Saturday, July 13, 2013

மலபார் ஸ்டைல்... பிஷ் ப்ரை!!!



தேவையான பொருட்கள்: 

மீன் - 8 (ஏதேனும் ஒரு மீன்) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். பின் கழுவிய மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பை சேர்த்து பிரட்டி, தனியாக வைத்துக் கொள்ளவும். பின் மற்றொரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மீன் நன்கு ஊறியதும், அந்த மீன் துண்டுகளில் கலந்து வைத்து கலவையை தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், மீன் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். இப்போது சுவையான மலபார் ஸ்டைல் மீன் ப்ரை ரெடி!!!

சிக்கன் மிளகு வறுவல்



தேவையான பொருட்கள்: 

எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ 
மிளகு - 1 டீஸ்பூன் 
மிளகு தூள் - 4 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
வரமிளகாய் - 3 
கறிவேப்பிலை - சிறிது 
வெங்காயம் - 2 ( 1 அரைத்தது, 
மற்றொன்று நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் 
வினிகர் - 2 டீஸ்பூன் 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் சிக்கனை நன்க கழுவி, நீரை நன்கு வடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த சிக்கனில், வினிகர், அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் 1 டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகு, வரமிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மீதமுள்ள மிளகுத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு, ஒரு 5 நிமிடம் கிளறி விட வேண்டும். பின்பு அதனை ஒரு தட்டை வைத்து மூடி, சிக்கன் வேகும் வரை மூடி அவ்வப்போது கிளறியும் விட வேண்டும். சிக்கனானது மென்மையானதும், அதனை இறக்கி, கொத்தமல்லி தூவி மூடி வைக்க வேண்டும். இப்போது அருமையான சிக்கன் மிளகு வறுவல் ரெடி!!!


சிக்கன் கேஃப்ரியல்



தேவையான பொருட்கள்: 
சிக்கன் - 1 கிலோ (8 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்) 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
மல்லி - 1 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
கிராம்பு - 6 
பச்சை ஏலக்காய் - 8 
மிளகு - 8 
பட்டை - 1 இன்ச் 
இஞ்சி - 1 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது) 
பூண்டு - 4-6 பல் (பொடியாக நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 6 (பொடியாக நறுக்கியது) 
வினிகர் - 3 டேபிள் ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து விட்டு, கூர்மையான கத்தியால் நன்கு ஆழமாக கீறி விட வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக மொறுமொறுவென வறுத்து, அதனை ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், மல்லி, சீரகம், பச்சை சீரகம், மிளகு மற்றும் பட்டை போட்டு வறுத்து, குளிர வைக்க வேண்டும். பின்னர் மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வறுத்து குளிர வைத்துள்ள பொருட்களை போட்டு, சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை சிக்கன் துண்டுகளை மீது நன்கு தடவி, 2-3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். இறுதியில் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு, தீயை குறைவில் வைத்து, கிரேவி வேண்டுமெனில் சிறிது வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி, 8-10 நிமிடம் மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும். சிக்கனானது வெந்ததும், அதில் வினிகரை ஊற்றி, 2-3 நிமிடம் மீண்டும் வேக வைத்து இறக்க வேண்டும். இப்போது சுவையான சிக்கன் கேஃப்ரியல் ரெடி!!! இதன்மேல் வறுத்து வைத்துள்ள வெங்காயத்தை தூவி, சப்பாத்தி, பூரி அல்லது சாதத்துடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

Friday, July 12, 2013

சேமியா பன்னீர் உப்புமா



தேவையான பொருட்கள்: 

சேமியா - 1 1/2கப் 
சீஸ் - 100 கிராம் (சிறு துண்டுகளாக்கப்பட்டது) 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன் 
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, பின் சேமியாவை போட்டு, உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 2-3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, நீரை வடிகட்டிவிட வேண்டும். பின் உடனே அதனை குளிர்ந்த நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு சீஸ், மஞ்சள் தூள் சேர்த்து 4-5 நிமிடம் கிளறி விட்டு, வேக வைத்துள்ள சேமியாவை போட்டு, வேண்டுமெனில் உப்பு சேர்த்து, 5-6 நிமிடம் கிளறி விட்டு, இறக்க வேண்டும். இறுதியில் அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, நன்கு பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி பரிமாறினால், சூப்பரான சேமியா பன்னீர் உப்புமா ரெடி!!!