Sunday, August 27, 2017

வான் கோழிக் குழம்பு




















தேவையான பொருட்கள்:

வான்கோழி - 1/2 கிலோ
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

மசாலாவிற்கு...

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
சோம்பு பொடி - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வான்கோழி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் அடுப்பை அணைத்து, விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளி விழுதை சேர்த்து, 15 நிமிடம் எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.
பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் கிளறி, உப்பு மற்றும் அனைத்து மசாலா பொடியையும் தூவி கிளற வேண்டும். பின்பு அதில் வேக வைத்துள்ள வான்கோழியை நீருடன் ஊற்றி கிளறி, 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவி இறக்கவும் 

மீன் குழம்பு




















தேவையானவை

மீன் - அரை கிலோ
துருவிய தேங்காய் - அரை கப்
வெங்காயம் - ஒன்றரை
பச்சை மிளகாய் - 4
தக்காளி - ஒன்று
பூண்டு - 6 பல்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
உப்பு - 3 தேக்கரண்டி
எண்ணெய் - அரை கப்


செய்முறை

மீனைச் சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். 2 கப் தண்ணீரில் புளியை ஊற வைத்து நன்கு கரைத்து வடிகட்டி எடுத்து, அத்துடன் தக்காளியைச் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் பாதி வெங்காயத்தை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை நசுக்கி வைக்கவும்.
அடிகனமான சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, நசுக்கி வைத்த பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பிறகு தூள் வகைகளைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு புளிக் கரைசலை ஊற்றி, மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
குழம்பு கொதித்து கெட்டியான பதம் வந்ததும் மீன் துண்டுகளைப் போட்டு வேகவிடவும்.
பிறகு நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி, ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிடவும்.


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு


















தேவையானவை 

கத்தரிக்காய் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 10
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
புளி - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி + 5 தேக்கரண்டி
வடகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
தனி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
குழம்பு மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொப்பரை (அ) தேங்காய் - அரை மூடி

வறுத்து பொடிக்க :

கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5

செய்முறை 


சின்ன‌ வெங்காயம், பெரிய‌ வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக‌ நறுக்கி வைக்கவும். புளியை கரைத்து வைக்கவும். கத்தரிக்காய் சிறிதாக‌ இருந்தால் இரண்டாக‌ பிளந்து வைக்கவும். பெரிதாக‌ இருந்தால் நான்காக‌ பிளந்து வைக்கவும். வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, சீரகம், மிளகு, வெந்தயம், காய்ந்த‌ மிளகாய் சேர்த்து வறுத்து அரைத்து பொடி செய்து வைக்கவும்.
குழம்பு சட்டியில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கத்தரிக்காயை போட்டு சிறிது நேரம் வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
பின்னர் அதே சட்டியில் 5 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி வடகம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் நறுக்கி வைத்த‌ சின்ன‌ மற்றும் பெரிய‌ வெங்காயத்தை சேர்த்து நன்கு வத‌க்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு வதக்கிய‌ கத்தரிக்காய், தனி மிளகாய்த் தூள், குழம்பு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தேவையான‌ அளவு உப்பு சேர்த்து தூள் வாசனை போக‌ வதக்கவும்.
வதக்கியவற்றுடன் புளி கரைசலை சேர்த்து மூடி போட்டு அதிகமான தீயில் 10 நிமிடம் நன்கு கொதிக்க‌ விடவும்.
குழம்பு சுண்டி தூள் வாசனை போனதும் அரைத்து வைத்துள்ள‌ பொடியை சேர்க்கவும்.
பின்னர் கொப்பரை தேங்காயை அரைத்து சேர்க்கவும். கொப்பரை இல்லையெனில் அரை மூடி தேங்காயை வெறும் வாணலியில் வறுத்து அரைத்து சேர்க்கவும்.
தேங்காய் சேர்த்த‌ பின்னர் நீண்ட‌ நேரம் கொதிக்க‌ வைக்க‌ தேவையில்லை. உடனே 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

கோவை அரிசிபருப்பு சாதம்




















தேவையான பொருட்கள்

பொன்னி அரிசி - 2 கப்
துவரம்பருப்பு - 3/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
கடுகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 ஆர்க்கு
குருமிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வரமல்லிவிதை - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 3 எண்ணம்
பூண்டு - 5 பல்
தேங்காய் - 1 கீற்று
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 5 கப்


செய்முறை

அரிசியை,பருப்பு நன்கு கலைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
வெங்காயம், தக்காளி அரிந்து வைக்கவும்.
பூண்டு தோல் உரித்து வைக்கவும்.
தேங்காய் பொடியாக அரிந்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, குருமிளகு, சீரகம், வரமல்லிவிதை, வரமிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
இதனுடன் பூண்டு, வெங்காயம்,தேங்காய், தக்காளி சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து களைந்த அரிசி பருப்பு சேர்த்து 3 விசில் வைத்து,ஆவி போனபின்   கொத்துமல்லி இலை  தூவி கிளறி பரிமாறவும்..

சிக்கன் பெப்பர் வறுவல்





















தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2 பெரியது
இஞ்சி – 1 பெரிய துண்டு
பூண்டு – 10 பல்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள்

மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
தனியா தூள் – 2 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
மிளகு தூள் – 2 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க

எண்ணெய் – 1 மேஜை கரண்டி
பட்டை, கிராம்பு,ஏலக்காய் – 1
சோம்பு – 1 தே.கரண்டி
கருவேப்பில்லை – 5 இலை

கடைசியில் சேர்க்க

மிளகுதூள் – 1 தே.கரண்டி
எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். சிக்கனுடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.
வெங்காயத்தினை பெரிய துண்டுகளாக வெட்டி கொண்டு கடாயில் போட்டு வதக்கி சிறிது நேரம் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து கொள்ளவும். இஞ்சி + பூண்டினை நன்றாக நசுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும். அத்துடன் அரைத்த வெங்காயம் + நசுக்கிய இஞ்சு,பூண்டினை சேர்த்து 2 - 3 நிமிடங்கள் வதக்கவும்.
அதனுடன் ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி தட்டு போட்டு மூடி வேகவிடவும். 3 – 4 நிமிட்த்திற்கு ஒருமுறை கிளறிவிடவும்.
சிக்கன் வெந்ததும் கடைசியில் சேர்க்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கிளறி மேலும் 2 – 3 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.. 

பள்ளிபாளையம் மிளகாய் சிக்கன்

















தேவையான பொருட்கள் :

சிக்கன் - அரை கிலோ (எலும்பு, தோல் நீக்கியது)
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
சிக்கன் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் - தேவையான அளவு,
சோம்பு - 1/2 தே.கரண்டி அல்லது சோம்பு தூள் - 1/4 தே.கரண்டி
காய்ந்த மிளகாய் - 8 (காரத்திற்கு ஏற்ப)
பூண்டு - 5 பல்.


செய்முறை :

சிக்கனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பூண்டை நசுக்கி வைக்கவும்.
சின்ன வெங்காயத்தினை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காய்ந்த மிளகாயினை இரண்டாக உடைத்து அதில் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிடவும். (காரம் விரும்புபவர்கள் அதிகம் விதைகள் நீக்க தேவையில்லை.)
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து அத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தினை சேர்த்து வதக்கவும்.
 வெங்காயம் சிறிது வதங்கியவுடன் அத்துடன் சிக்கனை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், சிக்கன் மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறி அத்துடன் சிறிது தண்ணீர் தெளித்து(சுமார் 2 மேஜை கரண்டி அளவு) அதனை தட்டு போட்டு மூடி வேகவிடவும்.
சிக்கன் நன்றாக வெந்த பிறகு துருவிய தேங்காயினை சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடங்கள் வதக்கவும்.
கடைசியில் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.  

மஷ்ரூம் குருமா
















தேவையானவை

மஷ்ரூம் - 20
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
காரட்,பீன்ஸ் (நறுக்கியது)பச்சை பட்டானி - 1 கப்
முந்திரி பருப்பு - 15
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
சீரகப் பொடி - 1/2 தேக்கரண்டி
மிளகு பொடி -1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
ஊப்பு - தேவையான அளவு
பட்டை,கிராம்பு,சோம்பு - 1 தேக்கரண்டி
எண்னை - 2 தேக்கரண்டி


செய்முறை

மஷ்ரூமை நன்றாக கழுவி சுத்தம் செய்து,நான்காக வெட்டிக் கொள்ளவும்
வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கவும்
முந்திரி பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, மிக்ஸியில் அரைக்கவும் (ஊற வத்த தண்ணீரை சேர்த்தே அரைக்கலாம்)
ஒரு கடாயில் எண்ணை சூடு செய்து,பட்டை , கிராம்பு மற்றும் சோம்பு போடவும். பின் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும். சிறிது வதங்கிய வுடன் தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள்,தனியா தூள்,சீரகப் பொடி,மிளகு பொடி,மஞ்சள் தூள்,ஊப்பு போட்டு நன்றாக கிளறவும்
மஷ்ரூம் மற்றும் அனைத்து காய்கரியையும் அதனுடன் சேர்த்து அரைத்த முந்திரியை சேர்க்கவும்.  5 நிமிடம் வரை மூடி போட்டு வேக விடவும்
மஷ்ரூம் வேந்தவுடன் மேலும் 5 நிமிடம் திக்காக வரும்வரை கொதிக்க விடவும்  அடுப்பை அனைத்து சிறிது கொத்தமல்லி இலை தூவி பறிமாறலாம்.

சாஹி சிக்கன் குருமா
















தேவையானவை

கோழிக்கறி - ஒரு கிலோ
பெரிய வெங்காயம் - 3
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - அரைத் தேக்கரண்டி
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 8 பல்
தயிர் - ஒரு கோப்பை
நெய் - 3 மேசைக்கரண்டி
பாதாம் பருப்பு - 5
முந்திரிப்பருப்பு - 10
எலுமிச்சை சாறு - தேவைக்கேற்ப
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை

தயிரை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கோழிக்கறியுடன் நன்கு கலந்து சுமார் அரை மணி நேரம் ஊற விடவும்.
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் அல்லது பேனில் நெய் ஊற்றி சூடேறியதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வரும் அளவிற்கு வதக்கவும். அதனுடன் மல்லித் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் வேக விடவும்.
பிறகு கோழித்துண்டுகளைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக விடவும். அதன்பின் இரண்டு டம்ளர் சூடான தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக விடவும். கறி நன்கு, மென்மையாகும் அளவிற்கு வெந்தவுடன் கரம் மசாலா, உப்பு மற்றும் பாதாம், முந்திரித் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி சிறிது நேரத்தில் இறக்கி விடவும். பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லித் தழையினைத் தூவிப் பரிமாறவும்.

புடலங்காய் குழம்பு
















தேவையானவை

புடலங்காய் - ஒன்று
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 4 பல்
தக்காளிப் பழம் - 1
புளி - ஒரு எலுமிச்சை அளவு
பால் - 1 கப்
மிளகாய்த்தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு நெட்டு


செய்முறை

புடலங்காயை பொடியாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டை நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் புடலங்காயைப் போட்டு பொரிக்கவும்.
புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும். புடலங்காயை பொன்னிறமாக பொரித்து எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காய, பச்சை மிளகாய், பெருஞ்சீரகம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி விடவும்.
புளிக்கரைசல் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். மிளகாய் தூளின் பச்சை வாசனை போனதும் பாலை ஊற்றவும். பாலை சேர்த்த பின்னர் ஒரு கொதி வந்ததும் பொரித்து வைத்திருக்கும் புடலங்காயை போடவும். குழம்பு கெட்டியானதும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

Thursday, August 24, 2017

ஆட்டுக்குடல் வறுவல்




















தேவையானவை

ஆட்டுக்குடல் - முக்கால் கிலோ
சின்ன வெங்காயம் (அ) பெரிய வெங்காயம் - அரை கிலோ
பச்சை மிளகாய் - 10
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க - எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை


செய்முறை

ஆட்டுக்குடலை கல் உப்பு போட்டுத் தேய்த்து நீரில்  நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் ஆட்டுக்குடலுடன் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் வேக வைக்கவும்.
வெந்ததும் தண்ணீரை வடிகட்டிவிட்டு குடலைத் தனியாக எடுத்து வைக்கவும். கடாயில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் வேக வைத்த குடலைச் சேர்த்து, மிளகாய்த் தூள், கரம் மசாலா மற்றும் உப்புச் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தேங்காய்ப்பூவைச் சேர்த்துக் நன்கு கிளறிவிடவும். தீயின் அளவை அதிகரித்து 5 நிமிடங்கள் கைவிடாமல் கிளறி, ட்ரையானதும் இறக்கவும்.

மட்டன் சாப்ஸ்

















தேவையான பொருட்கள்

மட்டன் - அரைக் கிலோ
பச்சைமிளகாய் விழுது - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
பட்டை - ஒரு துண்டு
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து


செய்முறை

மட்டனை நன்கு சுத்தமாக அலசி விட்டு அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகு தூள், தனியாதூள் சேர்த்து பிசைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
குக்கரில் ஊறிய மட்டன் கலவையை போட்டு இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து பிசைந்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 6 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கறிவேப்பிலை தாளித்து அதில் கரம் மசாலா தூள் சேர்க்கவும்.  தாளித்தவற்றுடன் வேக வைத்த மட்டனை சேர்த்து பிரட்டி விட்டு நன்கு சிவக்க வெந்ததும் எடுக்கவும்.

இலங்கை சிக்கன் பிரியாணி


















தேவையான பொருட்கள்

கோழி - ஒரு கிலோ
பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ
பெரிய வெங்காயம் - 6
தக்காளி - 6
பச்சை மிளகாய் - 6
இஞ்சி, பூண்டு விழுது - 2 1/2 மேசைக்கரண்டி
பட்டை - 3
கிராம்பு - 10
ஏலக்காய் - 15
அன்னாசி மொக்கு - 2
மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
எலுமிச்சை - ஒன்று
புதினா - ஒரு கப்
கொத்தமல்லி - ஒரு கப்
உப்பு - 3 மேசைக்கரண்டி
நெய் - 5 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
ரம்பை இலை - தேவையானளவு
கலர் பொடி(சிகப்பு) - சிறிதளவு (விரும்பினால்)
தண்ணீர் - தேவையானளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி இரண்டையும் மெல்லிய நீளவாக்கில் நறுக்கி வைத்து கொள்ளவும்.
இன்னொரு பாத்திரத்தில் பச்சை மிளகாயை நீள வாக்கில் கீறி வைத்துக் கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் புதினா, கொத்தமல்லி தழைகளை கழுவி வைக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில்)கறியினை சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு கழுவி அதில் தயிர் பாதி இஞ்சி, பூண்டு விழுது மிளகாய் தூள் போட்டு கிளறி வைக்கவும்.
அடுப்பில் தாட்சியை வைத்து அது சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி மொக்கு போட்டு பொரியவிடவும்.
அதன் பின்பு அதில் நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, கீறின பச்சை மிளகாய் போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
பிறகு நறுக்கின வெங்காயம் தக்காளி, கறியை போட்டு வதக்கவும். (தக்காளி நன்கு வதக்கவேண்டும்).
புதினா கொத்தமல்லி போட்டு வதக்க வேண்டும்.
இதனுடன் கறி துண்டங்களைப் போட்டு மசாலா கறி துண்டங்களை சேரும்படி நன்கு பிரட்டி விடவும்.
அதில் ரம்பை இலை, தயிர், கரம் மசாலா சேர்த்து அதிக தீயில் வைத்து கிளறவும்.
பிறகு 6 கப் தண்ணீர் சேர்த்து கலர் பொடி உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து கிளறி மூடி விடவும்.
சுமார் 15 நிமிடம் கழித்து, கொதித்து வாசனை வந்ததும் அரிசியை களைந்து போட்டுக் கிளறி விடவும்.  அரிசி,கோழின்  வேக்காடு சரி பார்த்து இறக்கவும் 

கோழி உருளைக்கிழங்கு குழம்பு



















தேவையான பொருட்கள்

கோழி - 1 கிலோ
உருளைக் கிழங்கு - 2(பெரியது)
வெங்காயம் - 2
தக்காளி - 1 அல்லது 2
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
கறுவாப்பட்டை  - 1 துண்டு
கிராம்பு  - 4
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
சிக்கன் கறி பவுடர்  - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சம் பழப்புளி - 1/2 (விரும்பினால்)

செய்முறை

கோழியை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டவும். உருளைக்கிழங்கின் தோலை சீவி பெரிய துண்டுகளாக வெட்டவும். வெங்காயம், பூண்டு, தக்காளியை நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, கறுவாப்பட்டை , கிராம்பு, பெருஞ்சீரகத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியதும் பூண்டைப் போட்டு வதக்கவும். பூண்டு வதங்கியதும் கோழியைச் சேர்த்து வதக்கவும்.
கோழி சிறிதளவு வதங்கியதும் உப்பு, தக்காளிச் சேர்த்து ஒரு முறை கிளறி மூடி வேக விடவும்.
5 நிமிடத்தின் பின்பு மூடியை திறந்து மிளகாய்த்தூளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, 2 கப் தண்ணீர் விடவும்.
பின்பு பச்சை மிளகாய், உருளைக்கிழங்கை சேர்த்து மூடி வேகவிடவும்.
கோழி, உருளைக்கிழங்கு வெந்து, குழம்பு தடிப்பாக வந்ததும்  சிக்கன் கறி பவுடர் சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.

மட்டன் யாழ்ப்பாண வறுவல்

















தேவையான பொருட்கள்

மட்டன் - 500 கிராம்
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 50 கிராம்
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

பட்டை - ஒன்று
கிராம்பு - ஒன்று
சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி

அரைக்க:

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - சிறிது
பூண்டு - 8 பற்கள்

வறுத்து தூள் செய்ய:

மிளகாய் - 10
சீரகம் - அரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை - ஒன்று
ஏலக்காய் - ஒன்று

செய்முறை

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கறியுடன் சேர்த்துப் பிசறி வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, வறுத்துத் தூள் செய்ய வேண்டிய பொருட்களை வறுத்துத் தூள் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம் ஆகியவற்றைத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் பிசறி வைத்திருக்கும் கறிக் கலவையைச் சேர்க்கவும்.
பிறகு உப்பு, தனியா தூள், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கறியில் உள்ள நீர் வற்றியவுடன் தூள் செய்தவற்றைச் சேர்த்து தீயைக் குறைத்து வைத்து 10 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

இஞ்சி பக்கோடா
















தேவையான பொருட்கள்

கடலை மாவு - 150 கிராம்
அரிசி மாவு - 25 கிராம்
இஞ்சி - 50 கிராம்
பச்சை மிளகாய் - 50 கிராம்
டால்டா - 25 கிராம்
சமையல்சோடா  - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
பெருஞ்சீரகம் (சோம்பு) - அரை தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் இஞ்சியுடன் பச்சை மிளகாயைச் சேர்த்து நன்றாக இடித்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் கடலை மாவு, ஆப்ப சோடா, உப்பு, கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் (சோம்பு), டால்டா, தண்ணீர் மற்றும் இடித்த பச்சை மிளகாய், இஞ்சிக் கலவை ஆகியவற்றைச் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கெட்டியாகப் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக கிள்ளிப் போட்டு நன்றாகப் பொரித்தெடுக்கவும்.

பாகற்காய் சம்பல்





















தேவையான பொருட்கள்

நடுத்தர அளவான பாகற்காய்கள் - 2
தக்காளி - 150 கிராம்
பெரிய வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - ஒன்று
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - அளவுக்கு
எண்ணெய் - பொரிக்க


செய்முறை

வெங்காயத்தை மெல்லியதாக, நீளமாக அரிந்து உதிர்த்து வைக்கவும்.
தக்காளி, பச்சை மிளகாயை வட்டமாக நறுக்கி வைக்கவும்.
பாகற்காயைக் கழுவி நீளமாக இரண்டாக வெட்டி, உட்பகுதியை கரண்டியால் சுரண்டி நீக்கி மெல்லிதாக (அரைவட்டமாக) நறுக்கி வைக்கவும். நறுக்கிய பாகற்காயுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காய விட்டு, காயை சிறிது சிறிதாகப் போட்டு
 (காய் நீர் விட்டு இருக்கும். அழுத்திப் பிழியாமல் வடித்து எடுத்துப் போடவும்)
பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
பேப்பர் டவலில் பரவலாகப் போட்டு நன்கு எண்ணெயை வடியவிடவும்.
அனைத்தையும் தயாராக வைத்திருந்து பரிமாறுமுன் கலந்து பரிமாறவும்.
(ஏற்கனவே பொரிக்கும் சமயம் காய்க்கு உப்பு சேர்த்திருப்பதால் இப்போது குறைவாகச் சேர்த்தால் போதும்) கலக்கும் போது அழுத்திப் பிசைய வேண்டாம். சம்பலில் பாகற்காய்த் துண்டுகள் இளகாமல் மொறுமொறுப்பாக இருக்க வேண்டும். 

டெவில்ட் சிக்கன்



















தேவையான பொருட்கள்

சிக்கன் - அரைக் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
குடை மிளகாய் - 2 (சதுரமாக நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
சில்லி ஃப்ளேக்ஸ் (மிளகாய்விதை )  - ஒரு மேசைக்கரண்டி
தக்காளி கெச்சப்(சாஸ்)  - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மிளகுத் தூள் - அரை மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை

சிக்கன் துண்டுகளுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். குடை மிளகாயை சதுரத் துண்டுகளாக நறுக்கவும்.
பிறகு ஊற வைத்த சிக்கன் துண்டுகளை எண்ணெயில் பாதி வேகும் வரை பொரித்தெடுக்கவும்.
பொரித்த சிக்கன் துண்டுகளை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து எண்ணெய் வடிய வைக்கவும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்னெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
வெங்காயம் வதங்கி இஞ்சி, பூண்டு விழுது வாசம் தணிந்ததும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய்த் தூள் மற்றும் தக்காளி கெட்ச்சப் சேர்த்து கிளறவும்.
அதில் சதுரமாக நறுக்கிய குடை மிளகாய் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து பிரட்டவும்.
மசாலாக்களின் பச்சை வாசனை அடங்கியதும் பொரித்த சிக்கன் துண்டுகளை சேர்த்து மிளகுத் தூள் தூவவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கிளறி 10 - 15 நிமிடங்கள் கழித்து உப்பு சரி பார்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

Saturday, August 19, 2017

நெல்லை - சிக்கன் குழம்பு




















தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
துருவிய தேங்காய் - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 10-12
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3-4
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
பிரியாணி இலை - 2
சோம்பு - 1 டீஸ்ழுன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து, பின் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேங்காய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அத்துடன் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை மற்றும் சோம்பு சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும். அடுத்து அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அதில் நறுக்கிய பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் சிக்கன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, மிதமான தீயில் தண்ணீர் சேர்க்காமல் 5-10 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். இறுதியில் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்...

காரைக்குடி கோழி குழம்பு


















தேவையான பொருட்கள்:

கோழி - 1/2 கிலோ
தக்காளி - 2 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (அலங்கரிக்க)

அரைப்பதற்கு...
தேங்காய் - 1/2 மூடி
கசகசா - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.  பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி விடவும். பின்பு அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் சிறிது உப்பு தூவி பிரட்டி, மூடி வைத்து தக்காளியை வேக வைக்க வேண்டும். தக்காளியானது நன்கு வெந்ததும், அதில் சிக்கனை சேர்த்து, அத்துடன் சிறிது உப்பு தூவி பிரட்டி, மூடி வைத்து மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும். சிக்கனானது ஓரளவு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். சிக்கனானது நன்கு வெந்து, பச்சை வாசனை போன பின் வாணலியை இறக்கிவிட்டு, பின் தாளிப்பற்கு சிறு வாணலியை அடுப்பில் வைக்க வேண்டும். பிறகு அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி இறக்கவும் ...

உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு




















தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க வேண்டும். பின்பு அதில் மட்டனை போட்டு 2 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும். பிறகு அதில் தயிர் ஊற்றி கிளறி 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் விசிலானது போனதும், குக்கரை திறந்து அதில் உருளைக்கிழங்கு சேர்த்து, மீண்டும் குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனப் பின் குக்கரை திறந்து கொத்தமல்லியைத் தூவி  இறக்கவும்..

காரமான மட்டன் மசாலா


















தேவையான பொருட்கள்:-

 மட்டன் - 1/2 கிலோ
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2 (நறுக்கியது)
தண்ணீர் - 1/2 கப்

ஊற வைப்பதற்கு:-

தயிர் - 1/2 கப்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

முதலில் மட்டனை நன்கு நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை கழுவிய மட்டனுடன் சேர்த்து,பிரட்டி 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பிறகு அதில் தக்காளி சேர்த்து பிரட்டி விட வேண்டும். தக்காளி நன்கு மென்மையானதும், அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு கிளறி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி,    தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை அதிகரித்து குக்கரை மூடி 7-8 விசில் விட்டு,  பின் தீயை குறைத்து 20 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்



நண்டு குழம்பு




























தேவையான பொருள்கள் 

நண்டு - 1 கிலோ
தேங்காய் பால் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை
இஞ்சி, பூண்டு விழுது - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

மிளகாய் தூள் - 3 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடிக்க:
சோம்பு - 1 ஸ்பூன்

பட்டை - ஒரு துண்டு 
கிராம்பு - 4
கறிவேப்பிலை - சிறிதளவு 
தேங்காய் துருவல் - அரை கப் 
தாளிக்க:
கடுகு - அரை ஸ்பூன்

வெந்தயம் - 1 ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை 

நண்டை சுத்தம் செய்து கழுவி மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும். 

பொடிக்க வேண்டியவற்றை வெறும் கடாயில் கறிவேப்பிலை சேர்த்து வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.

தேங்காயை சிவக்க வறுத்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் நண்டு, தக்காளி, மற்றும் உப்பு சேர்த்து மூடிபோட்டு 15 நிமிடங்கள் வேகவிடவும்.

15 நிமிடங்கள் கழித்து மிளகாய் தூள் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி மீண்டும் வேகவிடவும்.

அனைத்தும் சேர்ந்து நன்கு வெந்ததும், பொடித்த பொடி, தேங்காய் விழுது, மற்றும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

சீராக சம்பா மட்டன் பிரியாணி





















தேவையான பொருட்கள்

மட்டன் – ½ கிலோ
சீரக சம்பா அரிசி – ½ கிலோ
பெரிய வெங்காயம் – 2
தேங்காய் – 1
நெய் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
எலுமிச்சை – ½ மூடி

 தாளிக்க

பட்டை – சிறிதளவு
ஏலக்காய் – 4
அன்னாசிபூ – 2
கிராம்பு – 4
பிரியாணி இலை – 1


வதக்க

புதினா – ¼ கட்டு
கொத்தமல்லி – ¼ கட்டு
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 10



வறுத்து மசால் பொடி அரைக்க

சீரகம் – 2 தேக்கரண்டி
மல்லி – 4 தேக்கரண்டி
வத்தல் – 20
கிராம்பு – 4
ஏலக்காய் – 4
அன்னாசிபூ – 2
பட்டை – சிறிதளவு



இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காய விழுது தயாரிக்க

சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 10
இஞ்சி – சிறிதளவு



செய்முறை

முதலில் அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். தேங்காயிலிருந்து பால் எடுக்கவும்.
சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை பொடியாக அரிந்து கொள்ளவும். பூண்டை தோலுரித்துக் கொள்ளவும். எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மசால் அரைக்கத் தேவையான கொத்தமல்லி, சீரகம், வத்தல் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும். பின் அதனுடன் கிராம்பு, ஏலக்காய், அன்னாசிபூ, பட்டை ஆகியவற்றை சேர்த்து மைய அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
10 அரிந்த சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
குக்கரில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கிராம்பு, ஏலக்காய், அன்னாசிபூ, பட்டை போட்டு தாளித்து வதக்க வேண்டிய அரிந்த சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதனுடன் அதனுடன் கொத்தமல்லி, புதினா, மஞ்சள் தூள், கறி, அரைத்து வைத்துள்ள மசால் பொடியில் பாதியளவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். 4 முதல் 5 விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
மற்றொரு குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு அதில் பிரியாணி இலையைப் போடவும். பின்னர் அரிந்து வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

அதனுடன் அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். இதனுடன் வேக வைத்துள்ள கறி கலவையைச் சேர்க்கவும். இறுதியில் தேங்காய்ப் பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்தவுடன் ஊற வைத்துள்ள சீரக சம்பா அரிசி, பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு நெய் சேர்த்து குக்கரை மூடவும். ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். 

பருப்பு குழம்பு






























தேவையானப் பொருட்கள் :

துவரம் பருப்பு - அரை கப்
நறுக்கிய வெங்காயம் - 1 
நறுக்கிய தக்காளி - 1 
பூண்டு - 4 பல்
நறுக்கிய பச்சை மிளகாய் - 3 
உப்பு - தே.அ
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - மல்லி இலை தேவையான அளவு

செய்முறை :

ஒரு குக்கரில் பருப்பு,வெங்காயம்,பூண்டு,தக்காளி,பச்சை மிளகாய் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 2 விசில் வந்ததும் இறக்கவும்..

10 நிமிடம் கழித்து திறந்து தேவையான அளவு உப்பு போட்டு அதில் தேங்காய் எண்ணையை நெய் இரண்டையும் சேர்த்து காயவைத்து கடுகு,கறிவேப்பிலை மல்லி இலை சேர்த்து தாளித்து கொட்டி பருப்பில் சேர்த்து கிளரவும். 

ஆட்டு குடல் குழம்பு




















தேவையான பொருட்கள் :

ஆட்டு குடல் -1
வெங்காயம் - 4
தக்காளி - 4
தேங்காய் - அரை மூடி
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி,- தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காயை நன்கு அரைத்து கொள்ளவும்.
ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தயிர், மஞ்சள் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும்
குக்கரில் மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது சிறிது போட்டு குடலுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். 
கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின் நறுக்கின வெங்காயதை போட்டு வதக்கி கொள்ளவும். வெங்காயம் வதங்கியவுடன் 
இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். 
அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அதில் வேக வைத்த குடலை போடவும். 
சிறிது கொதிக்க ஆரம்பிக்கும் போது அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
குழம்பு கொதித்து நன்கு கெட்டியானவுடன் கொத்தமல்லி, தூவி இறக்கவும்.

ஆட்டு கறி குழம்பு






















தேவையான பொருட்கள்

மட்டன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
காங்ந்த மிளகாய் - 10
தனியா - 2 ஸ்பூன் 
மிளகு - 2 ஸ்பூன் 
பட்டை, லவங்கம் - சிறிதளவு
கசகசா - 1 ஸ்பூன் 
தேங்காய் துருவல் - கால் கப்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் 
பூண்டு - 5 பல்
சோம்பு - கால் ஸ்பூன் 
எண்ணெய் - 1 குழிகரண்டி அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
கடுகு - கால் ஸ்பூன்
உப்பு - தேவைாயன அளவு

செய்முறை

மட்டனை குக்கரில் தண்ணீர் 2 டம்ளர் தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து 4 விசில் வேக விடவும். 

கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காய்ந்த மிளகாய் , தனியா, மிளகு எல்லாம் தனி தனியாக வறுத்து வைக்கவும்.

இதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.

வெங்காயம் தக்காளியை நீளமாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் மீதி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.

இதில் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பின் வேக வைத்த மட்டனை அதில் ஊற்றவும்.

பின் அதனுடன் அரைத்த விழுது, தேவைாயன உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவைத்து எண்ணெய் தனியே மிதந்து வந்தவுடன் இறக்கவும்.

ஸ்ரீரங்கம் வத்த குழம்பு



















தேவையான பொருட்கள் :

சுண்டக்காய் - 1 கப்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
புளி - எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 50 கிராம்
வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

புளியை கரைத்து கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும்.

அடுத்து, அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.

குழம்பு திக்கான பதம் வந்தவுடன் அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கிவிடவும் ..

Monday, August 7, 2017

திருநெல்வேலி சொதி























தேவையான பொருட்கள் : 

பாசிப்பருப்பு - 100 கிராம், 
பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, நறுக்கிய முருங்கைக்காய் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப்,  
சின்ன வெங்காயம் - 50 கிராம், 
தேங்காய் - ஒன்று, 
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், 
இஞ்சி - சிறிய துண்டு, 
பூண்டு - 8 பல், 
பச்சை மிளகாய் - 6, 
சீரகம் - ஒரு டீஸ்பூன், 
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, 
கொத்தமல்லித் தழை - சிறிதளவு, 
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், 
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை :

காய்கறிகள், சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். 
பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேக விடவும். 
தேங்காயை துருவி அரைத்து முதல், இரண்டாம் பாலை எடுத்து தனித்தனியே வைத்துக் கொள்ளவும்.
மண் சட்டியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் இரண்டாம் தேங்காய்ப் பாலை சேர்க்கவும். நறுக்கிய காய்கறிகளை அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவும். 
காய்கறிகள் வெந்ததும், வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். 
பிறகு, அதில் முதல் தேங்காய்ப் பாலை சேர்த்து, நன்றாகக் கொதித்து நுரைத்து வந்ததும் இறக்கி... உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். 
வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தாளித்து சேர்த்துக் கலந்து பரிமாறவும்.