Monday, November 12, 2018

தனிமை தேடிக்கொண்ட சாபம் அல்ல



























தனித்தே இருக்கிறேன்💔
பசித்தே  இருக்கிறேன்💔
விழித்தே இருக்கிறேன்💔
தொடர்ந்து 💞தொலைந்தே 💞 போகிறேன்
உன்னில்💕💕💕💞💞💞

#நாடோடி

தூயகாதல்கள்






















வினாடிக்கு 🙄பல முறை எங்கோ,
தூய காதல்கள் 💞காயப்படுத்தப்படுகிறது 💔
வினாடிக்கு பல முறை எங்கோ, 
தூயகாதல்கள்💞புறக்கணிக்கப்படுகிறது💔 
வினாடிக்கு பல முறை எங்கோ, 
தூயகாதல்கள்💞 தடம் மாறுகிறது 💔💔

"காதல் அழிவதில்லை கதாபாத்திரங்களை மாற்றிக்கொள்கிறது"💞💞💞

#நாடோடி

Thursday, May 3, 2018

கொல்லம் சிக்கன் குழம்பு





















தேவையான பொருள்கள் -


சிக்கன் - 300 கிராம்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிது

வறுத்து அரைக்க -

மிளகாய் வத்தல் - 2
கொத்தமல்லி - 4 மேஜைக்கரண்டி
பெருஞ் சீரகம் - 1 தேக்கரண்டி
பட்டை - 1 இன்ச் அளவு
கிராம்பு - 2
இஞ்சி - 1 இன்ச் அளவு
பூண்டு - 4 பல்
தேங்காய் - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 7

தாளிக்க -

நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 1
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை -

முதலில் சிக்கனை  சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவிக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். மிதமான தீயில் வைத்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்.
வறுத்தவற்றை ஆறியதும் மிக்ஸ்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.

பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும். சிக்கன் பாதி வெந்ததும் 300 மில்லி தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி குக்கரை மூடி விடவும்.

ஆவி  வந்ததும் வெயிட் போடவும். 4 விசில் வந்ததும் அடுப்பை ஆப் பண்ணி விடவும். . கொத்தமல்லி தழையை சேர்த்து கலக்கி விடவும். 

Wednesday, May 2, 2018

வெண்டைக்காய் புளிக்கறி





















தேவையான பொருள்கள்

வெண்டைக்காய் - கால் கிலோ
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
புளி கரைசல்-  கால் கப்
எண்ணெயை - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு

மசாலாவிற்கு...

தேங்காய் - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 5


செய்முறை

மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் காய்ந்த மிளகாய் எடுத்து மசித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். வெண்டைக்காய் சேர்த்து எண்ணெய்யில் நன்கு வதக்கவும். இப்போது உப்பு, மல்லி தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள் சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வேக விடவும். அரைத்து வைத்த மசாலா கலவை, புளி கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்த பின் இறக்கவும்.

Tuesday, May 1, 2018

செட்டிநாடு பூண்டு குழம்பு



























தேவையான பொருள்கள் -


பூண்டு -1 (15 பற்கள் )
மிளகாய்த்தூள் - 1/4 மேஜைக்கரண்டி
மல்லித்தூள் -  2 மேஜைக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 மேஜைக்கரண்டி
மிளகு தூள் - 1/2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி
புளி - கோலி அளவு
உப்பு - தேவையான அளவு         


அரைக்க -
தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 4


தாளிக்க -
நல்லெண்ணெய் -  3 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 4
வெந்தயம் - 1/2 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


செய்முறை -

புளியை 1 1/2 கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை அரைத்து கொள்ளவும்.
முதலில் அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி ஊற்றி பூண்டை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். தீயை சிம்மில் வைத்து செய்யவும்.               
வதக்கிய பூண்டை தனியாக வைத்து விட்டு அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், வெந்தயம், கறிவேப்பிலை  போட்டு  தாளிக்கவும்.
பின்னர் புளி தண்ணீரை ஊற்றி மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள்,மிளகு தூள், மஞ்சள் தூள், உப்பு, பூண்டு போட்டு 10 நிமிடங்கள் அல்லது பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
பின்னர் அரைத்த விழுதை சேர்த்து 5-10 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு இறக்கவும். 

Thursday, March 29, 2018

கூட்டாஞ் சோறு






















தேவையான பொருள்கள் -

அரிசி - 1 கப் (200 கிராம்)
துவரம்பருப்பு - 75 கிராம்
காயம் - ஒரு சிட்டிகை
முருங்கைக்காய் - 8 துண்டுகள்
கத்தரிக்காய் - 1
வாழைக்காய் - 1 (சிறியது)
கேரட் - 1
உருளைக்கிழங்கு - 1
மாங்காய் - 4 துண்டுகள்
தக்காளி - 1
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
சாம்பார் பொடி - 3/4 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது       

           
தாளிக்க -

கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை - சிறிது   

                             
செய்முறை -

முதலில் புளியை 1 கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். தக்காளி மற்றும் அனைத்து காய்களையும் நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடிதாக நறுக்கி கொள்ளவும்.                                               
குக்கரில் அரிசி, பருப்பு, நறுக்கிய காய்கறிகள், தக்காளி, சாம்பார்பொடி, மஞ்சள்தூள், உப்பு, காயம், புளித் தண்ணீர் மற்றும் 3 கப் தண்ணீர் (மொத்தமாக 4 கப்) ஊற்றி நன்றாக கிளறி மூடிபோட்டு அடுப்பில் வைக்கவும்.
முதல் விசில் வந்ததும் சிம்மில் வைத்து 12 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்கு கிளறி விடவும். இறுதியில் கொத்தமல்லித் தழையையும், தேங்காய் துருவலையும் சேர்த்து கிளறவும்.                       
அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை, வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொவன்றாக போட்டு தாளித்து சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி வைக்கவும். 

வெங்காய சாம்பார்



















தேவையான பொருள்கள் -

துவரம் பருப்பு - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1/2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
காயம் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு       
                   
அரைக்க -

தேங்காய் - 3 மேஜைக்கரண்டி

தாளிக்க -

நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை - சிறிது       
                                                 
செய்முறை -

புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
 தக்காளியை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
தாளிக்க கொடுத்துள்ள சின்ன வெங்காயத்தை மட்டும் சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
மீதமுள்ள சின்ன வெங்காயத்தை நறுக்க தேவையில்லை.
தேங்காயை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.                   
குக்கரில் துவரம் பருப்பு மற்றும் அது மூழ்கும் அளவு தண்ணீர், காயம் சேர்த்து அடுப்பில் வைக்கவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.
அடுப்பில் கடாய் வைத்து ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கி தனியே எடுத்து வைக்கவும். 
அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளியை போட்டு நன்றாக வதக்கி தனியாக வைக்கவும்.                   
ஒரு பாத்திரத்தில் வதக்கிய வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு, கரைத்த புளித் தண்ணீருடன் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். மசாலா வாடை போனதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 3 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.       
கடைசியாக வேக வைத்த பருப்பை சேர்த்து கொதி வந்ததும் சிறிது மல்லித் தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயத்தை  போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு பொன்னிறமானதும் எடுத்து குழம்பில் ஊற்றி நன்கு கலந்து விடவும்.   

அவியல்




















தேவையான பொருள்கள் -

முருங்கைக்காய் -  2
வாழைக்காய் - 1
உருளைக்கிழங்கு - 1
கேரட் - 1
மாங்காய் - 1/2
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கறிவேப்பில்லை - சிறிது                           
அரைக்க -
தேங்காய்த் துருவல் -1 கப்
சின்ன வெங்காயம் - 6
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 2 மேஜைக்கரண்டி     
                     
செய்முறை

காய் அனைத்தையும் நறுக்கி தண்ணீரில் உப்பு சேர்த்து  வேக விடவும்.                     
10 நிமிடம் கழித்து அல்லது காய் வெந்ததும் தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.         
அரைக்கக் கொடுத்தவற்றை கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் அரைத்த விழுதை சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விடவும்.           
பின்னர் வேக வைத்த காய்களை சேர்த்து கட்டியானதும் இறக்கி விடவும்.       
இறக்கிய பின்னர் தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து கிளறி விடவும்.

பின் குறிப்புகள் -
மாங்காய்க்குப் பதிலாக சிறிது புளியை ஊற வைத்து கரைத்து அதை சேர்த்துக் கொள்ளலாம்.
எண்ணெய், கருவேப்பில்லையுடன் 4 மேஜைக்கரண்டி தயிரை சேர்த்து கிளறினால் இன்னும் சுவையாக இருக்கும்.

Tuesday, March 13, 2018

மட்டன் உப்புக் கறி





















தேவையானவை-

மட்டன் - 1/2 கிலோ

சிவப்பு மிளகாய் - 10 (விதைகள் நீக்கியது)

சின்ன வெங்காயம் - 12

பூண்டு - 10 பல்

உப்பு - 2 டீஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

கருவேப்பிலை - 1 இணுக்கு





செய்முறை-





மட்டனைக் கழுவி பிரஷர் குக்கரில் நன்கு வேக விடவும்.

சட்டியில்  எண்ணெயைக் காயவைக்கவும்.

அதில் உளுந்து , சோம்பு தாளித்து மிளகாயைப் போடவும்.

பின்  தோலுரித்து இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்க்கவும்.

அதில் வெந்த மட்டனைப் போட்டு நன்கு வதக்கவும்.

சிறிது தண்ணீர் தெளித்து 20 நிமிடம் சிம்மில் வேக விடவும்.

அவ்வப்போது கிளறி விடவும். உப்பு சேர்த்து இன்னும் 2 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும் 

காரைக்குடி மட்டன் குழம்பு



















தேவையானவை -


மட்டன் - 1/2  கிலோ
சின்ன வெங்காயம் - 30
பூண்டு - 20 பல்
தக்காளி - 2
புளி - 4  சுளை
உப்பு - 2 டீஸ்பூன்.

அரைக்க -

வரமிளகாய் - 15
கொத்துமல்லி - 2  டேபிள் ஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 20
கசகசா - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 4  பல்

தாளிக்க -


சோம்பு - 1/4 டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1
இஞ்ச் - சிறியது
பிரியாணி இலை   - 1
கல்பாசிப்பூ - 1
கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை -

மட்டனை சுத்தம் செய்து பிரஷர் குக்கரில் சிறிதளவு தண்ணிரில் நன்கு வேக வைக்கவும் . வெங்காயம் பூண்டை தோலுரித்து., இரண்டாக அரிந்து கொள்ளவும். தக்காளியைத்துண்டுகள் செய்யவும். புளியையும் உப்பையும் 1 டம்ளர் தண்ணீரில் ஊறப் போடவும். வாணலியில்
அரை ஸ்பூன் எண்ணையில் மிளகாய்., மல்லி., சோம்பு., சீரகம்., மிளகு., கசகசாவை
வறுக்கவும். இத்துடன் வெங்காயம் ., பூண்டு சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு., பட்டை., கிராம்பு., இலை., கல்பாசிப்பூ., கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். வெங்காயம் ., பூண்டு., தக்காளி போட்டு வதக்கி., அரைத்த மசாலாவை சேர்க்கவும். பக்கங்களில் எண்ணைய் பிரியும் வரை வதக்கி., புளித்தண்ணீரையும் வேகவைத்த மட்டனையும் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் சிம்மில் 20 நிமிடம் வேகவைத்து மட்டன் வெந்ததும் இறக்கவும். 

வெங்காயம் பூண்டு குழம்பு


























தேவையானவை-


சின்ன வெங்காயம்..:- 50 கி
வெள்ளைப்பூண்டு:- 50 கி
தக்காளி..:- 1 பெரியது
சாம்பார் பொடி :- 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி :- 1/4 டீ ஸ்பூன்
புளி :- எலுமிச்சை அளவு..
உப்பு :- 2 டீஸ்பூன்
எண்ணெய்:- தாளிக்கத்தேவையான அளவு
1 டேபிள்ஸ்பூன் இருக்கலாம்.
கடுகு :- 1 டீஸ்பூன்
உளுந்து :- 1 டீஸ்பூன்
பெருங்காயம்:- ஒரு துண்டு
சீரகம் :-1/2 டீஸ்பூன்
வெந்தயம்:- 1/2 டீஸ்பூன்
சோம்பு:- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை .:- 1 இணுக்கு
தண்ணீர் :- 3 கப்


செய்முறை-


வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போடவும்.
கடுகு வெடித்ததும்., பெருங்காயம் போட்டுப் பொறிந்ததும்.,
உளுந்து., சீரகம்., சோம்பு.,வெந்தயம் போட்டுப் பொன்னிறமானதும்.,
சுத்தம் செய்து இரண்டாக நறுக்கப்பட்ட வெங்காயம்., பூண்டு., தக்காளி போட்டு
எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.
சாம்பார்பொடி., மஞ்சள் பொடி போட்டு உப்பும் புளியும் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
நன்கு கொதித்து வந்தவுடன்..
தீயின் அளவை குறைத்து  10 நிமிடம் கழித்து பூண்டு  வேக்காடு பார்த்து இறக்கவும்.

செட்டிநாட்டு அன்னாசி பழ - ரசம்






















தேவையானாவை-

அன்னாசி பழ  துண்டுகள் -  4 (சிறியது)
வெந்த துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1
புளி - 1 நெல்லி அளவு
உப்பு - 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பூண்டு - 4 பல்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
மிளகு ஜீரகப் பொடி - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை- 1 இணுக்கு
பெருங்காயம் - 1 /8 இன்ச் துண்டு
கொத்துமல்லித்தழை - 1 டீஸ்பூன் நறுக்கியது


செய்முறை -

அன்னாசி பழத்தை  மசிக்கவும். தக்காளியை கரைக்கவும்.
புளியை 3 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுக்கவும் .
இதில் வெந்த துவரம் பருப்பு., அன்னாசி பழம் ., தக்காளி.,
நசுக்கிய பூண்டு., மஞ்சள் பொடி., உப்பு., தனியா தூள்.,
மிளகு ஜீரகப் பொடி., சேர்க்கவும். சட்டியில்  எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., ஜீரகம்., வெந்தயம் பெருங்காயம் போட்டு., ரெண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., கருவேப்பிலை போடவும்.
இதில் புளிக்கரைசலை ஊற்றி நு்ரைத்துக் கொதிவரும் நிலையில்
இறக்கி  கொத்துமல்லி தூவி  விடவும் ...

Sunday, March 11, 2018

ஆந்திர நண்டு வறுவல்


















தேவையான பொருட்கள் :

நண்டு - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு

வதக்கி அரைக்க:

பூண்டு பல் - 10
மிளகு - 2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் வதக்கி ஆறவைத்து நைசாக அரைத்து கொள்ளவும்.

நண்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம் போட்டு சிவக்க வதக்குங்கள். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த மசாலா,  மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், 
உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும் 
அடுத்து அதில் நண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நண்டு வெந்து, மசாலா கெட்டியாகி நண்டுடன் சேர்ந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும் 

Saturday, February 24, 2018

கீரை கடைசல்


















தேவையானபொருள்கள் –

அரைக்கீரை – 4 கப்
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 3
பூண்டுப் பல் – 3
தக்காளி – 1 (சிறியது)
சோடா உப்பு – 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு


தாளிக்க –

எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை –

கீரையை நன்றாக ஆய்ந்து தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்தி வைக்கவும். பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோலுரித்து சிறிதாக நறுக்கிக் வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கீரை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, தேங்காய் துருவல்,உப்பு, சோடா உப்பு எல்லாவற்றையும் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.
கீரையில் தண்ணீர் சத்து இருப்பதால் தண்ணீர் சேர்க்கத் தேவை இல்லை. கை விடாமல் 2 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
ஆறிய பின் மிக்ஸ்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
 அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் , கறிவேப்பிலை போட்டு தாளித்து கீரையோடு சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.

Friday, February 23, 2018

மட்டன் கிரேவி





















தேவையான பொருட்கள்

ஆட்டுக்கறி - 1/2கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 3
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
ஏலக்காய், பட்டை - தலா 2
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மட்டனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், பட்டை சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி பின் மிளகாய் தூள் சேர்த்த வதக்கவும்.

அடுத்து நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவேண்டும்.

பின்னர் கழுவிய மட்டனை சேர்த்து உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

பின் குக்கரை மூடி முன்று விசில் வரும்வரை அடுப்பில் வைத்து இறக்கவும்.

Saturday, February 10, 2018

செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவி



















தேவையான பொருட்கள்: 

நண்டு - 1 கிலோ 
வெங்காயம் - 3 (நறுக்கியது) 
தக்காளி - 4 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் 
வரமிளகாய் - 4 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 
மிளகு - 2 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
மல்லி - 2 டீஸ்பூன் 
சோம்பு - 1/2 டீஸ்பூன் 
துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன் 
முந்திரி - 4 
பச்சை மிளகாய் - 3-4 
உப்பு - தேவையான அளவு 
கறிவேப்பிலை - சிறிது 
கொத்தமல்லி - சிறிது 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் நண்டை சுத்தமாக கழுவி நீரை முற்றிலும் வடிகட்டிக் கொண்டு, பின் ஒரு பாத்திரத்தில் அதனைப் போட்டு, நண்டு மூழ்கும் அளவில் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் பாத்திரத்தை இறக்கி, நீரை வடிகட்டி விட வேண்டும். (இப்படி செய்வதால் நண்டு வாடை அதிகம் இருக்காது மற்றும் சாப்பிடும் போது நண்டு மென்மையாக இருக்கும்.) பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம், சோம்பு, மல்லி சேர்த்து லேசாக வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து, அதோடு தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஓர் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, கரம் மசாலா, தக்காளி, உப்பு சேர்த்து கிளறி, மிதமான தீயில் 3 நிமிடம் மூடி வைக்க வேண்டும். பின் அதில் நண்டு சேர்த்து பிரட்டி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து, 15 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், செட்டிநாடு ஸ்பைசி நண்டு கிரேவி ரெடி!!!

மட்டன் மசாலா குழம்பு
















தேவையான பொருள்கள்

மட்டன் - அரை கிலோ
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 15 பல்
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கடுகு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 100 மில்லி
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 150 கிராம்
கொத்தமல்லி - சிறிதளவு


செய்முறை

மட்டனை முதலில் நன்கு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். பின்பு அதை நன்கு ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். இஞ்சி, பூண்டையும் விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். மற்றொரு சட்டியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் விட்டு தாளிக்க வேண்டும். பின்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு இஞ்சி, பூண்டு கலவையை, பச்சைத்தன்மை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

இதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து, மீண்டும் நன்கு வதக்க வேண்டும். பின்பு அரைத்த மிளகாய், சீரக கலவையை சேர்க்க வேண்டும். பின்னர் வேகவைத்த இறைச்சியை, தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்பு தேவையான அளவு உப்பு போட்டு, பதம் பார்த்து இறக்கி விட்டு, நறுக்கிய கொத்தமல்லியை தூவ வேண்டும். 

பெப்பர் மட்டன் ரோஸ்ட்
























தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

மசாலாவிற்கு...

தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2-3
கறிவேப்பிலை - சிறிது
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது

வறுப்பதற்கு...

மிளகு - 2 டீஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்


செய்முறை

முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவி, குப்பரில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூடி 5-6 விசில் விட்டு, குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சோம்பு மற்றும் மிளகை ஒரு வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, உப்பு சேர்த்து, வேக வைத்துள்ள மட்டனை அப்படியே வாணலியில் போட்டு, தீயை அதிகரித்து, மட்டன் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் கொத்தமல்லித் தூவி கிளறி இறக்கினால், செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட் ரெடி!!!

Wednesday, January 17, 2018

காரைக்குடி நண்டு வறுவல்






















தேவையானவை

 நண்டு – 5
 சின்ன வெங்காயம் – 50 கிராம்
 சிகப்பு மிளகாய் – 10
மல்லி  – 2 தேக்கரண்டி
 நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
 சீரகம் – 1 தேக்கரண்டி
 பெரிய வெங்காயம் – 2
 பூண்டு – 5 பல்
 இஞ்சி – 1 அங்குலத் துண்டு
 தக்காளி – 1
 உப்பு – தேவையான அளவு

செய்முறை :


முதலில் நடுத்தரமான அளவு நண்டுகள் 5 எடுத்து ஓடு நீக்கி, சுத்தம் செய்து கொள்ளவும்.

பின் இஞ்சி, பூண்டு, சிகப்பு மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம், மல்லி  ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.

இதனுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், நண்டுகளைப் போடவும் பிறகு நண்டுகள் நன்கு வெந்து, வாசனை வந்த பின் இறக்கவும்.

காரைக்குடி கோழி வறுவல்









தேவையான பொருட்கள்:

சிக்கன் 1 கிலோ
சின்ன வெங்காயம் 20 ( அம்மிகல்லில் நசுக்கியது)
தக்காளி 1 ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 3 மேஜைக்கரண்டி
வரமிளகாய் 12
பூண்டு பற்கள் 10 ( அம்மியில் நசுக்கியது)
இஞ்சி அரை இன்ச் ( அம்மி கல்லில் நசுக்கியது)
மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
கறிவேப்பில்ல 2 கொத்து
கொத்தமல்லி இலைகள் 2 மேஜைக்கரண்டி ( பொடியாக நறுக்கியது)
சோம்பு 1/2 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி ( அம்மிகல்லில் நசுக்கியது)
எலுமிச்சை பழச்சாறு 3 மேஜைக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
மரசெக்கு கடலெண்ணய் 4 மேஜைக்கரண்டி

செய்முறை:

1. முதலில் சிக்கனை நன்றாக சுத்தமாக கழுவி கொள்ளவும். பிறகு அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் , மஞ்சள்தூள் , எலுமிச்சை பழச்சாறு , உப்புத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

2. சட்டியில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சோம்பை போட்டு நன்றாக வதக்கவும். அதில் பொடியாக கிள்ளிய வரமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும். கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

3. பிறகு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் அம்மிகல்லில் நசுக்கிய பூண்டையும் , இஞ்சியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

4. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

5. இப்பொழுது ஊறவைத்தள்ள சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.

6. அதில் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க 1 கப் தண்ணீர் சேர்த்து
நன்றாக சிறுதீயில் வேக வைக்கவும்.

7. சிக்கன் நன்றாக வெந்ததும் அதில் கொத்தமல்லி இலைகளை தூவி நல்ல ட்ரை யாகும் வரை வதக்கி இறக்கவும் 

மட்டன் பிரட்டல்























தேவையான பொருட்கள்

வெள்ளாட்டு கறி 500 கிராம்
சின்ன வெங்காயம் 1 கப் ( விழுதாக அம்மிகல்லில் நசுக்கியது)
இஞ்சி விழுது 1 மேஜைகரண்டி
பூண்டு 1/4 கப் ( விழுதாக அம்மிகல்லில் நசுக்கியது)
பச்சை மிளகாய் 16 ( அம்மிகல்லில் மையாக நசுக்கியது)
கல் உப்பு தேவையான அளவு
கறிவேப்பில்ல கொஞ்சமாக
பட்டை 2 இன்ச்
கிராம்பு 6
சோம்பு 1/2 தேக்கரண்டி
குருமிளகு 1 மேஜைக்கரண்டி ( விழுதாக அம்மிகல்லில் நசுக்கியது)
கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி
மரசெக்கு கடலெண்ணய் 4 மேஜைக்கரண்டி

செய்முறை


1. இப்பொழுது அதில் 2 மேஜைக்கரண்டி மரசெக்கு கடலெண்ணய் விட்டு அதில் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும் அதில் சோம்பை போட்டு பொரிய ஆரம்பித்ததும் பட்டை, கிராம்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

2. பிறகு அதில் கறிவேப்பில்ல சேர்த்து  நன்றாக வதக்க வேண்டும் , அதில் ஆட்டிறைச்சி கொழுப்பை சேர்த்து  நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.

4. இப்பொழுது அதில் இஞ்சி விழுதை சேர்த்து  நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

5. பிறகு அதில் அம்மிகல்லில் நசுக்கிய பூண்டையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

6. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பில்ல சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

7. அதன் பிறகு அதில் அம்மி கல்லில் மையமாக விழுதாக அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து  நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.

8. இப்பொழுது அதில் மையாக அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து  நன்றாக வதக்க வேண்டும்.

9.அதில் நன்றாக சுத்தமாக கழுவி வைத்துள்ள ஆட்டிறைச்சியை சேர்த்து   அதில் தேவையான அளவிலான கல் உப்பை சேர்த்து  நன்றாக வதக்க வேண்டும்.

10. பிறகு அதில் 2 கப் தண்ணீர்சேர்த்து  நன்றாக மூடியை மூடி கறி வேகும் வரை அடுப்பை சிறுதீயிலே வைத்து வேகவைத்து கொள்ள வேண்டும். கவனம் தேவை கறி அடிபிடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தண்ணீர் வற்றினால் மறுபடியும் சேர்த்து கொள்ள வேண்டும்.

11. கறி நன்றாக வெந்த உடன் அதில் அரைத்து வைத்துள்ள குரு மிளகு சேர்த்து   நன்றாக சிறுதீயிலேயே கொதிக்க வைக்க வேண்டும் .

12. அதில் அவ்வபோது சிறிய சிறிய மரசெக்கு கடலெண்ணய் விட்டு  நன்றாக சிறு தீயிலேயே வதக்க வேண்டும் , பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்

கோத்தகிரி மட்டன் பிரியாணி
























தேவையான பொருட்கள்

சீரகசம்பா அரிசி 5 கப்
வெள்ளாடு ஆட்டிறைச்சி 1 கிலோ
மட்டன் கொழுப்பு 1/4 கிலோ
பெரிய வெங்காயம் 3 ( பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் 26 ( அம்மிகல்லில் விழுதாக மையாக நசுக்கியது)
தக்காளி 3 ( விழுதாக அரைத்தது)
இஞ்சி-பூண்டு விழுது 1/2 கப்
பச்சை மிளகாய் 7 ( அம்மிகல்லில் விழுதாக நசுக்கியது)
பட்டை 1 இன்ச்
கிராம்பு 4
ஏலக்காய் 5
தயிர் 1 கப்
கொத்துமல்லி இலைகள் 1 கப்
புதினா இலைகள் 1 கப்
தண்ணீர் 8 கப்
வரமிளகாய் தூள் 3 மேஜைக்கரண்டி
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
மரசெக்கு கடலெண்ணய் 1/2 கப்
பசு வெண்ணை 1/4 கப்

செய்முறை

1. இப்பொழுது பிரஷர் குக்கரில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் பசு வெண்ணையை சேர்த்து நன்றாக காய்ந்ததும் அதில் பட்டை , கிராம்பு , ஏலக்காய் , பிரிஞ்சி இலை சேர்த்து  நன்றாக வதக்க வேண்டும்.

2. அதில் மட்டன் கொழுப்பை சேர்த்து  நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.

3. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து அதனுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து அதை நன்றாக பொன்னிறமாக வதக்க வேண்டும்.

4. அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

5. அதில் தக்காளி அரைத்த விழுதையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

6. இப்பொழுது அதில் தயிர் மற்றும் பச்சை மிளகாய் விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

7. அதில் வெள்ளாட்டு கறியை சேர்த்து அதனுடன் தேவையான அளவிலான உப்புத்தூள் மற்றும் மசாலா பொடிகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

8. அதில் தண்ணீர்சேர்த்து  நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

9. அதில் ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து  அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகள் , பொடியாக நறுக்கிய புதினா இலைகள் சேர்த்து பிரஷர் குக்கரின் மூடியை மூடி நன்றாக குறைந்தபட்சமாக 7 விசில் வரை விட்டு. அதன் பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

மதுரை மீன் குழம்பு






















தேவையான பொருட்கள்

வஞ்சிரம் மீன் துண்டுகள் 12
சின்ன வெங்காயம் 1 கப் ( பொடியாக நறுக்கியது )
தக்காளி 1/2 கப் ( பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் 3 ( பொடியாக நறுக்கியது )
பூண்டு பற்கள் 12 ( அம்மியில் நசுக்கியது )
கடுகு 3/4 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
வெந்தயம் 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி

மசாலா அரைக்க

புளி 1 எலுமிச்சை அளவு
தேங்காய் பால் 2 கப்
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் 2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1 1/2 தேக்கரண்டி
கல் உப்பு தேவையான அளவு

செய்முறை

1. மீனை சுத்தம் செய்து கழுவி வைக்கவும். மஞ்சள்தூள் மற்றும் உப்புத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து மீனை சுத்தமாக கழுவி எடுத்து வைக்கவும்.

2. புளியை சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து நன்றாக கரைத்து புளி கரைசலை எடுக்கவும்.

3. சட்டியை  அடுப்புல வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து நன்கு வெடித்ததும், அதில் சீரகம் சேர்த்து நன்கு பொரிந்ததும். அதில் வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

4. இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் அம்மியில் நசுக்கிய வைத்துள்ள பூண்டையும் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

5. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து  நன்றாக வதக்க வேண்டும். அது நன்றாக கூழ் போல் ஆனதும்.

6. சிறிய பாத்திரத்தை எடுத்து அதில் தேங்காய் பால் மற்றும் புளித் தண்ணீர் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள்தூள், மிளகு தூள், மற்றும் தேவையான அளவு கல் உப்பை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

7. இப்பொழுது இந்த கரைத்த கரைசலை  மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இந்த கலவையை மண்சட்டியில் ஊற்ற வேண்டும். இந்த கலவை நன்றாக கொதித்து பச்சை வாசனை போனதும் அதில் மீன் துண்டங்களை போட்டு கிளறாமல் சிறு தீயில் 5 நிமிடங்கள் கழித்து இறக்கி வைக்கவும்.