Wednesday, March 23, 2016

வெந்தய மோர்க் குழம்பு




தேவையானவை

புளிப்பு மோர்-2கப்
வறுக்க வேண்டியவைகள் மிளகாய் வற்றல்- 2
தனியா 1டீஸ்பூன்
வெந்தியம்1டீஸ்பூன்,
அரிசி 1’டீஸ்பூன்,
துவரம் பருப்பு 1டீஸ்பூன்.
இவைகளை  சிறிது எண்ணெயில்  சிவக்க வறுத்துக்  கொள்ளவும்.

தேங்காய்த் துருவல் 2டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் சிறிது.
தாளிக்க- எண்ணெய்,
கடுகு அரை டீஸ்பூன்,
சிறிது மஞ்சள்பொடி,
ருசிக்குஉப்பு,
கறி வேப்பிலை சிறிது.

செய்முறை..

வறுத்த சாமான்களுடன் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து,    
உப்பு, மஞ்சள்பொடி பெருஙகாயம்  திட்டமாகச்  சேர்த்துமோரில் கரைக்கவும்.    எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து நிதானதீயில்  பால் பொங்கும் பதத்தில்,
மோர்க் கலவையைக் கொதிக்க வைத்து இறக்கவும்.  
காய்கள் விருப்பப்படி  சேர்க்கவும். காரமும் அப்படியே.
பருப்புத் துவையல் சாதங்கள், பொடிவகை சாதங்களுடன்,
சேர்த்துச் சாப்பிடநன்றாக இருக்கும்.
இதையே வறுத்தரைத்த வெந்தயப் பொடி, மிளகாய்ப் பொடி,  ஒருடீஸ்பூனகடலைமாவு,
பெருங்காயம்  உப்பு,  முதலியவற்றை புளிப்பு மோரில் கரைத்து ,
தேங்காயெண்ணெயில் கடுகை தாளித்து ஒரு கொதிவிட்டு  அவசரத்திற்கும் தயாரிக்கலாம்.
காய்கள் போடாவிட்டாலும் பரவாயில்லை.

Sunday, March 20, 2016

பருப்பு சாம்பார்



தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
புளி தண்ணீர் - 1/2 கப் 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
கடுகு - 1 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
பெருங்காயத்தூள் - சிறிது 
கொத்தமல்லி - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 


செய்முறை: முதலில் துவரம் பருப்பை 1/2 மணிநேரம் ஊற வைத்து,
பின் அதனை கழுவி குக்கரில் போட்டு, 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 
மஞ்சள் தூள் மற்றும் தக்காளியைப் போட்டு, மூடி, 2-3 விசில் விட்டு இறக்கவும். விசில் போனதும், அதில் உள்ள நீரை ஓரளவு வடிகட்டி, 
வேக வைத்த பருப்பு மற்றும் தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஓரளவு கடைந்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். 
பிறகு வெங்காயம் மற்றும் உப்பை போட்டு வதக்கவும். வதங்கியதும், அதில் கடைந்து வைத்துள்ள பருப்பை போட்டு ஒரு முறை கொதிக்க விடவும். பின்னர் அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து, வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் ஊற்றி, 
பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். 
(அதிகமாக தண்ணீர் ஊற்றி விட வேண்டாம். ஏனெனில் இன்னும் புளித் தண்ணீர் உள்ளது.) பச்சை வாசனை போனதும், அதில் புளியை ஊற்றி, உப்பு அளவை சரிபார்த்து, நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லியை தூவவும். 

Thursday, March 17, 2016

செட்டிநாடு கோழி குழம்பு



























தேவையான பொருள்கள்:-
  •  கோழி – கிலோ
  • கிராம்பு  2
  • பட்டை – 2
  • சீரகத்தூள் – ஸ்பூன்
  • சோம்புத்தூள்- ஸ்பூன்
  • மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன்
  • மிளகாய்த் தூள்- ஒன்றரை ஸ்பூன்
  • மல்லித்தூள்  இரண்டு ஸ்பூன்
  • முந்திரிபருப்பு – நூறு கிராம்
  • தேங்காய் – 1 மூடி
  • உப்பு – தேவையான அளவு
  • இஞ்சி/பூண்டு விழுது – ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 4
  • தக்காளி – 250 கிராம்
  • பெரியவெங்காயம் – 250 கிராம்
  • எண்ணெய் – 250கிராம்
முதலில் மசாலாவை அரைத்துக் கெள்ளவும்
மஞ்சள் தூள் அரை ஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன்சோம்புத்தூள் ஒரு ஸ்பூன்மல்லித்தூள் இரண்டு ஸ்பூன், மிளகாய்த் தூள் ஒன்றரை ஸ்பூன்,தேங்காய்கசகசா,முந்திரிபருப்பு நூறு கிராம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
 செய்முறை;-
  •  அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை,  மிளகாய் முதலியவற்றை போட்டு வதக்கவும்.  அத்துடன்வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
  • இப்போது இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றைப் போட்டு அதனுடன் (சுத்தம் செய்து நறுக்கிய)  கோழியை சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நெருப்பைகுறைத்து வைத்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.

Wednesday, March 16, 2016

கத்தரிக்காய் புளிக்குழம்பு



தேவையானப் பொருள்கள்:
கத்தரிக்காய்_7 லிருந்து 10 க்குள்
புளி_சிறு எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
பூண்டு_பாதி அல்லது முழு பூண்டு
மிளகாய்த்தூள்_3 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்
வடகம்
சீரகம்
கடலைப் பருப்பு
வெந்தயம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை
செய்முறை:
புளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.ஊறியதும் தேவையானத் தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.
குழம்பு சட்டியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி புளிக்கரைசலை ஊற்றி,உப்பு,காரம் சரிபார்த்து மூடி கொதிக்க விடவும்.
கொதி வருவதற்கிடையில் கத்தரிக்காயை விருப்பமான வடிவத்தில் நறுக்கி நீரில் போட்டு வைக்கவும்.
கொதி வந்ததும் கத்தரிக்காயை குழம்பில் சேர்த்துக் கலக்கி விட்டு மீண்டும் மூடி கொதிக்க வைக்கவும்.
குழம்பு நன்றாகக் கொதித்து,காய் வெந்து,வாசனை வந்து,எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

வத்தக் குழம்பு



தேவையானவை:
வெண்டைக்காய்_10
சின்ன வெங்காயம்_2
முழு பூண்டு_1
வறுத்து அரைக்க:
கொத்துமல்லி விதை_2 கைப்பிடி
சுண்டைக்காய் வத்த‌ல்_10 க்குள் (அ) மணத்தக்காளி வத்தல்_ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_4
சின்ன வெங்காயம்_7
தக்காளி_பாதி
மஞ்சள்_சிறுதுண்டு
மிளகு_5
சீரக்ம்_சிறிது
வெந்தயம்_சிறிது
துவரம்பருப்பு_சிறிது(விருப்பமானால்)
தேங்காய்ப் பத்தை_2
புளி_பெரிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை_சுமார் 10 இலைகள்
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்
வடகம்
சீரகம்
கடலைப்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
வெறும் வாணலியை அடுப்பிலேற்றி சூடாகியதும் முதலில் கொத்துமல்லி விதையைப் போட்டு வறுக்கவும்.அது பாதி வறுபடும்போதே  துவரம்பருப்பு, மிளகு சேர்த்து வறுக்கவும்.
இவை வறுபட்டதும் கூடவே காய்ந்த மிளகாய், சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை  சேர்த்து வறுத்து தனியாக‌ வைக்கவும்.
அதே வாணலில் தேங்காய்த் துருவலைப் போட்டு சிவக்க வறுத்து அதனுடன் புளியைச் சேர்த்து வதக்கி,தனியாக‌ வைக்கவும்.
மீண்டும் வாணலை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விட்டு முதலில் வெங்காயம் அடுத்து தக்காளி என சேர்த்து வதங்கியதும் இறக்கவும்.
இவை ஆறியதும் முதலில் கொத்துமல்லிக் கலவையை மிக்ஸியில் போட்டுப்  பொடிக்கவும்.இவை நன்கு பொடிந்ததும் அதனுடன் புளி&தேங்காய்த் துருவல் சேர்த்துப் பொடிக்கவும்.அடுத்து வெங்காயம்,தக்காளியைத் தனியாக அரைத்து வைக்கவும்.அல்லது இவை எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் தெளித்து மைய அரைத்தெடுக்கவும்.
குழம்பு செய்ய‌ வெங்காயம் நறுக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும். வெண்டைக்காயின் இரு முனைகளையும் நறுக்கிவிட்டு வைக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டு ,வெண்டைக்காயை நன்றாக வதக்கித் தனியாக வைக்கவும்.
பிறகு அந்தப் பாத்திரத்திலேயே மேலும் சிறிது எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து பொடித்துவைத்துள்ள பொடி,அரைத்துவைத்துள்ள வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கி தேவையானத் தண்ணீர் விட்டு,உப்பு போட்டு மூடி கொதிக்க வைக்கவும்.
குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் மிதக்கும் சமயம் வெண்டைக்காயைச் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.

சிக்கன் வறுவல்



தேவையானப் பொருள்கள்:
சிக்கன்_250 கிராம்
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_3 பற்கள்
சின்ன வெங்காயம்_2
தக்காளி_பாதி
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
தேங்காய்ப் பால்_2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு_2 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
வறுத்துப் பொடிக்க:
கொத்துமல்லி விதை_1 டீஸ்பூன்
சீரகம்_1/4 டீஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
முந்திரி_2
சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்_1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் சிக்கனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் தயிர்,ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்துக்கொண்டு அதில் சிக்கனைப் போட்டுப் பிரட்டி ஒரு 5 நிமிடம் ஊற வைக்கவும்.பிறகு தண்னீர் ஊற்றி பச்சை வாடை போகும் வரை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் ஒட்டப் பிழிந்து ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.அதில் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்,பாதி எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாகப் பிசைந்து சுமார் 1/2 மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.
வெறும் வாணலியில் கொத்துமல்லி விதையையும்,சீரகத்தையும் தனித்தனியே வறுத்து, ஆறியதும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும். வெங்காயம்,தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.இஞ்சி,பூண்டைத் தட்டி வைக்கவும்.ஒரு  கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அடுத்து இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.பிறகு சிக்கனைச் சேர்த்து வதக்கவும்.அதுவும் நன்றாக வதங்கியபின் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.இப்போது தேங்காய்ப் பால் சேர்த்து காரம்,உப்பு சரிபார்த்து மூடி மிதமானத் தீயில் வேகவிடவும்.தண்ணீர் சேர்ப்பதாக இருந்தால் ஒரு டீஸ்பூன் சேர்க்கலாம்.சிக்கனில் இருந்து வெளிவரும் நீரே அது வேக‌ போதுமானதாக இருக்கும்.சிக்கன் பாதி வெந்த நிலையில் வறுத்துப் பொடித்த கொத்துமல்லிப் பொடியைப் போட்டுக் கிளறவும்.(மிளகாய்த்தூளில் கொத்துமல்லி சேர்த்திருந்தாலும் புதிதாக வறுத்துப் பொடித்துப் போடும்போது வாசனையும்,சுவையும் தூக்கலாக இருக்கும்.)
சிக்கன் நன்றாக வெந்து தண்னீர் எல்லாம் வற்றிய  பிறகு எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி இலைத் தூவிக் கிளறி இறக்கவும்.புதினா வாசனைப் பிடித்தமானால் கொத்துமல்லியுடன் இதையும் சேர்த்துப் போடலாம்

நண்டு வறுவல்



தேவையானப் பொருள்கள்:
நண்டு_1 பெரியது
சின்ன வெங்காயம்_7
பூண்டு_பாதி
தக்காளி_1
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
செய்முறை:
நண்டை சுத்தம் செய்து நீரை வடித்து வைக்கவும்.
வாங்கும் இடத்திலேயே சுத்தம் செய்து நறுக்கி வந்துவிட்டால் வீட்டிற்கு வந்து கழுவி வேலையை சுலபமாக முடித்துவிடலாம்.
வெங்காயம்,தக்காளி,பூண்டு இவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு அடி அகலமானக் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கவும். காரம் விரும்புவோர் மிளகாய்த்தூளை கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.
அடுத்து நண்டு சேர்த்துக் கிளறிவிடவும்.மசாலா நண்டு முழுவதும் படுமாறு  நன்றாகக் கிளறிவிடவும்.
பிறகு 1/2 டம்ளர் அளவிற்குத் தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும்.
இடையிடையே பிரட்டி விடவும்.
தண்ணீர் முழுவதும் வற்றி,நண்டு வெந்து வாசனை வந்த பிறகு இறக்கவும்.
இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாகப் பொருந்தும்.
நண்டு கிரேவியாக வேண்டுமானால் மேலும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
நண்டு வறுவலை வெங்காயம்,தக்காளி,பூண்டு இவை சேர்க்காமலும் சுவையாகச் செய்யலாம்.
அதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து நண்டு,மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் வற்றும் வரை அடிக்கடி கிளறிவிட்டு வேக வைக்க வேண்டும்.

மசாலா வறுத்து அரைத்த மீன் குழம்பு




தேவையானவை:

மீன்_1
புளி_சிறு எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம்_7
தக்காளி_பாதி
பூண்டு_பாதி

வறுத்து அரைக்க:
கொத்துமல்லி விதை_2 கைப்பிடி
காய்ந்த மிளகாய்_5 (காரத்திற்கேற்ப கூட்டிக் குறைத்துக்கொள்ளவும்)
மிளகு_5
சீரகம்_1/2 டீஸ்பூன்
மஞ்சள்_சிறு துண்டு
வெந்தயம்_சிறிது
தேங்காய் பூ_2 டீஸ்பூன்

தாளிக்க:
நல்லெண்ணெய்
வடகம்
வெந்தயம்
கறிவேப்பிலை

செய்முறை:
மீனை சுத்தம் செய்து,துண்டுகளாக்கி,உப்புபோட்டு நன்றாகக் கழுவிவிட்டு நீரை வடிய வைக்கவும்.
புளியை மூழ்கும் அளவு தண்ணிரில் ஊற வைக்கவும்.
வறுத்து அரைக்க வேண்டியதை(மஞ்சள் தவிர்த்து)வெறும் வாணலில் தனித்தனியாக சிவக்க வறுக்கவும்.ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடிக்கவும்.அல்லது தண்ணீர்விட்டு மைய அரைத்தெடுக்கவும்.
வெங்காயம்,பூண்டு உரித்து விருப்பம்போல் அரிந்து/தட்டி வைக்கவும்.தக்காளி நறுக்கி வைக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டு,தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு,வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் புளித்தண்ணீரைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றி,பொடித்து வைத்துள்ள பொடி/அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து,உப்பு போட்டு மூடி நன்றாக கொதிக்க வைக்கவும்.
குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்தாற்போல் வரும்போது மீன் துண்டுகளைச் சேர்த்து,மிதமானத் தீயில் கொதிக்க விடவும்.தீ அதிகமானால் மீன் உடைந்துவிடும்.

ஒரு 5 நிமி கொதித்த பிறகு மீன் துண்டுகளைத் திருப்பிவிட்டு,மேலும் ஒன்றிரண்டு நிமி கொதிக்க விட்டு இறக்கிவிடவும்.

பொடி சாம்பார்




தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு: 1/2 கப்
கேரட்_1
கத்தரிக்காய்_1
முருங்கைக்காய்_1
சின்ன வெங்காயம்_5
தக்காளி_1
பூண்டு_ 2 பற்கள்
புளி_பெரிய கோலிக்குண்டு அளவு
மிளகாய் தூள்_ 21/2 டீஸ்பூன்
மஞள் தூள்_  1/4 டீஸ்பூன்
கொத்துமல்லி தழை_ 1 கொத்து

தாளிக்க:
கடுகு_ 1/4 டீஸ்பூன்
உளுந்து_ 1/4 டீஸ்பூன்
சீரகம்_ 1/4 டீஸ்பூன்
வெந்தயம்_  சிறிது
பெருங்காயம்_சிறிது
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_ 1/2 ஈர்க்கு

செய்முறை:
முதலில் பருப்பை நன்றாக கழுவி நீரை வடித்துவிட்டு அது மூழ்கும் அளவை விட அதிகமாகவே தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள்,  2 சொட்டு விளக்கெண்ணெய் (அ) நல்லெண்ணெய் சேர்த்து பருப்பு குழையும் வரை வேக வைக்கவும். காய்களை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும்.இதில் உள்ள காய்களைத்தான் போடவேண்டும் என்பதில்லை.பிடித்தமான காய்களை போட்டுக்கொள்ளலாம். வெங்காயத்தை நீள வாக்கில் அரிந்து வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.தக்காளியைத் துண்டுகளாக்கவும்.புளியை நீரில் ஊறவத்து  1/2 கப் அளவிற்கு கரைத்து வைக்கவும்.பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் கடுகு,உளுந்து, சீரகம்,வெந்தயம்,பெருங்காயம்,காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி வதக்கி அதன்பிறகு காய்களை வதக்க வேண்டும்.சிறிது வதங்கியதும் மிள்காய்த் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி புளித்தண்ணீரை விட்டு கொதிக்கவிடவும்.காய் வெந்ததும் பருப்பைக் கொட்டி கலந்து உப்பு போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.கடைசியில் கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.

Sunday, March 13, 2016

வான்கோழி குழம்பு

Vaan Kozhi Kuzhambu


தேவையான பொருட்கள்: 
வான்கோழி - 1/2 கிலோ 
உப்பு - தேவையான அளவு 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
தண்ணீர் - 1 கப் 
மசாலாவிற்கு... 
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
தக்காளி - 3 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
மல்லித் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன் 
சோம்பு பொடி - 2 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிது 

செய்முறை: 
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வான்கோழி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் அடுப்பை அணைத்து, விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளி விழுதை சேர்த்து, 15 நிமிடம் எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் கிளறி, உப்பு மற்றும் அனைத்து மசாலா பொடியையும் தூவி கிளற வேண்டும். பின்பு அதில் வேக வைத்துள்ள வான்கோழியை நீருடன் ஊற்றி கிளறி, 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், வான்கோழி குழம்பு ரெடி!!!

வாத்துக்கறி குழம்பு

Tasty Duck Curry Recipe

தேவையான பொருட்கள்: 
வாத்துக்கறி - 1/2 கிலோ 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 
பூண்டு - 7-10 பற்கள் 
தக்காளி - 1 (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிது 
எண்ணெய் - தேவையான அளவு 
சீரகம் - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 
முதலில் வாத்துக்கறியை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி, அத்துடன் வாத்துக்கறியை சேர்த்து கிளறி, மூடி வைத்து சிறிது நேரம் வேக வைக்க வேண்டும். பிறகு அதில் 2-4 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும். கறியானது நன்கு வெந்து, கிரேவி போன்று சற்று கெட்டியானதும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், வாத்துக்கறி குழம்பு ரெடி!!!

முட்டை குழம்பு



Kaada Muttai Kuzhambu

தேவையான பொருட்கள்: 
முட்டை - 5 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
கறிவேப்பிலை - சிறிது 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
தக்காளி - 2 (அரைத்தது) 
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) 
உப்பு - தேவையான அளவு 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
கரம் மசாலா - 2 டீஸ்பூன் 
தண்ணீர் - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிது 

செய்முறை:

முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு, 
தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கி, குளிர்ந்த நீரில் பலமுறை கழுவி, ஓட்டை உரித்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி விட்டு, பச்சை மிளகாய் மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து கிளறி விட வேண்டும். பின்பு தக்காளியை சேர்த்து எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கிவிட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பு நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள காடை முட்டையை போட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லித் தூவி இறக்கினால், காடை முட்டை குழம்பு ரெடி!!!

கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு

Brinjal Coconut Pulikuzhambu Recipe

தேவையான பொருட்கள்:

நீளமான கத்திரிக்காய் - 2 (நறுக்கியது) 
தேங்காய் - 1/2 கப் (துருவியது) 
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
வெந்தயம் - 1/4 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
கறிவேப்பிலை - சிறிது 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பூண்டு - 10 பற்கள் 
குழம்பு மிளகாய் தூள் - 3 டேபிள் ஸ்பூன் 
தண்ணீர் - தேவையான அளவு
புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
சர்க்கரை - 1 டீஸ்பூன்

செய்முறை: 
முதலில் தேங்காயை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்பு அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி, பின் கத்திரிக்காய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் மசாலா பொடிளை சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர், புளிச்சாறு, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, குறைவான தீயில் 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். இறுதியில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி, 10 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கத்திரிக்காய் தேங்காய் புளிக்குழம்பு ரெடி!!!


வெண்டைக்காய் மண்டி

Chettinad Style Vendakkai Mandi

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 1 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது) 
சின்ன வெங்காயம் - 1 கப் 
பூண்டு - 8 பல் (நறுக்கியது) 
தக்காளி - 1 
புளி - 1 எலுமிச்சை அளவு
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
உப்பு - தேவையான அளவு 
ஊற வைத்து கழுவிய அரிசி நீர் - சிறிது

தாளிப்பதற்கு... 
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
வெந்தயம் - 1/4 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2 
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை: 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, பெருங்காயத் தூளையும் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர் அத்துடன் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்பு அதில் வெண்டைக்காயை சேர்த்து, அதில் உள்ள பிசுபிசுப்புத்தன்மை போகும் வரை வதக்க வேண்டும். அதற்குள் ஊற வைத்து கழுவிய அரிசி நீரில் புளியை சிறிது நேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, வெண்டைக்காய் பாதியாக வெந்ததும் அத்துடன் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், வெண்டைக்காய் மண்டி ரெடி!!!

Thursday, March 3, 2016

பர்மா கோழி சாப்ஸ்

















தேவையான பொருட்கள்

கோழி இறைச்சி  1/2 கிலோ

அரை வேக்காடு போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வறுத்து அரைக்க

வரமிளகாய் -6

இஞ்சி பூண்டு -சிறிதளவு

மிளகு-1 டீஸ்பூன்

சீரகம் -1டீஸ்பூன்

சின்ன வெங்காயம் -10

செய்முறை

வாணலியில்  எண்ணெய் காய வைத்து 1 பெரிய வெங்காயம் அரிந்து போட்டுத் தாளிக்கவும்.

ஒரு தக்காளி சேர்க்கவும். அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்துத் தேவையான உப்பும் மஞ்சள்தூளும் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

இப்போது லெக் பீஸைச் சேர்த்து நன்றாக வதக்கவும். மல்லித்தழை போட்டு இறக்கவும்.

மராட்டா கோழிக் குழம்பு

மராட்டா  கோழிக் குழம்பு
























தே​வையான​ ​பொருட்கள்:

வறுத்து அரைக்க:

வர கொத்தமல்லி ——–2 டீஸ்பூன்

வர மிளகாய் ———6

சீரகம் ————-1 டீஸ்பூன்

இவற்றை 1ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து அரைத்துக் கொள்ளவும்.

கோழிதுண்டுகள் ———–1/2 கிலோ

இஞ்சி பூண்டு விழுது ——-2 டீஸ்பூன்

தேங்காய் ———4 டேபிள் ஸ்பூன்

வறுத்து அரைத்ததுடன் தேங்காயும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.


செய்முறை:

ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி 1 பெரிய வெங்காயத்தை நறுக்கி போட்டு வதக்கவும்.

தக்காளி 2 போட்டு வதக்கவும்

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் ,
கோழியை சேர்த்து வதக்கவும்
அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்,
உப்பு மஞ்சத்தூள் போடவும். தேவையான தண்ணீர் விடவும்.

குக்கரில் 3 விசில் வைத்து இறக்கவும். மேலே கொத்தமல்லி தழை போடவும்.