Thursday, September 26, 2013

ராஜஸ்தான் மட்டன் குழம்பு



தேவையான பொருட்கள்: 

மட்டன் - 1 கிலோ 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் 
தக்காளி - 2 (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
வரமிளகாய் - 8 
சீரகம் - 1 டீஸ்பூன் 
மிளகு - 1 டீஸ்பூன் 
மல்லி - 1 டேபிள் ஸ்பூன் 
கசகசா - 1 டீஸ்பூன் 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
பட்டை - 1 இன்ச் 
ஏலக்காய் - 5 
பிரியாணி இலை - 1 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். 
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, 
அதில் மட்டனைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, 
மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, 
மூடி வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும். 
பின் மிக்ஸியில் வரமிளகாய், சீரகம், மல்லி, 
மிளகு, கடுகு, கசகசா ஆகியவற்றைப் போட்டு, 
தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். 
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 
அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, 
ஏலக்காய், பட்டை ஆகியவற்றைப் போட்டு 
தாளித்துக் கொள்ள வேண்டும். 
அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, 
4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக வதக்க வேண்டும். 
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, 
வேக வைத்துள்ள மட்டனை போட்டு கிளறி, 
3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும். 
இறுதியில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை போட்டு, 
மட்டனில் மசாலா நன்கு ஒட்டுமாறு பிரட்டி விட வேண்டும். 
பிறகு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 
7-8 நிமிடம் தொடர்ந்து பிரட்டி விடவும். 
கடைசியாக 3 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 
15 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும். 
இப்போது சூப்பரான ஜங்லி மட்டன் குழம்பு ரெடி!!!

சிக்கன் புலாவ் ரெசிபி




தேவையான பொருட்கள்: 

அரிசி - 2 கப் 
சிக்கன் - 250 கிராம் (சிறிதாக வெட்டியது) 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1 சிட்டிகை 
சீரகம் - 1 டீஸ்பூன் 
பிரியாணி இலை - 1 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
தண்ணீர் - 2 கப்

செய்முறை: 

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி ,
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
பின் அரிசியை நன்கு கழுவி, 
2 கப் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, 
அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 
பிரியாணி இலை மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து, 
வெங்காயத்தைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 
2 நிமிடம் வதக்க வேண்டும். 
பின் அதில் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 
தக்காளியைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். 
பின்பு மிளகாய் தூள், மல்லி தூள், சீரகப் பொடி, 
கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். 
அடுத்து கழுவி வைத்துள்ள சிக்கனைப் போட்டு, 
4-5 நிமிடம் வதக்க வேண்டும். 
இறுதியில் ஊற வைத்துள்ள அரிசியை ,
தண்ணீருடன் சேர்த்து குக்கரில் ஊற்றி கிளறி, 
மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கினால், 
எளிமையான சிக்கன் புலாவ் ரெடி!!!





மைதா தோசை




தேவையான பொருட்கள்: 
மைதா மாவு - 1 கப் 
பச்சரிசி மாவு - 3/4 கப் 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) 
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
 கடுகு - 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1/4 டீஸ்பூன் 
மிளகு - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பச்சரிசி மாவு, 
உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 
தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 
அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 
கடுகு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, 
வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கி, அதனை கலந்து வைத்துள்ள மைதா மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 
பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், 
கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி, எண்ணெய் சேர்த்து முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான மைதா தோசை ரெடி!!! 

மட்டன் தம் பக்த்



தேவையான பொருட்கள்:
மட்டன் - 1 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை ஏலக்காய் - 2-3
மிளகு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
கருப்பு ஏலக்காய் - 1
தயிர் - 1 கப்
பச்சை மிளகாய் - 4
 புதினா - 1/2 கப் (நறுக்கியது)
கொத்தமல்லி - ஃ/1 கப் (நறுக்கியது)
கோதுமை மாவு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 1/2 கப்


செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, பச்சை ஏலக்காய்,
கருப்பு ஏலக்காய், கிராம்பு, சீரகம், மிளகு
மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த பேஸ்ட்டை, கழுவி வைத்துள்ள மட்டனுடன் சேர்த்து ,
தயிர் ஊற்றி, 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
2 மணிநேரம் ஆன பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
வெங்காயத்தைப் போட்டு தீயை குறைவில் வைத்து,
5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்,
பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி,
 ஊற வைத்துள்ள மட்டனைப் போட்டு,
உப்பு தூவி கிளறி, 7-8 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
மட்டனும், எண்ணெயும் தனியாக பிரியும் போது, தண்ணீர் ஊற்றி,
மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
பிறகு கோதுமை மாவை தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி பதத்தில் பிசைந்து,
வாணலியை மூடுமாறான வட்டத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மூடி வைத்துள்ள வாணலியை திறந்து,
அதனை கோதுமை மாவால் மூடி, தீயை குறைவில் வைத்து,
30 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சூப்பரான மட்டன் தம் பக்த் ரெசிபி ரெடி!!!