Sunday, January 31, 2016

மதுரை சிக்கன் குழம்பு

Chicken Kuzhambu - Madurai Munniyandi Vilas Style



தேவையான பொருட்கள்:

 சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் தேங்காய் பேஸ்ட் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 டீஸ்பூன் வறுத்து அரைப்பதற்கு... வரமிளகாய் - 6 மல்லி - 1 டீஸ்பூன் பச்சரிசி - 1 டீஸ்பூன் மிளகு - 1 டீஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன் கசகசா - 1 டீஸ்பூன் பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன் பட்டை - 1 இன்ச் கிராம்பு - 3 காய்ந்த தேங்காய் - 1 டீஸ்பூன் தாளிப்பதற்கு... கடுகு - 1/2 டீஸ்பூன் பிரியாணி இலை - 1 சோம்பு - 1/2 டீஸ்பூன் வரமிளகாய் - 2 \

செய்முறை: 

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிவிட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து, மஞ்சள் தூள் தூவி, சிக்கனின் நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு பிரட்டி, 2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் பேஸ்ட் சேர்த்து 5-8 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் மிதமான தீயில் குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட்டு, கொத்தமல்லியைத் தூவி மூடி வைத்து இறக்கினால், மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு ரெடி!!!

கொங்கு நாட்டு கோழி குழம்பு

Kongu Naadu Chicken Kuzhambu


 தேவையான பொருட்கள்: 

சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் வதக்கி அரைப்பதற்கு... சின்ன வெங்காயம் - 5-6 வரமிளகாய் - 6-7 மிளகு - 1 டீஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன் கசகசா - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 2 டீஸ்பூன் தாளிப்பதற்கு... கிராம்பு - 3-4 பட்டை - 1 இன்ச் சோம்பு - 1/2 டீஸ்பூன் 


செய்முறை:

 முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து, பின் அதில் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் மல்லித் தூளைத் தவிர அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும். இறுதியில் மல்லித் தூளை சேர்த்து பிரட்டி இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து, மிதமான தீயில் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். சிக்கனானது நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கொங்கு நாட்டு கோழிக் குழம்பு ரெடி!!!

காரைக்குடி நண்டு மசாலா

Karaikudi Nandu Masala



தேவையான பொருட்கள்: 

நண்டு - 1 கிலோ புளிக்கரைசல் - 1 கப் பட்டை - 2 பிரியாணி இலை -2 சோம்பு - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன் வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் மசாலாவிற்கு... துருவிய தேங்காய் - 1 கப் மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் கசகசா - 1 டேபிள் ஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன் முந்திரி - 3 எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 

செய்முறை: 

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, மிளகு, சீரகம், கசகசா, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து நண்டு சேர்த்து, பின் மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் நன்கு வதக்க வேண்டும். பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். இந்நிலையில் நண்டு ஓரளவு வெந்திருக்கும். பின்பு அதில் புளிக் கரைசல் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், காரைக்குடி நண்டு மசாலா ரெடி!!!

நெல்லை மீன் குழம்பு

Village Style Fish Curry


தேவையான பொருட்கள்: 

மீன் - 1/2 கிலோ (உங்களுக்கு பிடித்த மீன்) நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... தேங்காய் - 1 கப் (துருவியது) சின்ன வெங்காயம் - 10 வறுத்து அரைப்பதற்கு... வரமிளகாய் - 8-10 மல்லி - 2 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் 


செய்முறை: 

முதலில் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, இறக்கி குளிர வைக்க வேண்டும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதில் தேங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் அந்த பேஸ்ட் மற்றும் புளிச்சாற்றினை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருந்து எண்ணெய் தனியே பிரியும் போது, அதில் மீன் துண்டுகளை சேர்த்து கிளறி, மீன் நன்கு வெந்து எண்ணெய் பிரியும் போது இறக்கினால், சுவையான கிராமத்து மீன் குழம்பு ரெடி!!!

வான்கோழி பிரியாணி

Turkey Biryani/Vaankozhi Biryani


தேவையான பொருட்கள்: 

ஊற வைப்பதற்கு... வான்கோழி - 2-4 பெரிய துண்டுகள் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) நாட்டுத் தக்காளி - 1 (அரைத்தது) புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது) எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்) கல் உப்பு - சிறிது மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் தயிர் - 1/4 கப் பிரியாணிக்கு... பாசுமதி அரிசி - 2 கப் பச்சை மிளகாய் - 6 (நீளமாக கீறியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) உப்பு - தேவையான அளவு புதினா - 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு நெய் - 1 கப் தாளிப்பதற்கு... கிராம்பு - 3 பட்டை - 2 துண்டு ஏலக்காய் - 6 பிரியாணி இலை - 3 அன்னாசிப்பூ - 2 உலர்ந்த ரோஜாப்பூ இதழ் - சிறிது குங்குமப்பூ - சிறிது 

செய்முறை: 

முதலில் வான்கோழியை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ளவும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும் பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கிளறி, பின் ஊற வைத்துள்ள வான் கோழியை சேர்த்து கிளறி, 1/4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். பின் விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரிசியைப் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மிதமான தீயில் குக்கரை மூடி விசில் போடாமல் 10 நிமிடம் வைத்து இறக்கினால், வான்கோழி பிரியாணி ரெடி!!!

மதுரை மட்டன் சுக்கா

Madurai Mutton Chukka Recipe



தேவையான பொருட்கள்:

 மட்டன் - 200 கிராம் சின்ன வெங்காயம் - 1/4 கப் பூண்டு - 10 பற்கள் தக்காளி - 1 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் கெட்டியான தேங்காய் பால் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... சோம்பு - 1/2 டீஸ்பூன் பட்டை - 1/4 இன்ச் கிராம்பு - 2 பிரியாணி இலை - 1 கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டீஸ்பூன்

 செய்முறை: 

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டன் துண்டுகளைப் போட்டு, மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும். பின்பு அதில் சிறிது தண்ணீரை ஊற்றி, மிதமான தீயில் 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் தக்காளி சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் மீதமுள்ள மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள மட்டனை நீருடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். மட்டனில் உள்ள தண்ணீர் வற்றியதும், அதில் தேங்காய் பால் சேர்த்து, தேங்காய் பாலும் வற்றும் வரை நன்கு கிளறி இறக்கினால், மதுரை மட்டன் சுக்கா ரெடி!!!

கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா

Kerala Chicken Roast Masala


தேவையான பொருட்கள்: சிக்கன் - 500 கிராம் வெங்காயம் - 2 (நறுக்கியது) சோம்பு - 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா/சிக்கன் மசாலா - 1 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு ஊற வைப்பதற்கு... மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு


 செய்முறை: முதலில் சிக்கன் நன்கு சுத்தமாக நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்த பின், அதனை தனியாக வைத்துக் கொள்ளவும். பின் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, சிக்கன் துண்டுகளை போட்டு பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த சிக்கனை குக்கரில் போட்டு, அடுப்பில் வைத்து, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும். பின் அதில் மசாலாப் பொடிகள் அனைத்தையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும். அடுத்து அதில் குக்கரில் உள்ள வேக வைத்த சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து 5-6 நிமிடம் வேக வைக்கவும். எண்ணெய் தனியாக பிரியும் போது அதனை இறக்கி பரிமாறினால், கேரளா சிக்கன் ரோஸ்ட் மசாலா ரெடி!!!

கத்திரிக்காய் சாம்பார்

Brinjal Sambar Recipe



தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் - 4 (நறுக்கியது) 
துவரம் பருப்பு - 1/2 கப் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
புளி - 1 நெல்லிக்காய் அளவு 
சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

 செய்முறை: 
முதலில் புளியை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் துவரம் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி, பின் கத்திரிக்காயை சேர்த்து நன்கு கத்திரிக்காய் வேகும் வரை வதக்க வேண்டும். அடுத்து அதில் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, மிளகாய் தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இறுதியில் புளிச்சாற்றினை ஊற்றி, வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கத்திரிக்காய் சாம்பார் ரெடி!!!

சாம்பார்



தேவையான பொருட்கள்
  • துவரம் பருப்பு   –    1 /2 கப்
  • சாம்பார் வெங்காயம் – 1 /4 கப்
  • தக்காளி    –   1
  • பூண்டு  –   3 பல்
  • முருங்கைகாய்   –    1/4 கப்
  • மசாலா தூள்  – 1 தேக்கரண்டி
  • சாம்பார் தூள்  – 1 /2 தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி –   1/4 தேக்கரண்டி
தாளிக்க
  • பெருங்காயம்    –    1/4 தேக்கரண்டி
  • கடுகு    –   1/2 தேக்கரண்டி
  • வரமிளகாய்  –  2
  • சீரகம்  – 1 /2 தேக்கரண்டி
  • புளிச்சாறு  – 2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி    –    சிறிது
  • கருவேப்பிலை  – சிறிது
  • எண்ணெய்  – 1 தேக்கரண்டி
  • நெய் – 1 தேக்கரண்டி

செய்முறை

  1. குக்கரில் சிறிது நெய் விட்டு,  துவரம் பருப்பை லேசாக நெய்யில் பிரட்டி பிறகு 2 – 3 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில்கள் வரை வேக வைக்கவும்.
  2. ஒரு வாணலியில், சிறிதளவு நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை, வரமிளகாய், சீரகம் சேர்த்து வெடிக்க விடவும்.
  3. இதில் வெங்காயம்,  பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  4. பிறகு தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
  5. எல்லாக் காய்கறிகளையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  6. பிறகு, மஞ்சள், மசாலா பொடிகள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  7. இத்துடன் வேகவைத்த பருப்பை சேர்த்து , தண்ணீரையும், புளிச்சாரையும்  சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  8. காய்கறிகள் வெந்தவுடன் சாம்பார் பொடியையும் சேர்த்து கொதிக்க விடவும்.
  9. இறுதியில் சிறிது நெய்யையும், கொத்தமல்லியையும் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு
சாம்பார் இட்லி, தோசை, சாதத்துடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

கேரளா மீன் குழம்பு / மீன் கூட்டான்




தேவையான பொருட்கள்
  • சின்ன மீன் – 1/2 கிலோ (தலை, வால் நீக்கியது )
  • சின்ன வெங்காயம் – 1/2 கப்(விருப்பமெனில்)
  • இஞ்சி – 1
    விரல் துண்டு (பொடியாக நறுக்கியது)
  • பூண்டு – 4 – 5 பல்
  • மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
  • வெந்தயத்தூள் – 1/4 தேக்கரண்டி
  • புளி – 1 கோலி குண்டு அளவு (அ) மாங்காய் துண்டுகள் – 8 (அ ) குடம் புளி – 3 – 4
  • தேங்காய் அரைத்தது – 1 கப்
  • தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • கடுகு – 1 /2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 2 – 3
  • கருவேப்பிலை – 1 கொத்து
செய்முறை
  1. மீனை தலை, வால் நீக்கி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. மீனை குழம்பு செய்யும் பாத்திரத்தில் போட்டு, தேவையெனில் வெங்காயம் , பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், கருவேப்பிலை,இஞ்சி, பூண்டு அரைத்து சேர்த்து, சட்டியில்உருட்டினார் போல பிரட்டிக் கொள்ளவும்.
  3. புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சட்டியில் ஊற்றி , அடுப்பில் வைத்து வேக விடவும்.
  4. மீன் நன்கு வந்தவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  5. ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, கருவேப்பிலை தாளித்து குழம்பில் கொட்டவும்.
  6. சூடான சாதத்துடன் பரிமாறவும்.
குறிப்பு
  1. மீன் குழம்பை மண் சட்டியில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
  2. தேங்காய் எண்ணெய்க்குப் பதில் அவரவர் விரும்பும் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

காரைக்குடி மீன் குருமா



தேவையான பொருட்கள்
  •  மீன்  – 1 /2 கிலோ
  • தக்காளி – 150 கிராம்
  • வெங்காயம் – 150 கிராம்
  • சம பங்கு இஞ்சி, பூண்டு விழுது – 1  தேக்கரண்டி
  • தேங்காய் – 1 /2 மூடி
  • பச்சை மிளகாய் – 4
  • சோம்பு – 1  தேக்கரண்டி
  • கசகசா – 1 /2 தேக்கரண்டி (விருப்பமெனில்)
  • மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
  • தனியாத்தூள் – 3  தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
  • பிரிஞ்சி இலை – 2
  • மிளகுத்தூள் – 1  தேக்கரண்டி
  • புளி- கோலி குண்டு அளவு
  • கருவேப்பிலை – 2  கொத்து
  • எண்ணெய் , உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
  1. மீனை வட்டமாக நறுக்கி, கல் உப்பு சேர்த்த தண்ணீரில் நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.
  2. தேங்காய், பச்சை மிளகாய், கசகசா,மிளகு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் பிரிஞ்சி இலை, சோம்பு சேர்த்து பொரித்து, பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்நிறமாக வதக்கவும்.
  4. இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
  5. இப்பொழுது மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் அரிது வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். இதனுடன் 2  பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. குருமா கொதிக்க ஆரம்பித்தவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை ஒவ்வொன்றாக குருமாவில் சேர்த்து வேக விடவும்.
  7. குருமா இறக்குவதற்கு முன்பாக புளிகரைசலை சேர்த்து கொதிக்கவிட்டு, கொதி வந்தவுடன் மல்லித்தழை தூவி பரிமாறவும்.
  8. இட்லி, தோசை, வெள்ளை சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு 
எல்லா வகை மீன்களிலும் இந்த குருமா செய்யலாம்.

மிளகு காளான் / பெப்பர் மஸ்ரூம்




தேவையான பொருட்கள்:

எண்ணெய் தேவையான அளவு
கடுகு, உளுந்து, கருவேப்பிலை
பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - இரண்டு
பச்சை மிளகாய் நறுக்கியது - 1
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகு தூள் - இரண்டு ஸ்பூன்
காளான் - நறுக்கியது - 250 கிராம்
உப்பு தேவையான அளவு
இந்த செய்முறைக்கு தண்ணீர் தேவை இல்லை

செய்முறை:

கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடவும். பின்பு கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.

பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நறுக்கிய காளான் -ஐ இதோடு சேர்த்து வதக்கவும்.

இரண்டு நிமிடம் கழித்து காளான் நன்றாக தண்ணீர் விடும். இப்பொழுது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, மூடி விடவும்.

ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை காளான்-ஐ நன்கு கிளறி விடவும். 15 நிமிடத்தில் தண்ணீர் முற்றிலும் வற்றி விடும்.


இப்போது அடுப்பை அணைத்து விட்டு மிளகு தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டால் வேலை முடிந்தது !!!! :)

குறிப்பு :
தயிர் சாதம், லெமன் சாதம், சப்பாத்தி இவற்றுடன் மிக நன்றாக இருக்கும்.

பூண்டு புளி குழம்பு





 தேவையான பொருட்கள்: 

  •  பூண்டு - பத்து அல்லது பதினைந்து பல் நல்லெண்ணெய் - ஆறு ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பில்லை - கொஞ்சம்

  • வெந்தயம் - ஒரு ஸ்பூன்

  • சின்ன வெங்காயம் - ஒரு கை நிறைய. (சின்ன வெங்காயம் இல்லை என்றால் பெரிய வெங்காயம் ஒன்று)

  • தக்காளி - பெரியது ஒன்று

  • மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

  • மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

  • மல்லி தூள் - 1 ஸ்பூன்

  • புளி - ஒரு நெல்லிக்காய் அளவு (புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்)

  • அரிசி மாவு - 2 ஸ்பூன்

  • உப்பு
செய்முறை 

  1. தக்காளி, வெங்காயம் இரண்டையும் மிக்சி-யில் நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும்.

  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை சேர்க்கவும்.

  3. கடுகு பொரிந்ததும் பூண்டு பற்களை சேர்க்கலாம். இரண்டு நிமிடம் பூண்டு வதங்கியதும் அரைத்த வெங்காயம் தக்காளி சேர்க்கவும்.

  4. பச்சை வாடை போனதும் மஞ்சள், மிளகாய், மல்லி தூள்கள் + உப்பு சேர்க்கவும். பின் இரண்டு கப் தண்ணீர் விடவும்.

  5. தண்ணீர் நன்றாக வற்றி அல்லது பூண்டு வெந்ததும், அரிசி மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.

  6. இரண்டு நிமிடம் கழித்து மல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.

வெங்காய குழம்பு




தேவையான பொருட்கள்:
  1. நல்லெண்ணெய் - 6 ஸ்பூன் (நல்லெண்ணெய் உடம்புக்கு நல்லதுதான். பயபடாம நெறைய சேர்த்துகோங்க)
  2. கடுகு, உளுந்து, கருவேப்பில்லை - கொஞ்சம்
  3. வெந்தயம் - கால் ஸ்பூன் (optional)
  4. பெரிய வெங்காயம் - 2  பொடியாக நறுக்கியது
  5. பச்சை மிளகாய் - 3 பொடியாக நறுக்கியது
  6. மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
  7. புளி - நெல்லிக்காய் அளவு (புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளுங்கள்)
  8. உப்பு
செய்முறை:
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளுங்கள்.
  • வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
  • உப்பு, மஞ்சள் தூள், புளி கரைசல் + அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடுங்கள்.
  • தண்ணீர் வற்றியதும் சூடாக பரிமாறுங்கள்.
சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு நல்ல காம்பினேசன்.

பருப்பு உருண்டை குழம்பு




தேவையான பொருட்கள்:
நலெண்ணெய் - 4  ஸ்பூன்
கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை - கொஞ்சம்
சின்ன வெங்காயம் / பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2 கை
பொடியாக நறுக்கிய தக்காளி - 4
புளி கரைசல் - அரை கப்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மல்லி தூள் , மிளகாய் தூள் - தலா 1  1 /2  ஸ்பூன்
உப்பு
மல்லி தழை - கொஞ்சம்
 
பருப்பு உருண்டை பிடிக்க:
15 நிமிடம் நீரில் ஊற வைத்த கடலை பருப்பு - 3 /4  கப்
பொடியாக அறிந்த வெங்காயம் - 6 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 /2  ஸ்பூன்
உப்பு
 
15 நிமிடம் கழித்து பருப்பு கழுவி நீரை வடித்து விட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும். அரைக்கும் போது தண்ணீர் விட தேவை இல்லை. மற்ற சாமான்களை பருப்புடன் சேர்த்து பிசைந்து உருண்டை பிடித்து வைத்து கொள்ளவும்.
 
செய்முறை:
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுந்து , வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும். வெந்தயம் சேர்பதால் குழம்பு வாசனை வீட்டையே தூக்கும் !!!
  • இப்போ வெங்காயம், தக்காளி சேர்த்து நல்லா வதக்குங்க. அப்புறம் புளி கரைசல், மஞ்சள் தூள், மல்லி + மிளகாய் தூள், உப்பு + 4 கப் தண்ணீர் எல்லாவற்றையும் ஒரே ஷாட்டில் சேர்த்துடுங்க.
  • குழம்பு நல்லா கொதிக்கும் போது உருட்டி வெச்சிருக்கும் பருப்பை ஒன்றன் பின் ஒன்றாக போடுங்க.
  • அடுப்பை அணைத்து விட்டு மல்லி தழை சேர்த்து பரிமாறவும்.

வறுத்து அரைத்த சிக்கன் கிரேவி



தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - பொடியாக அரிந்தது - 3
தக்காளி - பொடியாக அரிந்தது - 4
இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - இரண்டு ஸ்பூன்
மல்லி தூள் - மூன்று ஸ்பூன்
சீரக தூள் - இரண்டு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
கிராம்பு - 4
சோம்பு, மிளகு - அரை ஸ்பூன்
பட்டை, பிரிஞ்சி இலை, ஸ்டார் பிரிஞ்சி, ஏலக்காய் - 3 சிறிய பீஸ்
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
(மேற்சொன்ன அனைத்தையும் எண்ணெய் விடாமல் வறுத்து தேங்காய் துருவலுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து வைத்து கொள்ளவும்)
தாளிக்க :
சமையல் எண்ணெய் - 7 ஸ்பூன்
கடுகு, உளுந்து, கருவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை:
  1. கடாயில் எண்ணெய் விட்டு, கடு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
  2.  
  3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். தக்காளி நீர் விட்டு நன்கு கூழ் ஆகும் வரை வதக்கவும்.
  4.  
  5. சிக்கனை சுத்தம் செய்து, கழுவி இத்துடன் சேர்த்து வதக்கவும். பின் அணைத்து பொடி வகைகள் + உப்பு சேர்த்து 15 -20 நிமிடம் மிதமான சூட்டில் மூடி போட்டு சமைக்கவும். தண்ணீர் விட தேவையில்லை.
  6.  
  7. சிக்கன் நீர் விட்டு நன்கு வெந்திருக்கும். இப்போது அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து கிளறி 5 நிமிடம் சமைக்கவும்.
             அரிந்த கொத்தமல்லி தூவி பரிமாறுங்கள்...

Sunday, January 17, 2016

மீன் குழம்பு / fish curry



 தேவையான பொருட்கள்;
மீனை சுத்தம் செய்து துண்டு போட்டு நன்கு வாடை போக அலசிக் கொள்ளவும்.உப்பு மஞ்சள் தூள் போட்டு விரவி மீண்டும் அலசவும்.தண்ணீர் வடித்து வைக்கவும்.
அரைக்கிலோ மீனிற்கு இரண்டு தக்காளி மிக்ஸி ஜாரில்  சுற்றி வைக்கவும்.நூறு கிராம் சின்ன வெங்காயம், ஒரு 6 பல்லு பூண்டு சேர்த்து அதையும் தனியாக பரபரன்னு சுற்றி வைக்கவும். எலுமிச்சை அளவு புளி கரைத்து வைக்கவும்.பச்சை மிளகாய் 2 கீரி வைக்கவும்.மல்லி கருவேப்பிலை , தேங்காய் அரைத்த விழுது அரை கப் ரெடி செய்து கொள்ளவும்.

ஒரு மண் சட்டியில் நல்ல எண்ணெய் 3- 4 டேபிள்ஸ்பூன் விடவும். எண்ணெய் சூடானவுடன் சிறிது  கடுகு,வெந்தயம்,உளுத்தம் பருப்பு சேர்க்கவும். எல்லாம் பொரிந்து வரும்பொழுது கருவேப்பிலை சேர்க்கவும்.
தட்டிய,வெங்காயம் பூண்டு, கீரிய மிளகாய் சேர்க்கவும்.நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
அரைத்த தக்காளி விழுது சேர்க்கவும்.சிம்மில் வைத்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

காரத்திற்கு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், மீன் மசாலா 2டேபிள்ஸ்பூன் சேர்க்கவும்.
நன்கு வதக்கவும்.புளித்தண்ணீர் சேர்க்கவும்.
நன்கு கொதித்து பச்சை வாடை அடங்கியவுடன்  மீன் சேர்க்கவும்.

 
மீன் வெந்து வரும் பொழுது அரைத்த தேங்காய் விட்டு தேவைக்கு தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்து சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.
எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் அடுப்பை அணைக்கவும்.

மட்டன் குருமா / Mutton Kurma



தேவையான பொருட்கள்;
மட்டன் – அரைக்கிலோ
எண்ணெய் – 4  டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 200 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 - 4  டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன் (ஏலம் பட்டை கிராம்பு)
பச்சை மிளகாய் – 10

காரத்திற்கு பச்சை மிளகாய் மட்டும்.
தயிர் – அரை கப்
டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ்  (பாதி எலுமிச்சைப்பழம் ) 
நறுக்கிய மல்லி புதினா

பொடிக்க:
முழு மல்லி – 4  டீஸ்பூன
முழு சீரகம் – 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை – 1 டீஸ்பூன்
விரும்பினால் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்துக்கொள்ளலாம்.
அரைக்க:
அரை கப் தேங்காய் துருவல் + 2 டேபிள்ஸ்பூன் கசகசா அல்லது 25 கிராம்முந்திரிபருப்பு (கசகசா இல்லையென்றால் முந்திரி பருப்புசேர்த்துநைசாக அரைத்து வைக்கவும்.
தேங்காய் அரைக்க விரும்பாமல் தேங்காய் பால் எடுத்து ஊற்றவிரும்புபவர்கள் ஒரு காயில்  திக் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மட்டன் துண்டுகளில் உள்ள தேவையில்லாத சவ்வுகொழுப்பு  நீக்கிசுத்தம் செய்து கொள்ளவும்மூன்று தண்ணீர் விட்டு அலசி தண்ணீர்வடித்துக் கொள்ளவும்.

மட்டனோடு தயிர் தேவைக்கு உப்புஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டுசேர்த்து விரவி வைக்கவும்.

குருமாத்தூள் பொடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்நறுக்கிய 
வெங்காயம் சேர்த்து நன்கு மசிய வதக்கவும்.
சிம்மில் வைத்து மூடி ஒரு நிமிடம் வதங்கவிடவும்இஞ்சி பூண்டு பேஸ்ட்கரம் மசாலா நறுக்கிய மல்லிபுதினாகீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.


ஊறிய மட்டன் சேர்த்து நன்கு பிரட்டி பொடித்த மசாலா தேவைக்கு 
    ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விசில் போட்டு 10 நிமிடம்வேக வைக்கவும்.

ஆவியடங்கியவுடன் திறக்கவும்அரைத்த தேங்காய் விழுது அல்லதுதேங்காய்ப்பால் சேர்க்கவும்.உப்பு சரிபார்க்கவும்கொதி வர விடவும்.நடுவிலும் சுற்றிலும் கொதி வரவும் சிம்மில் வைத்து 5 நிமிடம் மூடவும்.எண்ணெய் மேலே வரும்எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும் அல்லது கறியிலும் பாதி எலுமிச்சைப்பழம் பிழியலாம்....