Thursday, September 5, 2019

மதுரை மட்டன் குருமா
























தேவையானவை:

 மட்டன் - ஒரு கிலோ
 கடலை எண்ணெய் - 100 மில்லி
 எலுமிச்சை - ஒன்று
 சீரகம் - 3 கிராம்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு

அரைக்க:

 சின்னவெங்காயம் - 200 கிராம்
 பச்சைமிளகாய் - 25 கிராம்
 தேங்காய் - ஒன்று
 கசகசா - 15 கிராம்
 மிளகு - 20 கிராம்
 சோம்பு - 3 கிராம்
 சீரகம் - 5 கிராம்
 பட்டை - சிறிதளவு
 கிராம்பு - ஒன்று
 அன்னாசிப்பூ - ஒன்று
 முந்திரிப்பருப்பு - 20 கிராம்

செய்முறை:

தேங்காயில் இருந்து கெட்டியான முதல் பால் எடுத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து லேசாக வதக்கி, பேஸ்டாக அரைக்கவும். அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சீரகத்தையும் கறிவேப்பிலையையும் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் மட்டனைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் 2 டம்ளர் தண்ணீர் விட்டு மட்டனை வேகவிடவும். மட்டன் வெந்ததும் எலுமிச்சைச் சாறு மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதி வருவதற்கு முன்னர் இறக்கவும் 

சிக்கன் மக்ரோனி Indian Style


















தேவையான பொருட்கள் :


மக்ரோனி- 150 கிராம்
போன்லெஸ்  சிக்கன் -1/2 கிலோ
வெங்காயம்- 2
தக்காளி-1
கறிவேப்பிலை-1 கொத்து
பச்சைமிளகாய்-2
இஞ்சி,பூடு விழுது-3 ஸ்பூன்
தயிர்- 2 மேசை கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
சீரகத்தூள்- 1/2 ஸ்பூன்
பட்டை-1 சிறு துண்டு
கிராம்பு-2
ஏலக்காய்-3
அன்னாசி பூ-2
பிரிஞ்சி-1
சிக்கன் மசாலா தூள்- 1 ஸ்பூன்
தனியா தூள்- 1/2 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய்- 3 மேசை கரண்டி
நெய்- 4 ஸ்பூன்

செய்முறை:


மக்ரோனியை உப்பு சேர்த்து அவித்து தண்ணீர் வடித்துக்கொள்ளவும்.
வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை,ஏலக்காய்,கிராம்பு,அன்னாசி பூ, பிரிஞ்சி சேர்க்கவும்.
பின்னர் மிளகாய்,கறிவேப்பிலை,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் அதில் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும்.
அதில் தக்காளி பின்னர் எல்லாத்தூள்களையும், தயிர் சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் மேலே வந்ததும் சிக்கனை சேர்த்து நன்கு வேகவிடவும்.
சிக்கன் வெந்ததும் வேக வைத்த மக்ரோனியை சேர்த்து மசாலாவில் உள்ள நீர் வற்ற கிளறி பின் இறக்கவும் ...

இட்லி மஞ்சூரியன்



















தேவையானவை:

 இட்லி - 6
 எண்ணெய் - 100 மில்லி
 இஞ்சி - 5 கிராம்
 பூண்டு - 5 கிராம்
 பெரிய வெங்காயம் - 30 கிராம்
 பச்சைமிளகாய் - 7
 வெங்காயத்தாள் - 5
 செலரி இலைகள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 தக்காளி சாஸ் - 20 மில்லி
 சோயா சாஸ் - 10 மில்லி
 ரெட் சில்லி சாஸ் - 10 மில்லி
 தண்ணீர் - 30 மில்லி
 உப்பு - தேவையான அளவு

ஊற வைக்க:

 மைதா மாவு - 50 கிராம்
 கார்ன்ஃபிளார் மாவு - 20 கிராம்
 உப்பு - அரை டீஸ்பூன்
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

ஊற வைக்கக் கொடுத்தவற்றை எல்லாம் ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். ஒரு இட்லியை தலா ஆறு துண்டுகளாக்கி, இதை மாவில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இனி, இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், வெங்காயத்தாள், செலரி இலைகள் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், செலரி சேர்த்து வதக்கவும். இத்துடன் தக்காளி சாஸ், ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, பொரித்த இட்லிகளைச் சேர்த்து இட்லி உடையாதவாறு கிளறவும். தண்ணீர் வற்றி கலவை நன்கு வெந்ததும் இதன்மீது பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள்களைத் தூவி இறக்கவும். 

கறிவேப்பிலைக் குழம்பு





















தேவையானவை :

 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
 சின்ன வெங்காயம் - 100 கிராம்
 பூண்டு - 10 பல்
 தேங்காய் - அரை முடி (துருவிக் கொள்ளவும்)
 மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - சிறிதளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
 கடுகு - கால் டீஸ்பூன்
 உளுந்து - கால் டீஸ்பூன்
 குண்டு மிளகாய் - 3
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். பிறகு இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து  வதக்கி சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, குண்டு மிளகாய் சேர்த்துத் தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை கிளறவும். பிறகு கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை இத்துடன் ஊற்றி கொதிக்கவிட்டு பச்சை வாசனை போனதும் இறக்கவும் ...

முட்டை குருமா






























தேவையானவை:

 முட்டை - 3
 பெரிய வெங்காயம் - 2
 தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 சோம்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
 இஞ்சி - ஒரு சிறிய துண்டு
 பூண்டு - 8
 பச்சைமிளகாய் - 2
 தேங்காய் - அரை மூடி
(துருவிக் கொள்ளவும்)
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டேபிள்ஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முட்டையை அவித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நிறம் மாறி பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு சோம்பு மற்றும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைத்து கலக்கவும். இதில் சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து வதக்கவும். கலவை நன்கு கொதி வந்ததும் அவித்த முட்டையை லேசாக கீறிவிட்டு சேர்க்கவும். பிறகு, ஒரு கொதி வந்ததும், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும் ....

கறிவேப்பிலைக் கோழி சுக்கா






















தேவையானவை:

 சிக்கன் - அரை கிலோ
 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
 சின்ன வெங்காயம் - 100 கிராம்
 மல்லித்தூள் (தனியாத்தூள் ) - ஒரு டேபிள்ஸ்பூன்
 சீரகம் - கால் டீஸ்பூன்
 மிளகு - ஒரு டீஸ்பூன்
 சோம்பு - அரை டீஸ்பூன்
 எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

சிக்க‌னை சுத்தம் செய்து விருப்பமான வடிவில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிக்கன், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும். ஆறியதும் பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய சிக்கனை சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்த விழுதைச் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை கிளறவும். மிதமான தீயில் சிக்கனை வேக விடவும். தேவையென்றால், தண்ணீர் விட்டுக் கொள்ளலாம். கலவை கிரேவி பதத்தில்தான் வர வேண்டும். இறக்குவதற்கு முன் எலுமிச்சைச்சாறு ஊற்றி இறக்கவும் ..

கருவாட்டுக் குழம்பு





















தேவையானவை:

துண்டு கருவாடு - 200 கிராம்
புளிக்கரைசல் - 200 மில்லி
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 50 மில்லி
கடுகு - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2 பொடியாக நறுக்கவும்
பூண்டு - 10 முழுதாக போடவும்
தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
உப்பு - தேவையான அளவு
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:

சுடுதண்ணீரில் கருவாடை சுத்தம் செய்து சிறிதளவு எண்ணெயில் லேசாக வதக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு, 300 மில்லி தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம், பூண்டு, மல்லித்தழை, சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதில் புளிக்கரைசல் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு கருவாட்டைச் சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடம் வேகவிட்டு இறுதியாக தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்

திருநெல்வெலி மட்டன் குழம்பு





















தேவையானவை :

மட்டன் - அரை கிலோ
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
வேகவைத்த உருளைக்கிழங்கு - 150 கிராம்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

அரைக்க :

தேங்காய் -அரை முடி (துருவிக் கொள்ளவும்)
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்

தாளிக்க:

பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் -2
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

மட்டனை சுத்தம் செய்து , இஞ்சி - பூண்டு விழுது ,மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.இத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சேர்த்து மசாலா வாசனை வரும் வரை வதக்கவும்.பின் வேகவைத்த மட்டன் சேர்த்து வதக்கி அரைத்த விழுது சேர்க்கவும்,பச்சை வாசனை போனதும் கொத்தமல்லித்தழைதூவி இறக்கவும் ..