Wednesday, January 17, 2018

காரைக்குடி நண்டு வறுவல்






















தேவையானவை

 நண்டு – 5
 சின்ன வெங்காயம் – 50 கிராம்
 சிகப்பு மிளகாய் – 10
மல்லி  – 2 தேக்கரண்டி
 நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
 சீரகம் – 1 தேக்கரண்டி
 பெரிய வெங்காயம் – 2
 பூண்டு – 5 பல்
 இஞ்சி – 1 அங்குலத் துண்டு
 தக்காளி – 1
 உப்பு – தேவையான அளவு

செய்முறை :


முதலில் நடுத்தரமான அளவு நண்டுகள் 5 எடுத்து ஓடு நீக்கி, சுத்தம் செய்து கொள்ளவும்.

பின் இஞ்சி, பூண்டு, சிகப்பு மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம், மல்லி  ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.

இதனுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், நண்டுகளைப் போடவும் பிறகு நண்டுகள் நன்கு வெந்து, வாசனை வந்த பின் இறக்கவும்.

காரைக்குடி கோழி வறுவல்









தேவையான பொருட்கள்:

சிக்கன் 1 கிலோ
சின்ன வெங்காயம் 20 ( அம்மிகல்லில் நசுக்கியது)
தக்காளி 1 ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 3 மேஜைக்கரண்டி
வரமிளகாய் 12
பூண்டு பற்கள் 10 ( அம்மியில் நசுக்கியது)
இஞ்சி அரை இன்ச் ( அம்மி கல்லில் நசுக்கியது)
மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
கறிவேப்பில்ல 2 கொத்து
கொத்தமல்லி இலைகள் 2 மேஜைக்கரண்டி ( பொடியாக நறுக்கியது)
சோம்பு 1/2 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி ( அம்மிகல்லில் நசுக்கியது)
எலுமிச்சை பழச்சாறு 3 மேஜைக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
மரசெக்கு கடலெண்ணய் 4 மேஜைக்கரண்டி

செய்முறை:

1. முதலில் சிக்கனை நன்றாக சுத்தமாக கழுவி கொள்ளவும். பிறகு அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் , மஞ்சள்தூள் , எலுமிச்சை பழச்சாறு , உப்புத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

2. சட்டியில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சோம்பை போட்டு நன்றாக வதக்கவும். அதில் பொடியாக கிள்ளிய வரமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும். கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

3. பிறகு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் அம்மிகல்லில் நசுக்கிய பூண்டையும் , இஞ்சியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

4. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

5. இப்பொழுது ஊறவைத்தள்ள சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.

6. அதில் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க 1 கப் தண்ணீர் சேர்த்து
நன்றாக சிறுதீயில் வேக வைக்கவும்.

7. சிக்கன் நன்றாக வெந்ததும் அதில் கொத்தமல்லி இலைகளை தூவி நல்ல ட்ரை யாகும் வரை வதக்கி இறக்கவும் 

மட்டன் பிரட்டல்























தேவையான பொருட்கள்

வெள்ளாட்டு கறி 500 கிராம்
சின்ன வெங்காயம் 1 கப் ( விழுதாக அம்மிகல்லில் நசுக்கியது)
இஞ்சி விழுது 1 மேஜைகரண்டி
பூண்டு 1/4 கப் ( விழுதாக அம்மிகல்லில் நசுக்கியது)
பச்சை மிளகாய் 16 ( அம்மிகல்லில் மையாக நசுக்கியது)
கல் உப்பு தேவையான அளவு
கறிவேப்பில்ல கொஞ்சமாக
பட்டை 2 இன்ச்
கிராம்பு 6
சோம்பு 1/2 தேக்கரண்டி
குருமிளகு 1 மேஜைக்கரண்டி ( விழுதாக அம்மிகல்லில் நசுக்கியது)
கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி
மரசெக்கு கடலெண்ணய் 4 மேஜைக்கரண்டி

செய்முறை


1. இப்பொழுது அதில் 2 மேஜைக்கரண்டி மரசெக்கு கடலெண்ணய் விட்டு அதில் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும் அதில் சோம்பை போட்டு பொரிய ஆரம்பித்ததும் பட்டை, கிராம்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

2. பிறகு அதில் கறிவேப்பில்ல சேர்த்து  நன்றாக வதக்க வேண்டும் , அதில் ஆட்டிறைச்சி கொழுப்பை சேர்த்து  நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.

4. இப்பொழுது அதில் இஞ்சி விழுதை சேர்த்து  நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

5. பிறகு அதில் அம்மிகல்லில் நசுக்கிய பூண்டையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

6. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பில்ல சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

7. அதன் பிறகு அதில் அம்மி கல்லில் மையமாக விழுதாக அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து  நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.

8. இப்பொழுது அதில் மையாக அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து  நன்றாக வதக்க வேண்டும்.

9.அதில் நன்றாக சுத்தமாக கழுவி வைத்துள்ள ஆட்டிறைச்சியை சேர்த்து   அதில் தேவையான அளவிலான கல் உப்பை சேர்த்து  நன்றாக வதக்க வேண்டும்.

10. பிறகு அதில் 2 கப் தண்ணீர்சேர்த்து  நன்றாக மூடியை மூடி கறி வேகும் வரை அடுப்பை சிறுதீயிலே வைத்து வேகவைத்து கொள்ள வேண்டும். கவனம் தேவை கறி அடிபிடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தண்ணீர் வற்றினால் மறுபடியும் சேர்த்து கொள்ள வேண்டும்.

11. கறி நன்றாக வெந்த உடன் அதில் அரைத்து வைத்துள்ள குரு மிளகு சேர்த்து   நன்றாக சிறுதீயிலேயே கொதிக்க வைக்க வேண்டும் .

12. அதில் அவ்வபோது சிறிய சிறிய மரசெக்கு கடலெண்ணய் விட்டு  நன்றாக சிறு தீயிலேயே வதக்க வேண்டும் , பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்

கோத்தகிரி மட்டன் பிரியாணி
























தேவையான பொருட்கள்

சீரகசம்பா அரிசி 5 கப்
வெள்ளாடு ஆட்டிறைச்சி 1 கிலோ
மட்டன் கொழுப்பு 1/4 கிலோ
பெரிய வெங்காயம் 3 ( பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் 26 ( அம்மிகல்லில் விழுதாக மையாக நசுக்கியது)
தக்காளி 3 ( விழுதாக அரைத்தது)
இஞ்சி-பூண்டு விழுது 1/2 கப்
பச்சை மிளகாய் 7 ( அம்மிகல்லில் விழுதாக நசுக்கியது)
பட்டை 1 இன்ச்
கிராம்பு 4
ஏலக்காய் 5
தயிர் 1 கப்
கொத்துமல்லி இலைகள் 1 கப்
புதினா இலைகள் 1 கப்
தண்ணீர் 8 கப்
வரமிளகாய் தூள் 3 மேஜைக்கரண்டி
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
மரசெக்கு கடலெண்ணய் 1/2 கப்
பசு வெண்ணை 1/4 கப்

செய்முறை

1. இப்பொழுது பிரஷர் குக்கரில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் பசு வெண்ணையை சேர்த்து நன்றாக காய்ந்ததும் அதில் பட்டை , கிராம்பு , ஏலக்காய் , பிரிஞ்சி இலை சேர்த்து  நன்றாக வதக்க வேண்டும்.

2. அதில் மட்டன் கொழுப்பை சேர்த்து  நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.

3. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து அதனுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து அதை நன்றாக பொன்னிறமாக வதக்க வேண்டும்.

4. அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

5. அதில் தக்காளி அரைத்த விழுதையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

6. இப்பொழுது அதில் தயிர் மற்றும் பச்சை மிளகாய் விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

7. அதில் வெள்ளாட்டு கறியை சேர்த்து அதனுடன் தேவையான அளவிலான உப்புத்தூள் மற்றும் மசாலா பொடிகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

8. அதில் தண்ணீர்சேர்த்து  நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

9. அதில் ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து  அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகள் , பொடியாக நறுக்கிய புதினா இலைகள் சேர்த்து பிரஷர் குக்கரின் மூடியை மூடி நன்றாக குறைந்தபட்சமாக 7 விசில் வரை விட்டு. அதன் பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

மதுரை மீன் குழம்பு






















தேவையான பொருட்கள்

வஞ்சிரம் மீன் துண்டுகள் 12
சின்ன வெங்காயம் 1 கப் ( பொடியாக நறுக்கியது )
தக்காளி 1/2 கப் ( பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் 3 ( பொடியாக நறுக்கியது )
பூண்டு பற்கள் 12 ( அம்மியில் நசுக்கியது )
கடுகு 3/4 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
வெந்தயம் 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி

மசாலா அரைக்க

புளி 1 எலுமிச்சை அளவு
தேங்காய் பால் 2 கப்
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் 2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1 1/2 தேக்கரண்டி
கல் உப்பு தேவையான அளவு

செய்முறை

1. மீனை சுத்தம் செய்து கழுவி வைக்கவும். மஞ்சள்தூள் மற்றும் உப்புத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து மீனை சுத்தமாக கழுவி எடுத்து வைக்கவும்.

2. புளியை சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து நன்றாக கரைத்து புளி கரைசலை எடுக்கவும்.

3. சட்டியை  அடுப்புல வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து நன்கு வெடித்ததும், அதில் சீரகம் சேர்த்து நன்கு பொரிந்ததும். அதில் வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

4. இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் அம்மியில் நசுக்கிய வைத்துள்ள பூண்டையும் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

5. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து  நன்றாக வதக்க வேண்டும். அது நன்றாக கூழ் போல் ஆனதும்.

6. சிறிய பாத்திரத்தை எடுத்து அதில் தேங்காய் பால் மற்றும் புளித் தண்ணீர் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள்தூள், மிளகு தூள், மற்றும் தேவையான அளவு கல் உப்பை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

7. இப்பொழுது இந்த கரைத்த கரைசலை  மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இந்த கலவையை மண்சட்டியில் ஊற்ற வேண்டும். இந்த கலவை நன்றாக கொதித்து பச்சை வாசனை போனதும் அதில் மீன் துண்டங்களை போட்டு கிளறாமல் சிறு தீயில் 5 நிமிடங்கள் கழித்து இறக்கி வைக்கவும்.