Saturday, September 22, 2012

சன்னா உசல்....



தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 50 கிராம்
பூண்டு - 4 பல் (அரைத்தது)
சீரகம் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 5
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை கழுவி, குக்கரில் போட்டு 3 விசில் விட்டு இறக்கவும். பின் அதில் உள்ள நீரை வடித்து, கடலையை ஒரு பௌலில் போட்டுக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும்.
பிறகு அதில் 2 கப் தண்ணீர் விட்டு, கொதிக்கவிடவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள கொண்டைக்கடலை, அரைத்த பூண்டு, கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து 15 நிமிடம் கொதிக்க விடவும்.
அதற்குள் மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் சீரகம் மற்றும் கறிவேப்பிலையை போட்டு தாளித்து, அந்த மசாலா கலவையில் ஊற்றி, ஒரு முறை பிரட்டி இறக்கவும்.

Friday, September 14, 2012

பருப்பு சாதம் { தால் கிச்சடி }












தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
புளி - சிறிய உருண்டை
துவரம் பருப்பு - 1/2 கப்
தக்காளி - 4 (நறுக்கியது)
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
காய்ந்த மிளகாய் - 6
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - சிறிது
சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அரிசி மற்றும் துவரம் பருப்பை அரை மணிநேரம் ஊற வைத்து, கழுவிக் கொள்ளவும். பின் குக்கரை அடுப்பில் வைத்து, கழுவிய அரிசி, துவரம் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து, 3 முதல் 4 விசில் விட்டு இறக்கவும்.
பின் அரைப்பதற்கு தேவையான பொருட்களை மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பிறகு புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும்.
பின் தக்காளி மற்றும் உப்பை சேர்த்து நன்கு வதக்கி, அதில் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.
பிறகு அதில் அரைத்து வைத்திருக்கும் கலவையை போட்டு, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிவிடவும்.
பின்னர் சாதத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் அந்த குழம்பு கலவையை ஊற்றி, சிறிது நெய் சேர்த்து நன்கு கிளறி, பின்னர் பரிமாறவும்.

பெப்பர் சிக்கன்....





















தேவையான பொருட்கள் :
சிக்கன் - ஒரு கிலோ
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தயிர் - 1 1/2 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
மிளகு - 3 1/2 ஸ்பூன்
முழு மல்லி - 3 ஸ்பூன்
சீரகம் - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் சிக்கனை சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பெரிய பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பிரட்டி ஊற வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியில் மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், மல்லி ஆகியவற்றை போட்டு வறுத்து, அதனை ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
பின் அகன்ற கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு, நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக விடவும்..
சிக்கன் நன்கு வெந்ததும், அதில் அரைத்த பொடியை போட்டு பிரட்டி அடி பிடிக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
பின் சிக்கன் நன்கு வெந்ததும், அதன் மேல் சிறிது கொத்தமல்லியைத் தூவி, கிளறி விடவும். இதனால் சிக்கன் ருசியாகவும், மணமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்

ஆட்டுக்கால் பாயா...





















தேவையான பொருட்கள் :
ஆட்டுக்கால் - 2
தக்காளி - 4
வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மிளகுத்தூள் - 4 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 4 ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பின் தேங்காய்ப் பால் எடுத்துக்கொள்ளவும்.
பின் குக்கரில் ஆட்டுக்கால், வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். அதன் பிறகு மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
10 விசில் கழித்து கால் வெந்ததா என்று பார்த்தப் பிறகு தேங்காய்ப்பாலை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும். பாயாவை இறக்கும் முன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். 

சிக்கன் பிரியாணி ...









தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
சிக்கன் - 1 கிலோ
எண்ணை - 100 கிராம்
நெய் - 150 கிராம்
வெங்காயம் - அரை கிலோ
தக்காளி - அரை கிலோ
இஞ்சி,பூண்டு பேஸ்ட் 3 ஸ்பூன்
பட்டை, பிரியாணி இலை - சிறிதளவு
கிராம்பு,ஏலக்காய் - தலா 4
மல்லி தழை-1 கப்
புதினா - 1 கப்
பச்சை மிளகாய் - 5
தயிர் - 1கப்
மிளகாய் தூள் - 11/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் - 1
செய்முறை
குக்கரில் எண்ணையும் நெய்யும் ஊற்றி பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிய விடவும். அத்துடன் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் இத்துடன் தக்காளி போட்டு குழைய வதக்கவும். வதங்கிய உடன் பாதி கொத்தமல்லி, புதினா இலையைப் போட்டு கிளறவும்.
பின் அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், போட்டு வதங்கியவுடன் சிக்கன், சிறிதளவு உப்பு, தயிர் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். தனியா பொடி (கொத்தமல்லி தூள்), 1/2 மூடி எலுமிச்சை சாறு விட்டு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்த உடன் எண்ணைய் மேல் வரும் போது 1கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியை கழுவி போடவும். மீத முள்ள கொத்தமல்லி, புதினா தழை போட்டு வேகவிடவும். இத்துடன் சரியான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும். விசில் போட வேண்டாம்.
அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்கவும். முக்கால்பகுதி வெந்தவுடன் ஸ்டவ்வை சிம்மில் வைத்து எலுமிச்சையை பிழிந்து ஊற்றவும். பின்னர் விசில் போட்டு தம்மில் போடவும். இதனால் கோழி ஸாப்ட்டாக வெந்திருக்கும் குழைய வாய்ப்பில்லை. 10 நிமிடம் கழித்து விசில் எடுத்து விடலாம் சுவையான ஸ்பெசல் பிரியாணி ரெடி

*மட்டன் புலாவ்*











தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 2 கப்
கொத்துக்கறி - 250 கிராம்
தயிர் - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பட்டை - 3
கிராம்பு - 2
லவங்கம் - 6
ஏலக்காய் - 8
முந்திரி - 1/4 கப்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* முதலில் கொத்துக்கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் விட்டு, அதில் பட்டை, கிராம்பு, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* அதனுடன் தயிர், இஞ்சி-பூண்டு விழுது, முந்திரி, மிளகுத் தூள், மிளகாய் தூள் சேர்த்து, அதோடு சுத்தம் செய்த கீமாவையும் சேர்த்து வதக்கவும்.
* பின்னர் அதில் வேண்டிய உப்பு சேர்த்து, நன்கு ஒரு 5 நிமிடம் கிளறவும். பிறகு தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, சிறிது நேரம் கறியை வேக விடவும்.
* பின் மூடியைத் திறந்து, பாசுமதி அரிசியை கழுவி, அதில் சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
மட்டன் புலாவ் ரெடி!!! இதற்கு மட்டன் கிரேவியை சைடு டிஷ்-ஆக தொட்டு சாப்பிடலாம்.

***மட்டன் சில்லி***


















தேவையான பொருட்கள் :
மட்டன் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 12
தக்காளி - 1
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் மட்டனை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயத்தை நறுக்காமல், உரித்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.
பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் அதில் உரித்து வைத்துள்ள வெங்காயத்தையும், கீறி வைத்திருக்கும் பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
சிறிது நேரம் கழித்து நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்னர் கழுவி வைத்துள்ள மட்டனை அதில் போட்டு, சிறிது உப்பை சேர்த்து ஒரு முறை பிரட்டி, மஞ்சள் தூள் மற்றும் 1/2 கப் தண்ணீரை விட்டு மூடி 3-4 விசில் விட்டு இறக்கவும்.
இப்போது குக்கரில் இருக்கும் மட்டனில் சிறிது தண்ணீர் இருக்கும். ஆகவே அந்த குக்கரை மறுபடியும் அடுப்பில் வைத்து, தண்ணீர் சுண்டும் வரை நன்கு சுருளக் கிளறவும்.
காரமான மட்டன் சில்லி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறலாம்.

*செட்டிநாடு இறால் குழம்பு*




தேவையான பொருட்கள்:
இறால் - 400 கிராம்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 5 பல் (அரைத்தது)
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இறாலை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விடவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து, 2-3 நிமிடம் வறுக்கவும்.
பிறகு சூடு ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைக்கவும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு 2-3 நிமிடம் வறுக்கவும்.
பின் அதனை எடுத்து ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
தேங்காயை வறுத்த அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின் அதில் தக்காளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு, 3-4 நிமிடம் வேக வைக்கவும்.
பின் அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

*சுண்டைக்காய் வத்தல் குழம்பு*



தேவையான பொருட்கள் :
சுண்டைக்காய் வத்தல் - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
புளி தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சுண்டைக்காயை போட்டு பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் அதே வாணலியை வைத்து, சற்று அதிகமான அளவு நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பிறகு அதில் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் புளி தண்ணீரை விட்டு, சிறிது உப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
குழம்பு சற்று கெட்டியானதும், அதில் பொரித்து வைத்துள்ள சுண்டைக்காயை போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கி, அதில் சிறிது நல்லெண்ணெயை ஊற்றி மூடி வைக்கவும்.
இப்போது சுவையான சுண்டைக்காய் வத்தல் குழம்பு ரெடி!!!

"காதல் இன்று "




மனசு பார்க்காமல் !

சகலமும் பார்த்து வரும்!

காதல் !!!

பிரிந்து விடுகிறது....

கோர்ட் வாசலில் .....

- கல்லறை காதலன் .....

" காதல் "


iliayana
" காதல் 
" வருஷக்கணக்கில் காத்திருந்தாலும்.....
" வரவே வராது!
" வரவே வராது என்று ..
" முடிவுக்கு வந்தபிறகு...
" வந்தால் விடாது!
" இம்சை காதல் "
- கல்லறை காதலன் {ராஜேஷ் }

Thursday, September 6, 2012

மட்டன் பன்னீர் குருமா....



தேவையான பொருட்கள் :
கொத்துக்கறி - 1/4 கிலோ
பன்னீர் - 100
கார்ன் ஃப்ளார் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
முதலில் கார்ன் ஃப்ளாரை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் பன்னீர் துண்டுகளை அதில் நனைத்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் கொத்துக்கறியை நன்கு கழுவி, அத்துடன் சேர்த்து தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
ஆவி போனப் பின் குக்கரை திறந்து அந்த கொத்துக்கறியை கிளறிவிட்டு, மறுபடியும் அடுப்பில் வைத்து, பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து ஒரு முறை வதக்கி, தேங்காய் பாலை விட்டு, சற்று கெட்டியானதும், அதனை இறக்கி விடவும்.
பின் அதன் மேல் கொத்தமல்லி இலையை தூவி சிறிது நேரம் மூடி வைத்து, பின்னர் பரிமாறவும். இப்போது சுவையான மட்டன் பன்னீர் குருமா ரெடி!!!

சிக்கன் குருமா....



தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
எலுமிச்சை சாறு - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு மற்றும் கரம் மசாலா தூளைப் போட்டு பிரட்டி, சற்று நேரம் ஊற வைக்கவும். பச்சை மிளகாயை நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது, அரைத்த பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி, பிசைந்து கொண்டு, அதனை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அரை மணிநேரமோ அல்லது 10 நிமிடமோ ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காய் போட்டு வதக்கவும். பின் அந்த தேங்காயை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் அதில் பிசைந்து வைத்துள்ள சிக்கன் கலவையை போட்டு நன்கு கலக்கி, தீயை குறைவில் வைத்து, மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
பிறகு அதில் மல்லித்தூள், மிளகு மற்றும் வறுத்து வைத்திருக்கும் தேங்காய் சேர்த்து கிளறி, ஒரு கப் தண்ணீரை ஊற்றி, மறுபடியும் 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைக்கவும்.
இறுதியாக தயிரை ஊற்றி, வாணலியை மூடி 5-7 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.