Thursday, November 10, 2016

மட்டன் உருளைக்கிழங்கு சால்னா


சூப்பரான மட்டன் உருளைக்கிழங்கு சால்னா
தேவையான பொருட்கள் :

மட்டன் - 1 கிலோ
உருளைக்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி -  1/2 கிலோ
பச்சை மிளகாய் - 8
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
த‌னியா தூள் - 1/2  தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் - 1/4 தேக்க‌ர‌ண்டி
த‌யிர் - 1 கப்
எண்ணெய் - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 3 மேசைக்க‌ர‌ண்டி
கொத்தம‌ல்லி த‌ழை - அரை கட்டு
புதினா - கால் கட்டு
தேங்காய் - கால் கப்
முந்திரி - 25 கிராம்
க‌ச‌க‌சா  - 2 தேக்க‌ர‌ண்டி
எலுமிச்சை ப‌ழ‌ம் -  1 (சிறியது)
ப‌ட்டை - இர‌ண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 3

செய்முறை :

 ம‌ட்ட‌னை நன்றாக சுத்தம் செய்து 5 அல்லது 6 முறை த‌ண்ணீரில் க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக‌ட்ட‌வும்.
வெங்க‌யாம், த‌க்காளியை பொடியாக நறுக்கி வைக்க‌வும்.
கொத்தம‌ல்லி, புதினாவை ஆய்ந்து, க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்கவும்.
 முந்திரி, தேங்காய், க‌ச‌கசா சேர்த்து மையாக‌ அரைத்து வைக்க‌வும்.
உருளைக்கிழ‌ங்கை தோலை உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ள‌வும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின் அதனுடன் வெங்காயத்தை போட்டு தீயை மிதமாக வைத்து வதக்கவும்.
அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கி விட்டு, இஞ்சி பூண்டின் வாசனை அடங்கி நிறம் மாறும் வரை சிம்மில் வைக்கவும்.
 கொத்தமல்லி, புதினாவில் முக்கால் பாகத்தை சேர்த்து நன்கு வதக்கிய பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு 5 நிமிடம் சிம்மில் வைத்து மூடி விடவும்.
பிற‌கு மிள‌காய் தூள், த‌னியாதூள், ம‌ஞ்ச‌ள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து ம‌சாலா ந‌ன்கு தக்காளியோடு சேரும் வ‌ரை கிள‌றி அதில் ம‌ட்ட‌ன் மற்றும் த‌யிர் சேர்க்க‌வும். தீயை குறைத்து வைத்து கிளறி எல்லா ம‌சாலா வ‌கைக‌ளும் க‌றியில் சேரும்படி ஐந்து நிமிட‌ம் விடவும்.
 கறி மசாலா கலவையில் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்.
 நறுக்கி வைத்திருக்கும்‌ உருளைக்கிழங்கை சேர்த்து ஒரு முறை கிள‌றி இர‌ண்டு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் சேர்த்து குக்கரை மூடி தீயை மித‌மாக‌ வைத்து 8 விசில் விட்டு இறக்க‌வும்.
குக்க‌ர் ஆவி அட‌ங்கிய‌தும் திற‌ந்து வெந்த‌ சால்னாவை வேறு ஒரு வாய‌க‌ன்ற‌ பாத்திரத்திற்கு மாற்றி அரைத்து வைத்துள்ள‌ தேங்காய் முந்திரி க‌ல‌வையை ஊற்ற‌வும். ந‌ன்கு‌ தேங்காய் வாசனை அட‌ங்கும் வ‌ரை கொதிக்க‌ விட்டு கடைசியாக மீதி உள்ள‌ கொத்தம‌ல்லி, புதினாவை சேர்த்து இற‌க்க‌வும்.

Friday, November 4, 2016

கேரளா மட்டன் ரோஸ்ட்



தேவையான பொருட்கள் :

மட்டன் - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பொட்டுக்கடலை பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

அரைப்பதற்கு…

சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 5
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 6 பெரிய பற்கள்

செய்முறை :

 முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். கழுவி மட்டனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை மட்டனுடன் சேர்த்து நன்கு பிரட்டி, அதனை குக்கரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை அடுப்பில் வேக வைக்க வேண்டும். மட்டனில் உள்ள நீரானது வற்றியதும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் மட்டனை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்ட வேண்டும்.
கடைசியாக அதில் பொட்டுக்கடலை பவுடரை சேர்த்து 10 நிமிடம் பிரட்டி இறக்கவும் ..

மட்டன் குடல் குழம்பு



தேவையான பொருட்கள் :

ஆட்டு குடல் - 750 கிராம்
வெங்காயம் - 4
தக்காளி - 4
தேங்காய் - ஒரு மூடி அரைத்தது (கசகசாவுடன் )
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா - கொஞ்சம்
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
கரம் மசாலா - ஒரு சிட்டிகை
உப்பு  - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு

செய்முறை :

 வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.(தயிர், மஞ்சள் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும்) குக்கரில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, மஞ்சள் தூள் சிறிது போட்டு குடலுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி (கொஞ்சம் தாராளமாக ) பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின் நறுக்கின வெங்காயதை போட்டு வதக்கி கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
அடுத்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து மைய வதக்கவும்.
இப்பொழுது மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அடுத்து வேக வைத்த குடலை போடவும். நன்றாக கொதி வரும் போது அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். ஓரங்களில் எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வரும் போது கொத்தமல்லி, புதினா தழை தூவி இறக்கி பரிமாறலாம்.

கும்பகோணம் நாட்டுக்கோழி குழம்பு



தேவையான பொருட்கள் :
நாட்டுக்கோழி கறி - 1 கிலோ,
வெங்காயம் - 4,
தக்காளி - 2 சிறியது,
பூண்டு - 15 பல்,
இஞ்சி - 2 அங்குல துண்டு.

தாளிக்க :
ந.எண்ணெய் - 2 டீஸ்பூன்,
பட்டை - 2 துண்டு,
சோம்பு - 1 டீஸ்பூன்,
தாளிக்கும் வடகம் - 1 டீஸ்பூன்.

வறுத்து அரைக்க :
தனியா - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - 15,
மிளகு - 30 கிராம்,
சோம்பு - 2 மேஜைக்கரண்டி,
உப்பு, எண்ணெய், மஞ்சள்தூள் தேவைக்கேற்ப.

செய்முறை :

 தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டை ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும்.கோழிக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
 தனியா, மிளகாய், மிளகு மற்றும் சோம்பை நன்கு சிவக்க வறுத்து மிக்சியில் பொடி செய்து பின்பு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து வைக்கவும்.
குக்கரில் கோழிக்கறியை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி பூண்டு, இஞ்சி, அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 விசில் வரும் வரையில் வேகவிட்டு இறக்கவும். தேவையானால் குழம்பு பதத்திற்கு மேலும் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.பின்பு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை, சிறிது சோம்பு மற்றும் தாளிக்கும் வடகம் சேர்த்து பொரிந்ததும் குழம்பில் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் மூடி போட்டு கொதிக்க விட்டு பின்பு பரிமாறவும். 

மட்டன் கீமா தோசை



தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
மட்டன் கீமா - 1 கப்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பட்டை - 1
கிராம்பு - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

 முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் 5 மணிநேரம் ஊற வைத்து நன்றாக ஊறியதும் தோசை மாவு பதத்திற்கு அரைத்து, உப்பு சேர்த்து கரைத்து 5 மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 மட்டன் கீமாவை நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு மட்டன் கீமா, மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, மட்டன் நன்கு வேகும் வரை பிரட்ட வேண்டும். வேண்டுமெனில், அதில் சிறிது எண்ணெயை சேர்த்து மட்டனை வேக வைக்கலாம். மட்டன் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
 தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், மாவைக் தோசையாக ஊற்றி அதன் மேல் தூவியது போல் மட்டன் கீமாவை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.