Thursday, February 18, 2016

முருங்கைக்காய் சாம்பார்


Murungakkai/Drumstick Sambar: Iyer Style

தேவையான பொருட்கள்: 
முருங்கைக்காய் - 3 (துண்டுகளாக வெட்டியது) 
துவரம் பருப்பு - 1/3 கப் 
புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு 
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு... 
எண்ணெய் - 2 1/2 டீஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
வெந்தயம் - 1/2 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 

செய்முறை: முதலில் துவரம் பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் புளியை 1 கப் சுடுநீரில் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கி, நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் முருங்கைக்காயைப் போட்டு, 1 நிமிடம் வதக்கி, பின் அதில் சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு, மஞ்சுள் தூள் சிறிது சேர்த்து 1 நிமிடம் கிளறி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, முருங்கைக்காயை வேக வைக்க வேண்டும். முருங்கைக்காயானது முக்கால் பதம் வெந்ததும், அதில் 1 கப் புளிச்சாறு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். அதற்குள் முருங்கைக்காயும் நன்கு வெந்துவிடும். இறுதியில் அதில் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 5-6 நிமிடம் மிதமான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், முருங்கைக்காய் சாம்பார் ரெடி!!!

வெண்டைக்காய் புளிக்குழம்பு

Lady's Finger Kulambu Recipe With Coconut

தேவையான பொருட்கள்: 
வெண்டைக்காய் - 10-15 (துண்டுகளாக்கப்பட்டது) 
சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்தது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
பூண்டு - 6 பற்கள் 
புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன் 
(எலுமிச்சை அளவு புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்) 
உப்பு - தேவையான அளவு 
சர்க்கரை - 1 டீஸ்பூன் 

தாளிப்பதற்கு... 
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2 
கறிவேப்பிலை - சிறிது 
நல்லெண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன் 

வறுத்து அரைப்பதற்கு... 
எண்ணெய் - 1 டீஸ்பூன்
மல்லி - 2 டேபிள் ஸ்பூன் 
வரமிளகாய் - 6-10
துருவிய தேங்காய் - 1/2 கப் 

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளித்து, பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின்பு அதில் வெண்டைக்காயை சேர்த்து 7-10 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அதில் உப்பு, சர்க்கரை, அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும். பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெடி!

ஆந்திரா மட்டன் குழம்பு

Simple Andhra Style Mutton Curry

தேவையான பொருட்கள்: 
மட்டன் - 1/2 கிலோ 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன் 
தக்காளி - 1 (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு... 
கசகசா - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன் 
மிளகு - 4 
மல்லி - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2 
பச்சை ஏலக்காய் - 3 

செய்முறை: முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டனைப் போட்டு, 2 கப் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 6 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கசகசா, சோம்பு, மிளகு, மல்லி, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் மற்றும் பாதி மிளகுத் தூளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் தக்காளி மற்றும் மட்டனை சேர்த்து, தீயை அதிகரித்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்கி, அத்துடன் உப்பு, மசாலாப் பொடிகளை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கிளறி, வடிகட்டி வைத்துள்ள மட்டன் நீர் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். குழம்பானது கொதித்து ஓரளவு கெட்டியாகும் போது, அதில் மிளகுத் தூளை தூவி கிளறி இறக்கி, கொத்தமல்லியை மேலே தூவினால், ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு ரெடி!!!

திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி



தேவையான பொருட்கள்: 
நெய் - 2 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் 
பாசுமதி அரிசி - 2 கப் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 3
 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
கொத்தமல்லி - 1/2 கப் 
புதினா - 1/2 கப் 
கெட்டியான தேங்காய் பால் - 1 கப் 
தண்ணீர் - 2 கப் 
உப்பு - தேவையான அளவு 

ஊற வைப்பதற்கு... 
சிக்கன் - 1/2 கிலோ 
கெட்டியான புளிக்காத தயிர் - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 

பிரியாணி மசாலா பொடிக்கு... 
சோம்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன் 
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 4 
அன்னாசிப்பூ - 1
கிராம்பு - 4 

செய்முறை: 

முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி, பின் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பிரியாணி மசாலா பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு பாசுமதி அரிசியை கழுவி, நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும். பின் ஊற வைத்துள்ள சிக்கனை அதில் போட்டு 5 நிமிடம் நன்கு கிளறி, சிக்கனில் மசாலா சேரும் வர பிரட்டி விட்டு, தட்டி கொண்டு மூடி 15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும். பின்னர் குக்கரில் வாணலியில் உள்ள சிக்கனுடன் கூடிய மசாலாவை போட்டுக் கொள்ள வேண்டும். பின் அந்த வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறி, அதையும் குக்கரில் போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்து அந்த குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொத்தமல்லி, புதினா, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, தீயை அதிகரித்து 1 விசில் விட்டு, பின் தீயை குறைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி ரெடி!!!

மீன் மொய்லி



தேவையான பொருட்கள்: 
வாவல் மீன்/கிங்பிஷ் - 4 துண்டுகள்
 வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
 பச்சை மிளகாய - 2 (நீளமாக கீறியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் 
மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
தேங்காய் பால் - 1 கப் 
கறிவேப்பிலை - சிறிது 
கடுகு - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
 கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)


செய்முறை: 
முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவி, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேங்காய் பால் சேர்த்து கலந்து, கொதிக்க விட வேண்டும். குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து, 7-8 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடே வேண்டும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வாணலியை மூடி வைத்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். இறுதியில் மூடியை திறந்து, அதில் மிளகு தூளை தூவி கிளறி, பின் அடுப்பை அணைத்து, கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான கேரளா ஸ்டைல் குழம்பான மீன் மொய்லி ரெடி!!! இது சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சுண்டக்காய் வத்தக்குழம்பு





தேவையான பொருட்கள்: 

நல்லெண்ணெய் - 1/4 கப் 
காய்ந்த சுண்டக்காய் - 3 டேபிள் ஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
 சீரகம் - 1/2 டீஸ்பூன்
 பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
கறிவேப்பிலை - சிறிது 
வெங்காயம் - 1 (நறுக்கியது)
 பூண்டு - 10 பற்கள் (தோலுரித்தது) 
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
 நாட்டுச்சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் 
புளி - 1 எலுமிச்சை அளவு 
தண்ணீர் - தேவையான அளவு

 செய்முறை: முதலில் புளியை நீரில் 5 நிமிடம் ஊற வைத்து, பின் கையால் பிசைந்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலி அல்லது மண் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், காய்ந்த சுண்டக்காயை போட்டு மொறுமொறுவென்று வறுத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும். பின்பு அதே எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் புளிச்சாறு, மசாலாப் பொடிகள், உப்பு மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பின் அதில் வறுத்து வைத்துள் சுண்டக்காயை சேர்த்து, குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சுண்டக்காய் வத்தக்குழம்பு ரெடி!!!