Friday, March 24, 2017

தக்காளி ரசம்







தேவையான பொருட்கள்
நறுக்கிய தக்காளி - 2
துவரம் பருப்பு - 1/2 கப்
எலுமிச்சை  - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
ரசப் பொடி- 3 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
வெல்லம் - 1 டீஸ்பூன்

செய்முறை

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு, வெல்லம், புளிக்கரைசல்  சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

பின்னர், வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து தண்ணீர்  ஊற்றி கொதிக்க வைக்கவும்.

பிறகு, ரசப் பொடி சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு சிவக்க நிறம் வந்ததும் கொத்தமல்லி இலையைத் தூவி விட்டு பெருங்காயத்தூள் இட்டு அடுப்பை அணைக்கவும்

வாத்துகறி குழம்பு

Image result for வாத்துகறி





தேவையான பொருட்கள்

வாத்துக்கறி  - 1
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 2
தேங்காய் - 1 மூடி
பூண்டு - 10 பல்
இஞ்சி - சிறிதளவு
பட்டை - 1 இஞ்ச்
கிராம்பு - 5
மிளகாய்த்தூள்  - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
உப்பு -சுவைக்கேற்ப
எண்ணெய் - 4 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை -  சிறிதளவு

செய்முறை

முதலில் வாத்தை நன்றாக கழுவி மஞ்சள்தூள் சேர்த்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதை குளிர வைத்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.

பின்னர், துருவிய தேங்காயைப் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

அதே அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

அதில், கழுவி வைத்த வாத்துக்கறியைப் போட்டு வதக்க வேண்டும். சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும். இதனுடன், நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி மென்மையாக வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியபின், மிளகாய்த்தூள், கொத்தமல்லி தூள், அரைத்து வைத்திருக்கிற வெங்காய கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும். குழம்பிற்கு தேவையான உப்பை போட்டு சரிபார்ககவும்.

கறி ஓரளவு வெந்ததும் அரைத்து வைத்த தேங்காய்ப்பால் சேர்க்கவும்.

வாத்துக்கறி தயாரானதும் கொத்தமல்லி இலையைத் தூவி விட்டு பரிமாறலாம்.

முந்திரி சிக்கன் கிரேவி


Image result for முந்திரி சிக்கன் கிரேவி





தேவையான பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்
தயிர் - 1 டீஸ்பூன்
பால் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை -1/2
கொத்தமல்லி இலை -சிறிதளவு
எண்ணெய் -1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

அரைப்பதற்கு:

முந்திரி - 8
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கசாகசா - 1/4 டீஸ்பூன்
இலவங்கப்பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4

செய்முறை

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

முந்திரி, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, கசாகசா சேர்த்து மிக்ஸியில் மைய  அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த மசாலா, சிக்கன் சேர்த்து இஞ்சி, பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு, மிளகாய்த்தூள், தனியா தூள், மஞ்சள் தூள், தயிர், பால் சேர்த்து பிசைந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி,  அதனுள் சிக்கனைப் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிரட்டி விட்டு கடாயை மூடி 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.

சிக்கன் வெந்ததும், அதில் கொத்தமல்லி இலையைத் தூவி விட்டு சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

கோங்குரா சிக்கன் குழம்பு

ஆந்திரா ஸ்பெஷல்: கோங்குரா சிக்கன் குழம்பு




தேவையான பொருட்கள் :

புளிச்சக்கீரை - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வேகவைத்த கோழிக்கறி - 250 கிராம்
வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 3
நெய் -1 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு -1/2 டீஸ்பூன்
கரம் மசாலா -  1/2 டீஸ்பூன்


செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கோழிக்கறியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சூடு தண்ணீரில் இட்டு வேக வைக்கவும்.

* அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும், மஞ்சள்தூள், உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

* பின்னர், புளிச்சக்கீரை சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்.

* அடுத்து அதில் வேகவைத்த சிக்கனை இட்டு மிளகாய்த்தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும்.

* ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வரும் போது இறக்கி பரிமாறவும்.

காஷ்மீரி மட்டன் ரோகன் ஜோஸ்

Image result for மட்டன் ரோகன் ஜோஸ்




தேவையான பொருட்கள்

மட்டன் - 500 கிராம்
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2

தயிர் மசாலாவிற்கு :

கெட்டியான தயிர் - 3/4 கப்
குங்குமப்பூ -சிறிதளவு
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
சோம்பு -   1 டீஸ்பூன்
நசுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு :

எண்ணெய் - 3 டீஸ்பூன்
பிரியாணி இலை -2
இலவங்கப்பட்டை - 1 இன்ச்
கிராம்பு -  5
கருப்பு ஏலக்காய் -2
பச்சை ஏலக்காய் - 5
 சீரகம் -1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் மட்டன் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து மசாலா, கறியுடன் சேர 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

தயிர் மசாலா கலவை தயாரிக்க:

ஒரு கிண்ணத்தில் தயிர், குங்குமப்பூ, மிளகாய்த்தூள், தனியா தூள், சோம்புத்தூள், இஞ்சி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.

இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, கிராம்பு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

பின்னர், மசாலா கலந்து வைத்த மட்டன் கலவையை போட்டு கறியை பொன்னிறமாக வதக்கி விட்டு 5 நிமிடங்கள் கடாயை மூடி போட்டு வேக வைக்கவும்.

பிறகு, மூடியை எடுத்து விட்டு தயிர் கலவையை சேர்த்து நன்கு கிளறி விட்டு 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.

கடாயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு 45 நிமிடங்கள் தண்ணீர் சுண்டி கிரேவி போல் வருமாறு வேக வைக்கவும்.

இறுதியாக கறி வெந்ததும் கரம் மசாலா மற்றும் மணக்கும் கொத்தமல்லி இலையைத் தூவி விட்டு இறக்கவும்.

Monday, March 6, 2017

மட்டன் தால்சா























தேவையான பொருட்கள்

எண்ணெய் - 1/4 கப் + 1/4 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கு
தக்காளி - 4
இஞ்சி பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 3 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 3 தேக்கரண்டி
மட்டன் - 500 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
துவரம் பருப்பு - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
கேரட் - 1
முருங்கைக்காய் - 1
மாங்காய் - 1
சின்ன வெங்காயம் - 10
கொத்தமல்லி இலை - சிறிது

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கி உப்பு தூவி தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து மட்டன் துண்டுகளை சேர்த்து வதக்கவும். இப்போது தண்ணீர் ஊற்றி மூடி வேகவிடவும். மட்டன் பாதி வெந்த பின் துவரம் பருப்பு, உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், கேரட், மாங்காய் சேர்த்து வேக விடவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி குழம்பில் ஊற்றி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

உருளைக்கிழங்கு ஸ்டூ

Related image


தேவையானபொருட்கள் -

உருளைக்கிழங்கு - 4
தேங்காய் எண்ணெய் - 1.5 டீஸ்பூன்
கடுகு - 1/2 தேக்கரண்டி
உலர்ந்த சிகப்பு மிளகாய் - 2
இஞ்சி - சிறிது
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கரம் மசாலா தூள் - 3/4 தேக்கரண்டி
தேங்காய் பால் - 1 1/4 கப்
மிளகு தூள் - 1 - 2 மேஜைக்கரண்டி
உப்பு - சுவைக்கு

செய்முறை

முதலில்  உருளைக்கிழங்கை எடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். வெந்த பின் உருளைக்கிழங்குகளை   கைகளால் பிசைந்து வைக்கவும் . ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு, பிசைந்து  வைத்த உருளைக்கிழங்கு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக விடவும். பின் தேங்காய் பால் ஊற்றி, மிளகு தூள் சேர்த்து  மிதமான தணலில் வேக விடவும்.

மசாலா மீன் ஃப்ரை

Image result for மசாலா மீன் ஃப்ரை

தேவையான பொருட்கள்

மீன் - 250 கிராம்
தேங்காய் எண்ணெய் - 1/4 கப்

அரைக்க...

சின்ன வெங்காயம் - 10
இஞ்சி - தேவையான அளவு
பூண்டு - 6 பல்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 தேக்கரண்டி


செய்முறை

மசாலாவிற்கு வேண்டிய பொருட்களான வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், மிளகு தூள் முதலியவற்றை மிக்சி ஜாரில் எடுத்து அரைத்து வைக்கவும். ஒரு கிண்ணத்தில் மீன் துண்டுகளை எடுத்து மசாலாவை அதில் சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற விடவும். கடாயில் எண்ணெய் விட்டு மீன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.