் வெங்காயத்தையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் மிக்ஸியில் பட்டை, கிராம்பு மற்றும் சோம்பை போட்டு, நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள் மற்றும் அரைத்த கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அதில் உருளைக்கிழங்கை போட்டு, 1/2 கப் தண்ணீரை விட்டு, சிறிது உப்பு சேர்த்து கிரேவி போல் கிளரவும்.
மசாலாவானது நன்கு கொதித்ததும், அதில் முட்டையை போட்டு, 2 நிமிடம் பிரட்டவும். ஏனெனில் அப்போது தான் மசாலாவானது முட்டையுடன் சேரும்.
பிறகு அதனை இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறலாம். இப்போது சுவையான உருளைக்கிழங்கு முட்டை கிரேவி ரெடி!!!
-நன்றி - இணையம் 

மலேசியன் வெண்ணெய் இறால்...



தேவையான பொருட்கள் :
இறால் - 10
வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
கிராம்பு - 3
பூண்டு - சிறிது
சர்க்கரை - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
சைனீஸ் வைன் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் இறாலின் தலையை வெட்டி நீக்கிவிடவும். பின் அந்த இறாலை சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும். பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், அந்த எண்ணெயில் இறாலைப் போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து அதில் துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும். பின் கிராம்பை தனியாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
பிறகு மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி, உருகியதும் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, கிராம்புப் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு அத்துடன் வறுத்த இறால், சர்க்கரை, சோயா சாஸ், சைனீஸ் வைன் மற்றும் வறுத்த தேங்காயை சேர்த்து 1-2 நிமிடம் நன்கு வதக்கி, அந்த சாறானது இறாலில் இறங்கும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கவும்.
நன்றி - இணையம் 

சிக்கன் நெய் ரோஸ்ட்..



சிக்கன் நெய் ரோஸ்ட்..

தேவையான பொருட்கள் :
சிக்கன் - 750 கிராம்
தயிர் - 1/2 கப்
மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சைசாறு - 3 டீஸ்பூன்
நீள வரமிளகாய் - 75 கிராம்
சின்ன வரமிளகாய் - 25 கிராம்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
புளி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை :
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். பிறகு அந்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதோடு தயிர், மிளகுத்தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு பிரட்டி, ஃப்ரிட்ஜில் 6-8 மணிநேரம் ஊற வைக்கவும்.
பிறகு ஒரு வாணலியில் நீள வரமிளகாய், சின்ன வரமிளகாய், வெந்தயம், சீரகம், பூண்டு பேஸ்ட், புளி ஆகியவற்றை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதனை சூடு போகும் வரை காய வைத்து, மிக்ஸியில் அவை அனைத்தையும் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சிக்கனை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி உருகியதும், அரைத்த அந்த பேஸ்டை போட்டு நன்கு வதக்கவும். பின் அதில் வறுத்த சிக்கனை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை சிம்மில் வைத்து, 3 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.
பின்னர் அதனை இறக்கி அதில் கொத்தமல்லியை நறுக்கி மேலே தூவி இறக்கவும். இப்போது சுவையான சிக்கன் நெய் ரோஸ்ட் ரெடி!!!
நன்றி  - இணையம் 

***காணமல் போனவள் ***





காணமல் போகிறாய்  நீ !
சொல்லிக் கொள்ளாமலே...
நானும் தேட முயற்சிப்பதே இல்லை...
பிரபஞ்சப் பெருவெளியில்
உன்னைத் தொலைந்து போகவிடுகிறேன்...
மிகச் சரியாய் வந்து விடுவாய்...
உன் மடியில் முகம் புதைத்து நான் 
அழக் காத்திருக்கும் தருணங்களில்...
நான் ஆசுவாசம் அடைந்ததும்
என் அமர்களம் தாங்காமல்
மீண்டும்தொலைவாய்..
என் கவலைக்காலங்களை
எப்படி சரியாக கண்டுகொள்கிறாய்
கண்ணீர் கரிக்கும் கவிதையே!!!

***பொல்லாத காதல் ***



இப்போதெல்லாம்
பகலில் கூட
என் கல்லறையை
விட்டு
வெளியே வருகிறேன்...
உன்னைப்
பார்ப்பதற்காக..
பைத்தியக்கார
மனிதர்களே
காதலுக்காக
தற்கொலை
செய்துகொள்ளாதீர்கள்....
இங்கேயும்
அதே தொல்லை.....
சாமத்தில் ஊளையிட
மட்டுமே தெரிந்த
என்னை...
கவிதை எழுதவும்
வைத்துவிட்டது!
காதல்!!!!!!!!!!
--- கல்லறை காதலன்..........

***நினைவுகள் ***



          உனக்கே உனக்கான ! 

                  நானும்

         எனக்கே எனக்கான !!


                    நீயும்


              நம் நினைவுகளில் மட்டுமே !!!


                 வாழ்கிறோம் .......................



             - கல்லறை  காதலன் .......