Thursday, May 3, 2018

கொல்லம் சிக்கன் குழம்பு





















தேவையான பொருள்கள் -


சிக்கன் - 300 கிராம்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிது

வறுத்து அரைக்க -

மிளகாய் வத்தல் - 2
கொத்தமல்லி - 4 மேஜைக்கரண்டி
பெருஞ் சீரகம் - 1 தேக்கரண்டி
பட்டை - 1 இன்ச் அளவு
கிராம்பு - 2
இஞ்சி - 1 இன்ச் அளவு
பூண்டு - 4 பல்
தேங்காய் - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 7

தாளிக்க -

நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 1
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை -

முதலில் சிக்கனை  சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவிக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். மிதமான தீயில் வைத்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்.
வறுத்தவற்றை ஆறியதும் மிக்ஸ்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.

பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும். சிக்கன் பாதி வெந்ததும் 300 மில்லி தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி குக்கரை மூடி விடவும்.

ஆவி  வந்ததும் வெயிட் போடவும். 4 விசில் வந்ததும் அடுப்பை ஆப் பண்ணி விடவும். . கொத்தமல்லி தழையை சேர்த்து கலக்கி விடவும். 

Wednesday, May 2, 2018

வெண்டைக்காய் புளிக்கறி





















தேவையான பொருள்கள்

வெண்டைக்காய் - கால் கிலோ
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
புளி கரைசல்-  கால் கப்
எண்ணெயை - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு

மசாலாவிற்கு...

தேங்காய் - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 5


செய்முறை

மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் காய்ந்த மிளகாய் எடுத்து மசித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். வெண்டைக்காய் சேர்த்து எண்ணெய்யில் நன்கு வதக்கவும். இப்போது உப்பு, மல்லி தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள் சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வேக விடவும். அரைத்து வைத்த மசாலா கலவை, புளி கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்த பின் இறக்கவும்.

Tuesday, May 1, 2018

செட்டிநாடு பூண்டு குழம்பு



























தேவையான பொருள்கள் -


பூண்டு -1 (15 பற்கள் )
மிளகாய்த்தூள் - 1/4 மேஜைக்கரண்டி
மல்லித்தூள் -  2 மேஜைக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 மேஜைக்கரண்டி
மிளகு தூள் - 1/2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி
புளி - கோலி அளவு
உப்பு - தேவையான அளவு         


அரைக்க -
தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 4


தாளிக்க -
நல்லெண்ணெய் -  3 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 4
வெந்தயம் - 1/2 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


செய்முறை -

புளியை 1 1/2 கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை அரைத்து கொள்ளவும்.
முதலில் அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி ஊற்றி பூண்டை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். தீயை சிம்மில் வைத்து செய்யவும்.               
வதக்கிய பூண்டை தனியாக வைத்து விட்டு அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், வெந்தயம், கறிவேப்பிலை  போட்டு  தாளிக்கவும்.
பின்னர் புளி தண்ணீரை ஊற்றி மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள்,மிளகு தூள், மஞ்சள் தூள், உப்பு, பூண்டு போட்டு 10 நிமிடங்கள் அல்லது பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
பின்னர் அரைத்த விழுதை சேர்த்து 5-10 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.