Tuesday, July 16, 2019

மட்டன் பிரியாணி





















தேவையான பொருட்கள்

பிரியாணி அரிசி - 1/2 கிலோ ( 1/2 மணிநேரம் ஊற வைத்தது)
தக்காளி - 3,
வெங்காயம் - 3,
மட்டன் - 1/2 கிலோ (வேக வைத்தது ),
எண்ணெய், அல்லது நெய் - 1 கப்,
பிரியாணி இலை - 2,
ஏலக்காய் - 2, கிராம்பு - 2,
பெரிய வெங்காயம் - 2 (அரைத்தது),
உப்பு - தேவைக்கு,
பச்சை மிளகாய் - 3,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், 
பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
கொத்தமல்லி, புதினா - 1/2 கப்,
தயிர்  - 1/2 கப்.


செய்முறை

குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி பிரியாணி  இலை,
ஏலக்காய், கிராம்பு சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் உப்பு, பச்சை மிளகாய்,
இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், பிரியாணி மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் கொத்தமல்லி, புதினா, தக்காளி, தயிர் சேர்த்து நன்றாக வதங்கிய பின் அரிசி, மட்டனை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து
 20 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து  இறக்கவும் ...

சிக்கன் பிரியாணி




























தேவையான பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ,
பிரியாணி அரிசி - 1/2 கிலோ,
பிரியாணி மசாலா - 1½ டீஸ்பூன்,
கொத்தமல்லி,
புதினா - 1 கப்,
வெங்காயம் - 3 (பெரியது),
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
தக்காளி - 3,
பட்டை - 2 கிராம்,
புதினா - 2,
சோம்பு - சிறிதளவு,
பிரியாணி இலை - 2,
கரம் மசாலா -  1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
பட்டை பொடி - 1/4 டீஸ்பூன்,
கிராம்பு பொடி - 1/4 டீஸ்பூன்,
தயிர் - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
நெய் - 1/4 கப், எண்ணெய் -  1/4 கப்.


செய்முறை ;

பிரியாணி அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து
பின் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி லேசாக வதங்கி வைத்துக்கொள்ளவும்

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானவுடன்
பட்டை, கிராம்பு, சோம்பு, பிரியாணி இலை சேர்த்து
பின்பு பட்டை பொடி, கிராம்பு பொடி, கொத்தமல்லி,
புதினா சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம்,
இஞ்சி, பூண்டு பேஸ்ட், தக்காளி சேர்த்து வதக்கி
அதில் சிக்கனை போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம்
 வேக விடவும். பின் தயிர், கரம் மசாலா, மிளகாய்த்தூள்
 மற்றும் பிரியாணி மசாலாவை வதக்கியவுடன்
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கொதி வந்தவுடன்
அதில் அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் 10 முதல் 15 நிமிடம் வைத்து இறக்கிவிடவும் ....

Monday, July 15, 2019

வான்கோழி பிரியாணி

















தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...
வான்கோழி - 2-4 பெரிய துண்டுகள்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
நாட்டுத் தக்காளி - 1 (அரைத்தது)
புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
கல் உப்பு - சிறிது
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்

பிரியாணிக்கு...
பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை மிளகாய் - 6 (நீளமாக கீறியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
புதினா - 1 கைப்பிடி அளவு
கொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு
நெய் - 1 கப்

தாளிப்பதற்கு...
கிராம்பு - 3
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 6
பிரியாணி இலை - 3
அன்னாசிப்பூ - 2
உலர்ந்த ரோஜாப்பூ இதழ் - சிறிது
குங்குமப்பூ - சிறிது

செய்முறை:

முதலில் வான்கோழியை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ளவும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு
அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை
சேர்த்து பிரட்டி 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும் பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து,
 பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கிளறி, பின் ஊற வைத்துள்ள வான் கோழியை சேர்த்து கிளறி,
1/4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2-3 விசில் விட்டு
இறக்கிக் கொள்ளவும். பின் விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரிசியைப் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி,
தேவையான அளவு உப்பு சேர்த்து, மிதமான தீயில் குக்கரை மூடி விசில் போடாமல் 10 நிமிடம் வைத்து இறக்கிவிடவும் .....

வான்கோழி குழம்பு






















தேவையான பொருட்கள்:

வான்கோழி - 1/2 கிலோ
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

மசாலாவிற்கு...

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
சோம்பு பொடி - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வான்கோழியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வான்கோழி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் அடுப்பை அணைத்து, விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

* வெங்காயம் மற்றும் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளி விழுதை சேர்த்து, 15 நிமிடம் எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் கிளறி, உப்பு, மல்லித் தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள் என அனைத்து மசாலா பொடியையும் தூவி கிளற வேண்டும்.

* மசாலா வாசனை போனவுடன் அதில் வேக வைத்துள்ள வான்கோழியை நீருடன் ஊற்றி கிளறி, 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும்.

* குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கடைசியாக  இறக்கி கொத்தமல்லியைத் தூவி இறக்கவும் ...

Saturday, July 13, 2019

நீலகிரி சிக்கன் குருமா























தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

அரைப்பதற்கு...:

சீரகம் - 1 டீஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
கசகசா - 1 டீஸ்பூன்,
பட்டை - 1 இன்ச்,
ஏலக்காய் - 2,
துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்,
முந்திரி - 8,
பச்சை மிளகாய் - 4,
கொத்தமல்லி - 3
டேபிள் ஸ்பூன் (நறுக்கியது),
புதினா - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது),
தண்ணீர் - 3 1/2 கப்

செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம்,
சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு,
அத்துடன் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் வதக்கி,
தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேத்துஇ 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 7-8 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு,
 2 நிமிடம் பிரட்டி, 3 கப் தண்ணீரை ஊற்றி,
20-30 நிமிடம் மூடி வேக வைத்து இறக்க வேண்டும் ...

கேரளா மட்டன் குருமா





















தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
பூண்டு - 5 பல் (நறுக்கியது)
தேங்காய் பால் - 1/2 கப்
பட்டை - 1
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
முந்திரி - 11 (நீரில் ஊற வைத்து, பேஸ்ட் செய்தது)
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
வினிகர் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு


செய்முறை: முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
சோம்பு மற்றும் கசகசா சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து 3 நிமிடம் கிளறி இறக்கி விட வேண்டும்.

பின்பு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மட்டனை நன்கு கழுவி, அதனை குக்கரில் போட்டு,
தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து,
அடுப்பில் வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

இறுதியில் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், தேங்காய் பால், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பின் குக்கரில் உள்ள மட்டனை நீருடன் வாணலியில் ஊற்றி,
 நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின்பு அத்துடன் வினிகர், முந்திரி பேஸ்ட் சேர்த்து, குழம்பு சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும். 

சேலம் மட்டன் குழம்பு


















தேவையான பொருட்கள்:

மட்டன் - 3/4 கிலோ
சின்ன வெங்காயம் - 1/2 கிலோ (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பட்டை - 2
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1 மூடி (துருவியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 10
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து,
அதில் கழுவி வைத்துள்ள மட்டன்,
மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும்
உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி,
5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய்,
சிறிது கறிவேப்பிலை, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே வாணலியில் உள்ள எஞ்சிய எண்ணெயில் பாதி வெங்காயத்தை போட்டு வதக்கி இறக்க வேண்டும்.
அடுத்து, மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து,
அதில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் வதக்கிய அனைத்தையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு, நைஸாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து,
அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு,
பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் தனியாக எடுத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி, மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 3-5 நிமிடம் வதக்கிவிட வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும்,
அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி,
பின் வேக வைத்துள்ள மட்டனை ஊற்றி,
ஒரு கொதி விட வேண்டும்.
பின் அத்துடன் தேங்காய் கலவையை தவிர,
அரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து,
உப்பு போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
இறுதியில் நைஸாக அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும் ...