Monday, January 30, 2017

கத்திரிக்காய் சப்ஜி





தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் -1/4 கிலோ பெரியது

வெங்காயம் -1

இஞ்சி பூண்டு விழுது-1 ஸ்பூன்

மிளகாய் பொடி -1ஸ்பூன்

தனியாப் பொடி -1ஸ்பூன்

மஞ்சள்பொடி-1/4 ஸ்பூன்

உப்பு, பிரிஞ்சி இலை-தேவையான அளவு


செய்முறை

கத்தரிக்காயைச் சுட்டுத் தோலுரித்துப் பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை போட்டுத் தாளித்து வெங்காயத்தைப் பொன்னிறமாக வணக்கவும்.

இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்.

உப்பும் சிறிதளவு தண்ணீரும் சேர்த்து மூடி வைக்கவும்.

கிரேவியாக ஆனபின் பிசைந்த கத்தரிக்காயைச் சேர்க்கவும்.

Wednesday, January 11, 2017

சிக்கன் வறுவல்

Image result for சிக்கன் வறுவல்


தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/2  கிலோ
பெரிய வெங்காயம் – 1
சோம்பு  – 1/2  தேக்கரண்டி
குறுமிளகு – 1 /2  தேக்கரண்டி
கருவேப்பில்லை
மல்லிதழை
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் –  1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
மிளகுதூள்  – 1/2  தேக்கரண்டி

செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, கருவேப்பிலை, வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் முக்கால் பாகம் வெந்தவுடன் குறுமிளகு, வரமிளகாய் போட்டு பொரிய விடவும்.
பின் சிக்கன்,மசாலா தூள்கள், உப்பு போட்டு சேர்த்து, தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
வறுவலாக வேண்டுமெனில் தண்ணீர் வற்றும் வரை நன்றாக கிளற வேண்டும்.
குழம்பாக வேண்டுமெனில் தண்ணீருடன் இறக்கலாம்.

செட்டிநாடு வத்தல் குழம்பு


Image result for செட்டிநாடு வத்தல் குழம்பு

தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 200 கிராம்
வெள்ளைப்பூண்டு – 100 கிராம்
சுண்டை வத்தல் – 10
தக்காளி – 2
புளி –  எலுமிச்சையளவு
குழம்பு மிளகாய்த்தூள் – 4  தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
தாளிக்க
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு  – 1 /2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 /2 தேக்கரண்டி
சீரகம்– 1 /4 தேக்கரண்டி
மிளகு – 1 /4 தேக்கரண்டி
வெந்தயம் – 1 /4 தேக்கரண்டி
பெருங்காயம்  – சிறிது
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை
வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளமாக அரிந்து கொள்ளவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின்னர் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும்.
இதனுடன் குழம்பு மிளகாய்த்தூள், புளிக்கரைசல், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
கடைசியாக சிறிது எண்ணெயில் சுண்டைக்காய் வற்றலை பொறித்து குழம்பில் கொட்டவும்.

Monday, January 2, 2017

செட்டிநாடு மட்டன் குழம்பு


Related image


தேவையான பொருட்கள்: 
மட்டன் - 1/2 கிலோ 
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் 
சின்ன வெங்காயம் - 20 
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) 
கறிவேப்பிலை - சிறிது 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் 
தக்காளி - 3 (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
தண்ணீர் - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிது 

மசாலா பொருட்கள்... 
பட்டை - 1 இன்ச் 
ஏலக்காய் - 2 
கிராம்பு - 3 
சோம்பு - 1 டீஸ்பூன் 

செட்டிநாடு மசாலா பொடிக்கு... 
வரமிளகாய் - 6-8 
மல்லி - 4 டேபிள் ஸ்பூன் 
பட்டை - 5 செ.மீ 
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன் 
மிளகு - 1 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
ஏலக்காய் - 5 
அன்னாசிப்பூ - 1 

தேங்காய் மசாலாவிற்கு... 
தேங்காய் - 1 கப் 
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன் 

செய்முறை: 

முதலில் மிக்ஸியில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 'செட்டிநாடு மசாலா பொடிக்கு' கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, பொன்னிறமாக வறுத்து இறக்கி, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமா வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து அதில் தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கி, செட்டிநாடு மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி, கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5 விசில் விட்டு, குறைவான தீயில் 15-20 நிமிடம் குக்கரை அடுப்பிலேயே வைத்து, பின் இறக்கிக் கொள்ள வேண்டும். பிறகு குக்கரைத் திறந்து, அதில் தேங்காய் மசாலாவை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 15-20 நிமிடம் எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கினால், செட்டிநாடு மட்டன் குழம்பு ரெடி!!!

டெல்லி நாட்டுக் கோழி குழம்பு

Related image



தேவையான பொருட்கள்:

நாட்டுக் கோழி - 1 கிலோ
 வெங்காயம் - 3 (நறுக்கியது)
 தக்காளி - 3 (நறுக்கியது)
 சிக்கன் மசாலா பவுடர் - 50 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது

அரைப்பதற்கு...
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2 செ.மீ
இஞ்சி - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
பூண்டு - 10 பற்கள்

செய்முறை:

 முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, அதில் பாதியை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, மீண்டும் குக்கரில் போட்டு கிளற வேண்டும். பிறகு அதில் உப்பு, சிக்கன் மசாலா சேர்த்து நன்கு வதக்கி, சிக்கனை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5 விசில் விட்டு, தீயை குறைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால், சிம்பிளான நாட்டுக் கோழி குழம்பு ரெடி...

இஞ்சி குழம்பு

Related image

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - 2 ஸ்பூன் 
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
சாம்பார் பொடி - 2 ஸ்பூன் 
பெரிய வெங்காயம் - 3
புளி - சிறிதளவு 
பூண்டு - 20 பல்
இஞ்சி - 25 கிராம் 
வறுத்து பொடித்த வெந்தயம் - 1 ஸ்பூன் 
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு 
பெருங்காயம் - சிறிதளவு 
கறிவேப்பிலை – சிறிதளவு 
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு 
புளி - சிறிதளவு 

செய்முறை :

* முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். 
* புளியை தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொள்ளவும்.
* கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். 
* அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். 
* அடுத்து 1 டம்ளர் தண்ணீர், புளி கரைத்த தண்ணீர், சாம்பார் பொடி, பெருங்காய தூள், வறுத்த வெந்தய பொடி, உப்பு எல்லாம் சேர்க்கவும்.
* நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். 

முருங்கைக்கீரை உருளைக்கிழங்கு சால்னா

Image result for முருங்கைக்கீரை உருளைக்கிழங்கு சால்னா


தேவையான பொருட்கள் :

முருங்கைக்கீரை - 2
உருளைக்கிழங்கு - 1
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
உப்பு - தேவைக்கு,

அரைத்துக் கொள்ள :

தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1

செய்முறை :

* வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மிக்சியில் தேங்காய் துருவல், ப.மிளகாய் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

* முருங்கைக்கீரையை ஆய்ந்து அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.

* குக்கரில் எண்ணெய் விட்டு சூடானவுடன் உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து சிவந்து வரும் பொழுது, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் வதங்கி வரும் போது சீரகத்தூளை சேர்க்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.

* அடுத்து அதில் உருளைக்கிழங்கு சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 2 விசில் போட்டு அடுப்பை அணைக்கவும்.

* விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அரைத்த தேங்காய் விழுது மற்றும் தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.

* நன்கு கொதிக்க விடவும், தேங்காய் வாடை போனவுடன் அடுப்பை அணைக்கவும்.

பூண்டுக் குழம்பு

Image result for பூண்டுக் குழம்பு


தேவையான பொருட்கள் :

பூண்டு  - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கேற்ப
சாம்பார்த்தூள் - 2 ஸ்பூன்

தாளிப்பதற்கு:

கடுகு - ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
எண்ணெய் - ஒரு குழிக் கரண்டி (50 மில்லி)

செய்முறை :

* வெங்காயம், பூண்டை தோல் உரித்து வைக்கவும்.
* புளி, உப்பை தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொண்டு, சாம்பார் பொடி சேர்த்து கலக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் சற்று வதங்கியதும் கரைத்துள்ள புளித்தண்ணீரை அதில் ஊற்றி கொதித்துக் கெட்டியானதும் (எண்ணெய் மேலே மிதந்து வரும் தருணத்தில்) குழம்பை இறக்கி விடவும்.

கறிவேப்பிலை மிளகு குழம்பு

Image result for கறிவேப்பிலை மிளகு குழம்பு


தேவையான பொருட்கள் :

உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
புளி - 40 கிராம்
பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - அரை கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* புளியை கரைத்து கொள்ளவும்.

* வெறும் வாணலியில் உளுந்து, காய்ந்த மிளகாய், மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து ஆற வைத்து பொடித்துக்கொள்ளுங்கள்.

* வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்துத் தாளித்த, பின்னர் புளிக்கரைசலைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.

* புளிக்கரைசல் நன்றாகக் கொதித்ததும், அரைத்த பொடியை அதனுடன் சேர்த்துக் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

* தேவையான அளவு உப்பு சேர்த்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கிவைத்துப் பரிமாறுங்கள்.

காய்கறி கதம்ப சாதம் அல்லது கூட்டாஞ் சோறு

Image result for காய்கறி கதம்ப சாதம்

தேவையான பொருட்கள் :

பொன்னி புழுங்கல் அரிசி - 1 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
துவரம் பருப்பு - 1 கப்
தண்ணீர் - 5 கப்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 6 பல்
புளி - எலுமிச்சையளவு
எண்ணெய் - 4 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 4 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
முருங்கைக் கீரை - 1 கப்
அரைக் கீரை - 1 கப்
முருங்கைக்காய் - 1
அவரைக்காய் - 10
கொத்தவரங்காய் - 10
கத்தரிக்காய் - 2
உப்பு - தேவையான அளவு

தாளிக்க :

கடுகு,
உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை

வறுத்து அரைக்க :

தேங்காய் துருவல் - கால் கப்
வத்தல் மிளகாய் - 4
கடலைபருப்பு - 2 ஸ்பூன்
தனியா - 4 ஸ்பூன்

செய்முறை :

* அரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பை நன்றாக கழுவி வைக்கவும்.
* முருங்கைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய் முதலியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டை கரகரப்பாக அரைக்கவும்.
* வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கடாயில் போட்டு நன்றாக வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
* சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
* புளியை கரைத்துக் கொள்ளவும்.
* குக்கரில் கழுவிய அரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, முருங்கைக் கீரை, அரைக் கீரை, முருங்கைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், உப்பு, மஞ்சள் பொடி போட்டு 5 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
* பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் மிளகாய் பொடி, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
* கடைசியாக வறுத்து அரைத்த பொடியை போட்டு 2 நிமிடம் கிளறி, குக்கரில் வேக வைத்துள்ள சாதத்தில் ஊற்றி நன்றாகக் கிளறவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் .ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சாதத்தில் ஊற்றி கிளறி பரிமாறவும்...