Monday, July 20, 2020

மட்டன் ஈரல் மசாலா























தேவையான  பொருட்கள்: 

மட்டன் ஈரல் -1/2 kg 
பெரிய வெங்காயம் -2
தக்காளி -2
சோம்பு -1  ஸ்பூன்
நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
மிளகாய் தூள்-2   ஸ்பூன்
மஞ்சள் தூள் -1 ஸ்பூன்
மிளகுத் தூள் -1  ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கரம் மசாலா -1  ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் -4 

செய்முறை:
மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
வெங்காயம் தக்காளியை  சிறிதாக  நறுக்கிக் கொள்ளவும்
குக்கரில் ஈரல் உப்பு, மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் , இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் . 1  டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 5 விசில் வேகவிடவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு வெங்காயம் பச்சை மிளகாயை வதக்கவும்
வேக வைத்து வைத்துள்ள ஈரலை சேர்க்கவும் நன்கு  வதங்கியதும் 
மிளகுத்தூள் சேர்த்து  கிளறி இறக்கவும் ...

மட்டன் உப்புகறி
























தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 kg  தனி கறி  
இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் 75 கிராம்
வரமிளகாய் 5
கருவேப்பிலை சிறிது
மிளகு 15 கிராம்
சீரகம் 7 கிராம்
உப்பு தேவையான அளவு
தேங்காய் எண்ணெய்  தேவையான அளவு 

செய்முறை:

மிளகு, சீரகம் வறுத்து பொடி செய்து வைக்கவும்.
தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய கருவேப்பிலை ,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
வேகவைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்,
உப்பு சேர்த்து தண்ணீர் வற்றி வரும் போது இடித்த மிளகு சீரகப்பொடி சேர்த்து நன்கு வறுத்து  இறக்கவும் 

மட்டன் கிரேவி

























தேவையான பொருட்கள்

ஆட்டுக்கறி - 1/2 kg
எண்ணெய் 4 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது 4 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
நறுக்கிய பெரிய வெங்காயம்-2
பெரிய தக்காளி -1
பச்சை மிளகாய் -2
நறுக்கிய மல்லி இலை - சிறிது
தயிர் - 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒன்னரை தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை அல்லது 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு.

செய்முறை

கறியை நன்கு அலசி  மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது,தயிர்,உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.  குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து சிவக்க  வதக்கவும். 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு, கரம் மசாலா சேர்க்கவும்.
அடுத்து தக்காளி,பச்சை மிளகாய் ,மல்லி இலை, உப்பும் சேர்த்து வதக்கவும்.
மிளகாய்த்தூள்,சீரகத்தூள் சேர்த்து பிரட்டவும்.
ஊற வைத்த கறி சேர்க்கவும்.தேவைக்கு அரை கப் தண்ணீர் சேர்க்கவும்
உப்பு காரம் சரி பார்த்து  5 விசில் வைத்து அடுப்பை அணைத்து  இறக்கவும் 

மட்டன் ப்ரை




























தேவையான பொருட்கள்

மட்டன் -1/2 kg
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் தேவையான அளவு
சோம்பு ஒரு டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் ஒன்று
பட்டை சிறிதளவு
கிராம்பு ஒன்று
மல்லித்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
கரம்மசாலா ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
மட்டன் மசாலா ஒரு டேபிள்ஸ்பூன் (optional)

செய்முறை

மட்டனை சிறிது உப்பு சிறிது மஞ்சள் சேர்த்து  5 விசில் வேக விடவும்
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
ஒரு கடாயில் என்னை ஊற்றி சீரகம் சோம்பு ஏலக்காய் சேர்க்க வேண்டும்
பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிறகு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் பிறகு அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். மட்டனில் உப்பு சேர்த்து உள்ளது ஆகையால் அதற்கு ஏற்றாற்போல் உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்
அனைத்தையும் சேர்த்து பச்சை வாசனை போன பிறகு வேக வைத்த மட்டனை அதனுடன் சேர்க்க வேண்டும்
வேக வைத்த மட்டன் தண்ணீரே போதுமானது தண்ணீர் சேர்க்க வேண்டாம்
தண்ணீர் வற்றி  கட்டியான  பதத்திற்கு வந்த பிறகு கொத்தமல்லியை சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கிவிடவும் 

வள்ளி கிழங்கு மட்டன் சுக்கா






















தேவையான பொருட்கள்:

மட்டன் 1/2  kg 
வெங்காயம் 1
காய்ந்த மிளகாய் 4
தக்காளி சிறியது ஒன்று
வள்ளி கிழங்கு (கப்பை)- 1/2 kg  
மிளகு துாள் 1/2 ஸ்புன்
மிளகாய் துாள் 1 ஸ்பூன்
மல்லித்துாள் 1/2 ஸ்பூன்
இஞ்சி புண்டு விழுது 2 ஸ்பூன்
உப்பு ( தேவையான அளவு)
எண்ணெய்( தேவையான அளவு)
கரம் மசாலா தூள் 1/2 ஸ்பூன
கறிவேப்பிலை( சிறிது)
சோம்பு ( சிறிதளவு)

செய்முறை:

முதலில்  வள்ளிக்கிழங்கை (கப்பை) தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டவும், பின்னர் மட்டனை கழுவி குக்காில் மஞ்சள் தூள் ,வள்ளிக்கிழங்கு,
சிறிது இஞ்சி புண்டு விழுது சோ்த்து 4 விசில் வைக்க வேண்டும்.
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்  பின்பு இஞ்சி பூண்டு விழுது , 
தக்காளி சேர்த்து வதக்கி , வேக வைத்த மட்டனை சேர்த்து நன்கு வதக்கவும். 
மட்டன் தண்ணீர் வத்தியதும் மிளகு தூள்,மிளகாய் தூள்,தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதக்கி பத்து நிமிடம் வேக விட்டு கறிவேப்பிலை சேர்த்து  இறக்கவும் 

Tuesday, July 14, 2020

நாஞ்சில் சாம்பார்
























தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு – 1/2 கப்
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 2
முருங்கைக்காய், கத்திரிக்காய், கேரட், உருளைக்கிழங்கு – தலா ஒன்று
வெண்டைக்காய் – 4
பூசணிக்காய் – சிறிய துண்டு
மாங்காய்  – 4 சிறிய துண்டு
புளி – சிறிய எலுமிச்சை அளவு உருண்டை
பெருங்காயம் – சிறிய துண்டு
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
கடுகு , உளுந்து – 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 1
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சாம்பார் பொடிக்கு 
மிளகாய் வற்றல் – 7
கொத்தமல்லி  – 1.5 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

கழுவிய துவரம்பருப்பை குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி
 8 விசில் வரும் வரை  வேகவைத்துக் கொள்ளவும். 
புளியை 1 கப் தண்ணீரில் ஊறவைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
வாணலியை லேசாக சூடாக்கி கொத்யமல்லியை  சேர்த்து வாசம் வரும் வரை வறுக்கவும். 
கொத்தமல்லி  நிறம் மாறும் போது சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். 
பின் மிளகாய் வற்றல் சேர்த்து லேசாக வறுக்கவும். பின்  மிக்சியில்  நைசாக பொடித்துக் கொள்ளவும்.
கடாயில் நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து
 மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும்.
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம், சின்ன வெங்காயம், 
பச்சை மிளகாய், நறுக்கிய கேரட் மற்றும் வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.
முருங்கைக்காய், கத்திரிக்காய் பாதி வெந்ததும் வதக்கிய பொருட்களை சேர்த்து வேகவிடவும்.
காய்கறிகள் வெந்ததும் நறுக்கிய பூசணிக்காய், மாங்காய், புளிக்கரைச்சல், மஞ்சள்தூள், 
அரைத்த சாம்பார் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மூடி வைத்து கொதிக்கவிடவும்.
பின் பெருங்காயம் மற்றும் வேகவைத்த துவரம்பருப்பு 
மேலும் 1 கப் தண்ணீர் ஊற்றி கலந்து மிதமான சூட்டில் வைத்து 7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
சாம்பார் நன்கு கொதித்ததும் கிள்ளிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்து சூடான சாம்பாரில் கலந்து கொள்ளவும் ....

கூட்டான் சோறு (அல்லது) கதம்பசோறு


 






















தேவையானவை :

புழுங்கல் அரிசி - 200 கிராம்
பருப்பு - 50 கிராம்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
காயகறிகள் - கால் கிலோ
முருங்கைக்கீரை - ஒரு கப்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கு,
கத்திரிக்காய் -4,
முருங்கைக்காய் -1,
கேரட் -1,
உருளை கிழங்கு  -1
அவரைக்காய் - 4,
வாழைக்காய் சிறிது - 1,
மாங்காய் சிறிது -1. 

அரைத்த மசாலாவுக்கு:
தேங்காய்த் துருவல்  - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2 அல்லது 3
சின்ன வெங்காயம் - 10

தாளிக்க:
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
கடுகு ,உளுத்தம் பருப்பு - 1 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு.
வடகம் உடைத்தது - ஒன்று
பெருங்காயம் - கால் டீஸ்பூன்.
நெய் -  2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் அரிசி பருப்பை நன்கு களைந்து அலசி நான்கு  கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.
காய்கறிகளை நீளவாக்கில்  நறுக்கி எடுக்கவும்.மசாலாவை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும். புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும்.முருங்கை கீரையை ஆய்ந்து நன்கு அலசி காய்கறிகளுடன் தயாராக வைக்கவும்.குக்காரில்  ஊற வைத்த அரிசி பருப்பு சேர்த்து கொதி வரும்வரை மூடி மட்டும் போட்டு அடுப்பை  சிம்மில் வைக்கவும்.
 ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு தயாராக நறுக்கிய காய்கறிகள் வதக்கவும்,
மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும்.கீரை சேர்த்து வதக்கவும்.அரைத்த மசால் சேர்க்கவும்.கொதி வரட்டும்.
காய்கறிகள்  பாதி வேக்காடு ஆனவுடன்
புளித்தண்ணீர் சேர்க்கவும்,தேவைக்கு உப்பு சேர்க்கவும்.ஒன்று சேர்ந்து நன்கு கொதிக்கட்டும்.
வெந்த அரிசி பருப்பில் தயார் செய்த காய்கறிக்கலவை சேர்க்கவும்.
பிரட்டி விடவும்.மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்தபின் குக்கரை குறைத்து 7-10 நிமிடம், மூடி வெயிட் போட்டு சிம்மில் வைத்து இறக்கவும்
பின் தாளிக்க  அடுப்பில் வாணலியில் எண்ணெய் சூடானவுடன் கடுகு,உளுத்தம் பருப்பு கருவேப்பிலை வெடிக்க விடவும், வடகம் சேர்த்து பொரிய விடவும்,பெருங்காயப் பொடி சேர்க்கவும்.
தாளித்ததை ரெடியான கூட்டாஞ்சோறுவில் சேர்க்கவும்.
நெய்  சேர்த்து கிளறி விடவும்
சுவையான  கூட்டாஞ்சோறு ரெடி.