Monday, May 8, 2017

இடி சாம்பார்


Image result for சாம்பார்



தேவையான பொருட்கள்;

துவரம் பருப்பு - 150 கிராம்
கத்தரி -2
முருங்கை-1
அவரை- 100 கிராம்
வெண்டை- 5
உருளை - 2
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
புளி - எலுமிச்சையளவு.


தாளிக்க:
எண்ணெய் - 1 + 1  டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பால் பெருங்காயம் - பொடித்தது - அரை டீஸ்பூன்
சாம்பார் மேலே தூவ - நறுக்கிய மல்லி கருவேப்பிலை.

இடித்துக் கொள்ள அல்லது பொடித்துக் கொள்ள:

முழுமல்லி - 3 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
அரிசி - 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்  - 4 அல்லது 6


செய்முறை:-

பொடித்துக்கொள்ள சொல்லப்பட்ட பொருட்களை ,
வெறும் வாணலியில் நன்கு மணம் வரும் படி வறுத்துக் கொள்ள வேண்டும்.
அரிசி லேசாக சிவற வறுபட வேண்டும்.

ஆற விட்டு உரல் இருந்தால் இடித்துக் கொள்ளவும் இல்லாவிட்டால் ,
மிக்ஸி ஜாரில் போட்டு பர,பரப்பாக  பொடித்துக் கொள்ளவும்.
பருப்பை,உருளைக்கிழங்கை  குக்கரில் வேக வைத்து வைக்கவும்.புளியை கரைத்து வைக்கவும்.
கத்திரி,முருங்கை, அவரை,வெண்டை,வெங்காயம்,தக்காளி  நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கத்திரி,அவரை,முருங்கை தேவைக்கு தண்ணீர்,உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
வெந்த பின்பு நறுக்கிய தக்காளி வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகள் சேர்க்கவும்.
புளித்தண்ணீர் சேர்க்கவும்.பொடித்த சாம்பார் பொடி சேர்க்கவும்.
மஞ்சள் ,உப்புத்தூள்கள் சேர்க்கவும்.கலந்து விட்டு கொதிக்க வைக்கவும்.
வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம்,வெண்டைக்காய் வதக்கவும்.
கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரில் சேர்க்கவும்.கலந்து விடவும்.
வேகவைத்த பருப்பு சேர்க்கவும். உப்பு சரி பார்க்கவும்.
மூடி சிறிது நேரம் நன்கு கொதிக்க விடவும்.
தாளிக்க சொன்னவற்றை வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி கடுகு,உ.பருப்பு,வெந்தயம்,பொடித்த பால் பெருங்காயம் சேர்த்து தாளித்து ரெடியான சாம்பாரில் கொட்டவும். நறுக்கிய மல்லி கருவேப்பிலை சேர்க்கவும்.கலந்து விடவும்...


கேரளா மீன் குழம்பு


Image result for கேரளா மீன் குழம்பு



தேவையானவை :-

மீன் - 500 கிராம்
தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு  - 1 தேக்கரண்டி
வெந்தயம் பொடி - 1/4 தேக்கரண்டி
சாம்பார் வெங்காயம் - 20
பூண்டு - 5
கிராம்பு -சிறிதளவு
இஞ்சி - 2 துண்டு
பச்சை மிளகாய் - 2
காஷ்மீரி மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
கருப்பு மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
வெந்தயம்- ஒரு பெரிய சிட்டிகை
உப்பு- தேவைக்கேற்ப
புளி -சிறிதளவு

செய்முறை :-

மீனை சுத்தம் செய்து வைக்கவும். புளியை கரைத்து தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் காஷ்மீரி வத்தல் பொடி, மிளகு தூள்,
சேர்த்து நிறம் மாறும் வரை கிளறவும்.

பின்னர் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை கலந்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு மீனை சேர்த்து நன்றாக கலந்து மூடி வைத்து வேகவிடவும். மீன் வெந்ததும் மிளகு தூள், வெந்தயப்பொடி தூவி, அதனுடன் எண்ணெய் கலந்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு ,
 எண்ணெய் தனியாக மிதக்க ஆரம்பிக்கும் போது கிளறி இறக்கிவிடவும் 

ஆந்திர மீன் குழம்பு


Image result for ஆந்திர மீன் குழம்பு



தேவையானவை:-

மீன் - 300 கிராம்
எண்ணெய் - 1/2 கப்
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம்  - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
தக்காளி - 1
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம்,
வெந்தயம் போட்டு பொறிக்கவும். அதனுடன் சிறிது பெருங்காயம் சேர்க்கவும்.
வெட்டி வைத்துள்ள தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அதனுடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள மீன் துண்டுகளை மசாலா கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
பின்னர் தேவையான அளவு புளி தண்ணீரை சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விடவும். வெந்த பின் சிறிது கறிவேப்பிலை தூவி இறக்கவும்.