Monday, October 22, 2012

இணைய இணையதள குற்றங்களுக்கு புகர் பதிவு செய்யலாம் !

நண்பர்களே !
இணையதள குற்றங்களுக்கு மின்னஞ்சல்  , தொலை பேசி  வழியாகவும்  புகர் பதிவு செய்யலாம் !
ஆபாசமாக  உங்கள் தளத்தில்  பேசுவது ,புகைப்பட திருட்டு , மிரட்டல் , மற்றும் 
அவர்களின்  கணக்கின் இணைப்பை  சேகரித்து  அணைத்து  குற்றங்களுக்கும் ஆதாரத்துடன் புகர் செய்ய !
விபரம் பின் வருமாறு ..
Mumbai
Address:
Assistant Commissioner of Police
Cyber Crime Investigation Cell
Office of Commissioner of
Police office,
Annex -3 Building,
1st floor,
Near Crawford Market,
Mumbai-01.

Contact Details:
+91-22-22630829
+91-22-22641261

Chennai
Address:
Assistant Commissioner of Police
Cyber Crime Cell
Commissioner office Campus
Egmore,
Chennai- 600008
Contact Details: +91-40-5549 8211
E-mail id: s.balu@nic.in
For Rest of Tamil Nadu,
Address: Cyber Crime Cell, CB, CID, Chennai
E-mail id: cbcyber@tn.nic.in


Bangalore
(for whole of the Karnataka)
Address:
Cyber Crime Police Station
C.O.D Headquarters,
Carlton House,
# 1, Palace Road,
Bangalore - 560 001

Contact Details:
+91-80-2220 1026
+91-80-2294 3050
+91-80-2238 7611 (FAX)

Delhi
Address:
CBI Cyber Crime Cell:
Superintendent of Police,
Cyber Crime Investigation Cell
Central Bureau of Investigation,
5th Floor, Block No.3,
CGO Complex,
Lodhi Road,
New Delhi – 3
Contact Details:
+91-11-4362203
+91-11-4392424

Pune
Address:
Assistant Commissioner of Police
Cyber Crime Investigation Cell
Police Commissioner Office of Pune
2, Sadhu Vaswani Road,
Camp,
Pune 411001
Contact Details:
+91-20-2612 7277
+91-20-2616 5396
+91-20-2612 8105 (Fax)
Website:
http://punepolice.com/crime branch.html
E-Mail: punepolice@vsnl.com

Hyderabad
Address:
Cyber Crime Police Station
Crime Investigation Department,
3rd Floor, D.G.P. office
Lakdikapool,
Hyderabad – 500004
Contact Details:
+91-40-2324 0663
+91-40-2785 2274
+91-40-2329 7474 (Fax)
Web site:http://www.cidap.gov.in/cybercrimes.aspx
E-mail id: cidap@cidap.gov.ininfo@cidap.gov.in

Thane
Address:
3rd Floor, Police Commissioner Office
Near Court Naka,
Thane West,
Thane 400601.
Contact Details:
+91-22-25424444

Gujarat
Address:
DIG, CID, Crime and Railways
Fifth Floor
Police Bhavan
Sector 18, Gandhinagar 382 018
Contact Details:
+91-79-2325 4384
+91-79-2325 3917 (Fax)


- ராஜேஷ் 










Tuesday, October 9, 2012

"காதல்"


மனிதர்களோடு ...
பேசி
பழகி
மகிழ்ந்து
கோபித்து
உற்சாகப்பட்டு
உதறிவிட்டு
காதலித்து .....
நினைவு தெளிந்த
நாள்தொட்டு
திரும்பி பார்க்கையில் .....
கண்ணாடியே !
உன் மீது
காதல் வருகிறது
நீ மட்டுமே
நன் அழும்போது
எதிரில் நின்று
சிரிக்கவில்லை .......

தேசிய கீதத்தின் பொருள் -


ஜன கன மன அதிநாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா பஞ்சாப சிந்த குஜராத மராட்டா த்ராவிட உத்கல பங்கா விந்த்ய ஹிமாசலயமுனா கங்காஉச்சல ஜலதி தரங்கா தவ சுப நாமே ஜாஹே தவ சுப ஆஷிஷ மாஹே காஹே தவ ஜய காதா ஜன கன மங்கல தாயக ஜய ஹே பாரத பாக்ய விதாதா ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே! 

- கவியரசர் ஸ்ரீ ரவிந்திர நாத் தாகூர் 

தேசிய கீதத்தின் பொருள் -
மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம்- பஞ்சாப் மாகாணம் உன்னுடையது.புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் - சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது.பகவான் கிருஷ்ணனின் ராஜ்ஜியம், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறப்பிடம் - குஜராத் மாநிலம் உன்னுடையது .வீர சிவாஜியின் பிறப்பிடம், தற்கால இந்தியாவின் தலைவாசல் - மராட்டிய மாநிலம் உன்னுடையது .பழம்பெரும் திராவிடக் கலாச்சாரத்தின் தொட்டில், செம்மொழியாம் தமிழ்மொழியின் பிறப்பிடம், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பாகங்களை அளித்த பெருநிலம் - திராவிட பீடபூமி உன்னுடையது.பூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற சிறந்த கலைச்செல்வங்களாகிய கோவில்கள் இருக்கும் இடம், பழங்காலத்து கலிங்க தேசம் - உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம் உன்னுடையது.இந்திய விடுதலையின் பிறப்பிடம், நூதன இந்தியாவின் மூளை, பெரும் ஞானிகள் பிறந்த தேசம் - பழம்பெருமை மிக்க வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது .இந்த பெரும் மாநிலங்களும் அதில் வாழும் மக்களும் உன் பெருமைகளை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றனர்.வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் நடுவே அமைந்த இயற்கை எல்லை, மிகப் பெரியது என்றும் கடக்க முடியாதது என்றும் ஒரு காலத்தில் எண்ணப்பட்ட மலை, பல புராணக் கதைகளின் இருப்பிடம் - விந்திய மலை உன்னுடையது.மாபெரும் மலைத்தொடர், அசலம் (அசையாதது) என்னும் சொல்லுக்கு ஒரு மாபெரும் உதாரணம், இந்தியத் தேசத்தின் இயற்கை எல்லை, மகரிஷிகளும் சாதுக்களும் வாழும் இறையாலயம், புராணக்கதைகளின் நாயகன், உலகின் மிகப் பெரிய சிகரத்தைக் கொண்ட மலைத்தொடர் - இமய மலை உன்னுடையது.இந்தியத் திருநாட்டின் மாபெரும் சமவெளியை தழைத்தோங்கச் செய்யும் இரு நதிகள், இந்தியர்களின் ஆன்மத் தாயார்கள் - கங்கையும் யமுனையும் உன்னுடையவை.இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றன.மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன.உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம். உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம். உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம். இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே! இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ. வெற்றி உனக்கே! வெற்றி உனது நல்வழி செல்லும் மக்களுக்கே! வெற்றி உன் மங்கலகரமான கொள்கைகளுக்கே! வெற்றி உன் ஈடு இணையற்ற தத்துவச் செல்வங்களுக்கே! வெற்றி உன் பன்மைத் தன்மைக்கே! வெற்றி உன் அமைதியை விரும்பும் குணத்திற்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

- ராஜேஷ் பிள்ளை 

இந்திய அரசியல் சட்டம் 356 .ஒரு பார்வை !



இந்திய அரசியல் சட்டம் 356 குடியரசுத் தலைவராட்சி (அல்லது மத்திய ஆட்சி) என்பது இந்தியாவில் மாநில அரசு ஒன்று கலைக்கப்பட்டு அல்லது ,
இடைநிறுத்தப்பட்டு நடுவண் அரசின் மேற்பார்வையில் இயங்குவதைக் குறிக்கிறது. 
இவ்வகை நடுவண் அரசின் நேரடி ஆட்சிக்கு இந்திய அரசியலமைப்பு விதி 356 வழி செய்கிறது. 
இவ்விதியின்படி, மாநிலத்தில் அரசியலமைப்பு அமைப்புகள் இயங்காதிருக்கும்போது 
மாநில அரசுகளைக் கலைக்க நடுவண் அரசிற்கு அதிகாரம் உள்ளது.மாநில சட்டப்பேரவையில் 
எந்தவொருக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிட்டாது 
ஆட்சி அமைக்க இயலாதிருப்பினும் குடியரசுத் தலைவராட்சி அமையலாம்.
ஓர் மாநில ஆளுநர், சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாத நேரத்தில் தாமே முடிவெடுத்தும்,
அல்லது ஆளும் கட்சியின் பரிந்துரைப்படியோ அல்லது நடுவண் அரசின் பரிந்துரைப்படுயோ சட்டப்பேரவையை கலைக்கலாம்.
அப்போது சட்டஅவை ஆறு மாதங்கள் இடைநிறுத்தம் செய்யப்படுகிறது. 
ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பெரும்பான்மை நிலைநிறுத்தப்பட இயலவில்லை எனில் தேர்தல்கள் நடத்தப்படும்.
மாநில ஆட்சி வழமையாக ஓர் முதலமைச்சரின் கீழ் இயங்காது குடியரசுத் தலைவரின் கீழ் இயங்குவதால் 
இதனை குடியரசுத்தலைவராட்சி என்று குறிப்பிடுகின்றனர்.ஆயினும் நிர்வாக அதிகாரங்கள் மாநில ஆளுநருக்கு மாற்றப்பட்டு ஆட்சி நடத்துகிறார். 
அவர் தமது உதவிக்கு ஆலோசகர்களை,ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், நியமித்துக் கொளவார்.பொதுவாக நடுவண் அரசின் கொள்கைகள் பின்பற்றப்படும்.
விதி 356 ஓர் மாநிலத்தில் அரசியலமைப்பு அமைப்புகள் சரியாக இயங்கவியலா நிலை இருக்கும்போது 
நடுவண் அரசு மாநில அரசை நீக்கி குடியரசுத் தலைவராட்சியை அமைத்திட அதிகாரம் வழங்குகிறது.
இந்த விதி நடுவண் அரசு ஓர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும்போது (காட்டாக கலவரங்கள்) அதனைக் கட்டுப்படுத்த இயலாத 
மாநில அரசினை கட்டுக்குள் கொண்டுவர வகை செய்கிறது.ஆயினும் பெரும்பாலான நேரங்களில் 
இது எதிர்கட்சி அரசுகளை நீக்கவே பயன்படுத்தப்படுவதாக அரசியல் விமரிசகர்கள் கருதுகிறார்கள். 
ஆகவே இது மாநில கூட்டாட்சிக்கு பொருத்தமற்ற விதி என்று வாதிடுகின்றனர். 
1950ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபிறகு 100க்கும் கூடுதலாக இவ்விதியை நடுவண் அரசு பயன்படுத்தி உள்ளது.
இந்த விதி முதன்முதலாக சூலை 31,1959 அன்று கேரள மக்களால் தேர்ந்தெடுகப்பட்ட இந்திய பொதுவுடமைக் கட்சி அரசைக் கலைக்கப் பயன்படுத்தப்பட்டது.
 1989 ஏப்ரல் 19 ஆம் நாள், பிரதமர் ராஜீவ் காந்தியின் பரிந்துரையின் பேரில், குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன், பொம்மையின் அரசைக் கலைத்தார். கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து பொம்மை தொடர்ந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
1988 இல் நாகாலாந்து அரசும் 1991 இல் மேகாலய அரசும், கலைக்கப்பட்டிருந்தன. 1991 இல் பாபர் மசூதி இடிக்கப் பட்ட சம்பவத்திற்குப் பின் நிகழ்ந்த கலவரங்களுக்கு காரணமான இந்துத்வ அமைப்புகளை தடை செய்யாததை காரணம் காட்டி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசத்தின் பாரதீய ஜனதாக் கட்சி அரசுகள் கலைக்கப்பட்டன.
விதி 355 ஓர் மாநிலத்தை வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்தும் உள்நாட்டு கலவரங்களின்போதும் காப்பதை நடுவண் அரசிற்கு கட்டாயமாக்கியுள்ளது. 
அப்போது மாநில அரசிற்கு வழிகாட்டிட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மாநிலங்களின் குரல்வளையை  நெரிக்கும்  சக்தி  என்று இச் சட்டத்தை அரசியல் விமர்சகர்கள்  சுட்டி காட்டுகின்றனர் .
அரசியல் சட்டம் 356-வது பிரிவின் கீழ் ஒரு மாநில ஆட்சியைக் கலைக்க மத்திய அரசு முடிவு எடுத்து அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தால் 
மத்திய அமைச்சரவை மறுபரிசீலனை செய்யுமாறு மட்டுமே!  குடியரசுத் தலைவரால் கோர முடியும். 
மீண்டும் மத்திய அமைச்சரவை அதே கோப்பை திருப்பி அனுப்பினால் கையெழுத்திட வேண்டும்...
நாடு சுதந்திரமடைந்தபிறகு அரசியல் சட்டம் 356-ஐ அதிகமாக பயன்படுத்தியது காங்கிரஸ் அரசுதான்.
1994 ஆம் வருடம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி குல்தீப் சிங் தலைமையில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட ,
அரசியலமைப்புச் சட்ட பெஞ்சு  நீதிபதிகளின் தீர்ப்பில் பின்வரும் முக்கிய சட்ட விளக்கங்கள் இடம் பெற்றிருந்தன.
  1. குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது, நீதிமன்றத்தின் மேற்பார்வைக்கு உட்பட்ட செயல்; தீய உள்நோக்குடன் (malafide) ஆட்சி கலைக்கப் பட்டிருக்குமெனில் நீதிமன்றங்களுக்கு கலைக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் அமல்படுத்த அதிகாரம் உண்டு
  2. பிரிவு 356 இல் குடியரசுத் தலைவருக்கு வழங்கப் பட்டிருக்கும் அதிகாரம் கட்டற்றதல்ல. நிபந்தனைகளுக்கும், மேற்பார்வைக்கும் உட்பட்டதே.
  3. மத்திய அமைச்சரவை, குடியரசுத் தலைவருக்கு செய்யும் பரிந்துரை நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் வராவிட்டலும், அப்பரிந்துரை எந்தச் சான்றுகளின் அடிப்படையில் செய்யப்பட்டதோ அவற்றை நீதிமன்றங்கள் ஆராயலாம்.
  4. ஆட்சி கலைப்பு அரசியலமைப்புச் சட்டத்தின் துஷ்பிரயோகம் என்று நீதிமன்றங்கள் கருதினால், கலைக்கப்பட்ட அரசை மீண்டும் பதவியிலமர்த்தும் உரிமை அவற்றிற்கு உண்டு.
  5. இந்தியக் குடியரசின் மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் மாநில அரசுகளை கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு...

ஆக்கம் - ராஜேஸ் சிவன் பிள்ளை 

என் ஆசை மனமே !



என் ஆசை மனமே !அலைகழிக்கும் ஆசையை !
சற்றே நிறுத்தி அமைதி கொள் !
உன் வசந்த வாசலைத் திறந்து வை !
உள்ளே வருபவர்களில் ,
உண்மையனவர்களை காந்தம் போல் 
கவர்ந்திழுகடைசி வரை மறவாதே!
கல்மேல் எழுத்தாய்க் கருத்திலொன்று,
கொண்டுள்ளாய் விளக்குச் சுடரைப்,
பழமென்று நம்பும் விட்டில் பூச்சி போல் 
நயமாய்ப் பேசும் நயவஞ்சகர்களை நம்பி
பண்பு  இழந்து போகாதே!
வான்பரப்பில் வட்டமிடும் 
வண்ணத்திப் பூச்சி போல்
எண்ணச்சிறகுகளைப் பறக்கவிடு
தேனெடுக்கப் பூவில் அமரும் தேனீ போல்
புவியெங்கும் கரு தேடு 
கவிதைக்குப் பொருள் தேடு!
மனமே! நீ ஒரு மர்மம்
மறைந்திருந்து ஆட்டிப் படைக்கும் ஓர் ஆச்சரியம்
அரிதாரம் பூசி உலகில் நடமாடும் 
அவதாரம்நரிபோல் 
உடலுள் நடனம் புரியும் நயவஞ்சகன்
வருகிறேன் உன்னை அடக்கவோர் 
ஆயுதம் கொண்டுவடிக்கிறேன் 
ஓர் வடிவமாய்இடம் தராது 
இழுத்துப் பிடிக்கிறாயா
மூச்சை அடக்கி முழுமூச்சாய் 
முன்னேறுகிறேன்
மரணத்தில் உன்னை வெல்வேன் !

 - கல்லறை காதலன்  (ராஜேஷ் ).


"கல்லறையும் அழகே"


வீழ்வதும் அழகே - நீரருவியாய் இருந்தால்! 
தலை தாழ்வதும் அழகே ,
நெற்கதிராய் இருந்தால்!
தொடர்தோல்விகள் அழகே,
அலைகடலாய் இருந்தால்!
தெளிவின்மையும் அழகே 
படர்பனியாய் இருந்தால்!
சிதறல்கள் அழகே 
விண்மீனாய் இருந்தால்!
கதறலும் அழகே 
கார்முகிலாய் இருந்தால்!
கல்லறையும் அழகே ,
காதலில் விழ்ந்திருந்தால் !

- கல்லறை காதலன்