Thursday, September 26, 2013

ராஜஸ்தான் மட்டன் குழம்பு



தேவையான பொருட்கள்: 

மட்டன் - 1 கிலோ 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் 
தக்காளி - 2 (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
வரமிளகாய் - 8 
சீரகம் - 1 டீஸ்பூன் 
மிளகு - 1 டீஸ்பூன் 
மல்லி - 1 டேபிள் ஸ்பூன் 
கசகசா - 1 டீஸ்பூன் 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
பட்டை - 1 இன்ச் 
ஏலக்காய் - 5 
பிரியாணி இலை - 1 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். 
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, 
அதில் மட்டனைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, 
மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, 
மூடி வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும். 
பின் மிக்ஸியில் வரமிளகாய், சீரகம், மல்லி, 
மிளகு, கடுகு, கசகசா ஆகியவற்றைப் போட்டு, 
தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். 
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 
அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, 
ஏலக்காய், பட்டை ஆகியவற்றைப் போட்டு 
தாளித்துக் கொள்ள வேண்டும். 
அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, 
4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக வதக்க வேண்டும். 
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, 
வேக வைத்துள்ள மட்டனை போட்டு கிளறி, 
3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும். 
இறுதியில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை போட்டு, 
மட்டனில் மசாலா நன்கு ஒட்டுமாறு பிரட்டி விட வேண்டும். 
பிறகு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 
7-8 நிமிடம் தொடர்ந்து பிரட்டி விடவும். 
கடைசியாக 3 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 
15 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும். 
இப்போது சூப்பரான ஜங்லி மட்டன் குழம்பு ரெடி!!!

சிக்கன் புலாவ் ரெசிபி




தேவையான பொருட்கள்: 

அரிசி - 2 கப் 
சிக்கன் - 250 கிராம் (சிறிதாக வெட்டியது) 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1 சிட்டிகை 
சீரகம் - 1 டீஸ்பூன் 
பிரியாணி இலை - 1 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
தண்ணீர் - 2 கப்

செய்முறை: 

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி ,
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
பின் அரிசியை நன்கு கழுவி, 
2 கப் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, 
அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 
பிரியாணி இலை மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து, 
வெங்காயத்தைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 
2 நிமிடம் வதக்க வேண்டும். 
பின் அதில் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 
தக்காளியைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். 
பின்பு மிளகாய் தூள், மல்லி தூள், சீரகப் பொடி, 
கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். 
அடுத்து கழுவி வைத்துள்ள சிக்கனைப் போட்டு, 
4-5 நிமிடம் வதக்க வேண்டும். 
இறுதியில் ஊற வைத்துள்ள அரிசியை ,
தண்ணீருடன் சேர்த்து குக்கரில் ஊற்றி கிளறி, 
மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கினால், 
எளிமையான சிக்கன் புலாவ் ரெடி!!!





மைதா தோசை




தேவையான பொருட்கள்: 
மைதா மாவு - 1 கப் 
பச்சரிசி மாவு - 3/4 கப் 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) 
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
 கடுகு - 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1/4 டீஸ்பூன் 
மிளகு - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பச்சரிசி மாவு, 
உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 
தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 
அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், 
கடுகு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, 
வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கி, அதனை கலந்து வைத்துள்ள மைதா மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 
பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், 
கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி, எண்ணெய் சேர்த்து முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான மைதா தோசை ரெடி!!! 

மட்டன் தம் பக்த்



தேவையான பொருட்கள்:
மட்டன் - 1 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை ஏலக்காய் - 2-3
மிளகு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
கருப்பு ஏலக்காய் - 1
தயிர் - 1 கப்
பச்சை மிளகாய் - 4
 புதினா - 1/2 கப் (நறுக்கியது)
கொத்தமல்லி - ஃ/1 கப் (நறுக்கியது)
கோதுமை மாவு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 1/2 கப்


செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, பச்சை ஏலக்காய்,
கருப்பு ஏலக்காய், கிராம்பு, சீரகம், மிளகு
மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த பேஸ்ட்டை, கழுவி வைத்துள்ள மட்டனுடன் சேர்த்து ,
தயிர் ஊற்றி, 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
2 மணிநேரம் ஆன பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
வெங்காயத்தைப் போட்டு தீயை குறைவில் வைத்து,
5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்,
பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி,
 ஊற வைத்துள்ள மட்டனைப் போட்டு,
உப்பு தூவி கிளறி, 7-8 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
மட்டனும், எண்ணெயும் தனியாக பிரியும் போது, தண்ணீர் ஊற்றி,
மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
பிறகு கோதுமை மாவை தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி பதத்தில் பிசைந்து,
வாணலியை மூடுமாறான வட்டத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மூடி வைத்துள்ள வாணலியை திறந்து,
அதனை கோதுமை மாவால் மூடி, தீயை குறைவில் வைத்து,
30 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சூப்பரான மட்டன் தம் பக்த் ரெசிபி ரெடி!!!

Saturday, July 13, 2013

மலபார் ஸ்டைல்... பிஷ் ப்ரை!!!



தேவையான பொருட்கள்: 

மீன் - 8 (ஏதேனும் ஒரு மீன்) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். பின் கழுவிய மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பை சேர்த்து பிரட்டி, தனியாக வைத்துக் கொள்ளவும். பின் மற்றொரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மீன் நன்கு ஊறியதும், அந்த மீன் துண்டுகளில் கலந்து வைத்து கலவையை தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், மீன் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். இப்போது சுவையான மலபார் ஸ்டைல் மீன் ப்ரை ரெடி!!!

சிக்கன் மிளகு வறுவல்



தேவையான பொருட்கள்: 

எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ 
மிளகு - 1 டீஸ்பூன் 
மிளகு தூள் - 4 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
வரமிளகாய் - 3 
கறிவேப்பிலை - சிறிது 
வெங்காயம் - 2 ( 1 அரைத்தது, 
மற்றொன்று நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் 
வினிகர் - 2 டீஸ்பூன் 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் சிக்கனை நன்க கழுவி, நீரை நன்கு வடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த சிக்கனில், வினிகர், அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் 1 டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகு, வரமிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மீதமுள்ள மிளகுத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு, ஒரு 5 நிமிடம் கிளறி விட வேண்டும். பின்பு அதனை ஒரு தட்டை வைத்து மூடி, சிக்கன் வேகும் வரை மூடி அவ்வப்போது கிளறியும் விட வேண்டும். சிக்கனானது மென்மையானதும், அதனை இறக்கி, கொத்தமல்லி தூவி மூடி வைக்க வேண்டும். இப்போது அருமையான சிக்கன் மிளகு வறுவல் ரெடி!!!


சிக்கன் கேஃப்ரியல்



தேவையான பொருட்கள்: 
சிக்கன் - 1 கிலோ (8 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்) 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
மல்லி - 1 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
கிராம்பு - 6 
பச்சை ஏலக்காய் - 8 
மிளகு - 8 
பட்டை - 1 இன்ச் 
இஞ்சி - 1 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது) 
பூண்டு - 4-6 பல் (பொடியாக நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 6 (பொடியாக நறுக்கியது) 
வினிகர் - 3 டேபிள் ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து விட்டு, கூர்மையான கத்தியால் நன்கு ஆழமாக கீறி விட வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக மொறுமொறுவென வறுத்து, அதனை ஒரு டிஷ்யூ பேப்பரில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், மல்லி, சீரகம், பச்சை சீரகம், மிளகு மற்றும் பட்டை போட்டு வறுத்து, குளிர வைக்க வேண்டும். பின்னர் மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வறுத்து குளிர வைத்துள்ள பொருட்களை போட்டு, சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை சிக்கன் துண்டுகளை மீது நன்கு தடவி, 2-3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். இறுதியில் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு, தீயை குறைவில் வைத்து, கிரேவி வேண்டுமெனில் சிறிது வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி, 8-10 நிமிடம் மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும். சிக்கனானது வெந்ததும், அதில் வினிகரை ஊற்றி, 2-3 நிமிடம் மீண்டும் வேக வைத்து இறக்க வேண்டும். இப்போது சுவையான சிக்கன் கேஃப்ரியல் ரெடி!!! இதன்மேல் வறுத்து வைத்துள்ள வெங்காயத்தை தூவி, சப்பாத்தி, பூரி அல்லது சாதத்துடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

Friday, July 12, 2013

சேமியா பன்னீர் உப்புமா



தேவையான பொருட்கள்: 

சேமியா - 1 1/2கப் 
சீஸ் - 100 கிராம் (சிறு துண்டுகளாக்கப்பட்டது) 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன் 
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, பின் சேமியாவை போட்டு, உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 2-3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, நீரை வடிகட்டிவிட வேண்டும். பின் உடனே அதனை குளிர்ந்த நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு சீஸ், மஞ்சள் தூள் சேர்த்து 4-5 நிமிடம் கிளறி விட்டு, வேக வைத்துள்ள சேமியாவை போட்டு, வேண்டுமெனில் உப்பு சேர்த்து, 5-6 நிமிடம் கிளறி விட்டு, இறக்க வேண்டும். இறுதியில் அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, நன்கு பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி பரிமாறினால், சூப்பரான சேமியா பன்னீர் உப்புமா ரெடி!!!

Thursday, June 27, 2013

ஆந்திரா மட்டன் குழம்பு



தேவையான பொருட்கள்:


மட்டன் - 700 கிராம் 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
தக்காளி - 2 (நறுக்கியது)
 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் 
மிளகு - 10 
பச்சை ஏலக்காய் - 5 
சோம்பு - 1/2 டீஸ்பூன் 
கசகசா - 1 டீஸ்பூன் 
மல்லி - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
பட்டை - 1 இன்ச் 
கிராம்பு - 5 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
 மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது
 உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் மட்டன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய மட்டனை போட்டு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி, 4 விசில் விட்டு இறக்க வேண்டும். 
பின்னர் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சீரகம், கசகசா, மல்லி, மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் சோம்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். 
பின்பு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். 
அடுத்து ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். 
பிறகு அதில் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை கிளறி விட வேண்டும். 
பின் வேக வைத்துள்ள மட்டன் கலவையை ஊற்றி, அரைத்து வைத்துள்ள பொடி, மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, நன்கு கிளறி, 2 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்க வேண்டும். 
இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.


சிக்கன் ஆப்கானி


தேவையான பொருட்கள்: 

சிக்கன் - 1 கிலோ 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
ஏலக்காய் - 4 
பிரியாணி இலை - 4 
பட்டை - 1 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 
குங்குமப்பூ - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

ஊற வைப்பதற்கு... 

தயிர் - 1 கப் 
வெங்காய பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன் 
முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
 எள் - 2 டேபிள் ஸ்பூன் 
பூண்டு - 4 பற்கள்

செய்முறை: 

முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் முந்திரி, எள், பூண்டு சேர்த்து நன்கு நைஸாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 
அடுத்து கழுவிய சிக்கனில் அரைத்த முந்திரி பேஸ்ட், வெங்காய பேஸ்ட், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 
3 மணிநேரம் ஆனப் பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். 
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும். 
பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, 15 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி விட வேண்டும். 
பின் உப்பு, கரம் மசாலா, மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் பிரட்டி விட வேண்டும். 
அடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, 
மூடி வைத்து 20-25 நிமிடம் தீயை குறைவில் வைத்து, 
சிக்கனை வேக வைக்க வேண்டும். 
சிக்கனானது வெந்ததும், அடுப்பை அணைத்து, கொத்தமல்லி மற்றும் குங்குமப்பூவை தூவி அலங்கரித்தால், சுவையான சிக்கன் ஆப்கானி ரெடி!!!

பஞ்சாபி சிக்கன் மசாலா



தேவையான பொருட்கள்:

 சிக்கன் - 500 கிராம் 
வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது) 
தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் 
ஏலக்காய் - 4 
பட்டை - 1 
சீரகம் - 1 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு 
கடுகு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் (விருப்பமான எண்ணெய்) 
தண்ணீர் - தேவையான அளவு 
ஸ்பெஷல் பஞ்சாபி கரம் மசாலாவிற்கு... மல்லி - 2 டீஸ்பூன் 
சீரகம் - 2 டீஸ்பூன் 
பட்டை - 1 
வெந்தயம் - 1/2 டீஸ்பூன் 
மிளகு - 2 டேபிள் ஸ்பூன் 
பிரியாணி இலை - 2 

செய்முறை: 

முதலில் கரம் மசாலாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும், மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
பின்னர் சிக்கன் துண்டுகளை நன்கு நீரில் கழுவி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். 
பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும். 
பின்பு நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். 
கலவையானது நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளைச் சேர்த்து பிரட்டி விட்டு, 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். 
பின் உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 20 நிமிடம் மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.

Sunday, April 14, 2013

தஹி கோஸ்ட்: மட்டன் ரெசிபி




தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத ஆட்டுக்கறி - 500 கிராம் 
தயிர் - 500 கிராம் 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
தக்காளி - 2 (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 3 டேபிள் ஸ்பூன் 
கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன் 
சீரகப் பொடி - 2 டேபிள் ஸ்பூன் 
பிரியாணி இலை - 1 
மிளகு - 1 டீஸ்பூன் (பொடி செய்தது) 
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை: 

முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் மஞ்சள் தூள், மிளகுப் பொடி, உப்பு, தயிர், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்.பச்சை மிளகாய் போட்டு கலந்து, கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து கலந்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை போட்டு தாளித்து, வெங்காயம் மற்றும் மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு தக்காளி, மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் சீரகப் பொடி போட்டு கிளறி, எண்ணெயும் மசாலாவும் தனியாக பிரியும் வரை வதக்கவும். பின் ஊற வைத்துள்ள மட்டனை போட்டு, அதில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, மட்டன் வேகும் வரை நன்கு கொதிக்க விட்டு, சற்று கெட்டியான கிரேவி போல் வந்ததும், இறக்க வேண்டும்.


மல்வானி சிக்கன் குழம்பு




தேவையான பொருட்கள்: 

சிக்கன் - 500 கிராம் (சிறு துண்டுகளாக வெட்டப்பட்டது) 
வெங்காயம் - 4 (நறுக்கியது) 
தேங்காய் - 1 கப் (துருவியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
பட்டை - 1 இன்ச் 
மிளகு - 5 
ஏலக்காய் - 2 
அன்னாசி பூ - 1 
பிரியாணி இலை - 1 
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
கரம் மசாலா பவுடர் - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு



சிக்கனை ஊற வைப்பதற்கு... 

இஞ்சி - 1 இன்ச்
 பூண்டு - 5 பல் 
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 4 
கொத்தமல்லி - 1/2 கட்டு 
ஜாதிக்காய் பொடி - 1 டீஸ்பூன் 
உப்பு - 2 டீஸ்பூன்

செய்முறை: 

முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவி, தண்ணீர் முழுவதையும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிக்கனை ஊற வைப்பதற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் அரைத்துக் கொண்டு, அதனை சிக்கனுடன் சேர்த்து நன்கு கலந்து, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சீரகம், பட்டை, மிளகு, அன்னாசி பூ, ஏலக்காய் சேர்த்து வதக்கி, பின் அதில் பாதி வெங்காயத்தை போட்டு, நன்கு 3-4 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அதில் துருவிய தேங்காயை போட்டு, அடுத்த 3-4 நிமிடம் வதக்கி, பின் அதனை இறக்கி குளிர வைத்து, நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை சேர்த்து, மீதமுள்ள வெங்காயத்தையும் போட்டு, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும். பின் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு, 3-4 நிமிடம் வதக்கி, உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து, 2-3 நிமிடம் மசாலாக்கள் அனைத்தும் சிக்கனுடன் சேருமாறு பிரட்ட வேண்டும். அடுத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை ஊற்றி, வேண்டிய அளவில் தண்ணீர் சேர்த்து, குழம்பை நன்கு 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான மல்வானி சிக்கன் குழம்பு ரெடி!!! 
இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

மட்டன் மசாலா



தேவையான பொருட்கள்: 

மட்டன் - 1/2 கிலோ 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
 மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன் 
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
 பட்டை - 1 இன்ச் 
கிராம்பு - 4 
மிளகு - 6 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
தண்ணீர் - 3/4 கப் 
கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - 
தேவையான அளவு உப்பு - தேவையான அளவு

 செய்முறை: 

முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, மிளகு போட்டு வதக்கி, பின் மட்டன் சேர்த்து சிறிது நேரம் கிளறி, தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, அதோடு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்க வேண்டும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், உப்பு மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, வேக வைத்து இறக்கிய மட்டனை கலவையை ஊற்றி, மசாலா சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு, இறக்க வேண்டும். இப்போது நல்ல காரமான மட்டன் மசாலா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி, சாதத்துடன் பரிமாறலாம்.

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி


தேவையான பொருட்கள்

சிக்கன் - ஒரு கிலோ
பாஸ்மதி அரிசி - 3/4 கிலோ
எண்ணெய் - 200 கிராம்
பட்டர் - 50 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
தயிர் - 1/2 லிட்டர்
ப்ரைடு ஆனியன் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை - ஒன்று
பட்டை - ஒரு சிறிய துண்டு
ஏலக்காய் - 3
கிராம்பு - 5
பிரிஞ்சி இலை - 2
ஷாகிஜீரா - 2 தேக்கரண்டி
கருப்பு ஏலக்காய் - 2
ஜாதிபத்திரி - சிறிதளவு
கொத்தமல்லி தழை - ஒரு கொத்து
புதினா - ஒரு கொத்து
குங்குமப்பூ (அ) ரெட் கலர் தூள் - சிறிதளவு

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பொடி வகைகள் மற்றும் வாசனை பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ப்ரைடு ஆனியன் கடைகளில் கிடைக்கிறது. இல்லையெனில் பல்லாரி வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி அரை தேக்கரண்டி அரிசிமாவை அதில் தூவி கைகளால் நன்கு பிசறி எண்ணெயில் போட்டு பொன்னிறமானதும் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

சிக்கனை சுத்தம் செய்து கழுவி அதில் 50 மி.லி எண்ணெய், இஞ்சி பூண்டு விழுது, 2 பச்சை மிளகாய், தயிர், உப்பு, அரைத்த மசாலா பொடி, சிறிதளவு பட்டை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் சிறிதளவு உப்பு, 2 ஏலக்காய், ஒரு பச்சை மிளகாய், 2 கிராம்பு, ஒரு பிரிஞ்சி இலை, சிறிதளவு பட்டை, சிறிதளவு ஷாகிஜீரா ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்திருக்கும் அரிசியை போட்டு சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து அரை பதமாக வேக வைத்து வடித்து எடுத்துக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டர் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்த சிக்கன் கலவையை போட்டு 1 1/2 டம்ளர் (350 ml) தண்ணீர் ஊற்றி சிக்கனை சமப்படுத்தி விடவும்.

சிக்கன் கலவையின் மேல் வேக வைத்த சாதத்தை கொட்டி நன்கு பரப்பி விடவும்.

அதன் மேல் ப்ரைடு ஆனியன், மல்லி தழை, புதினா போன்றவற்றை சுற்றிலும் போடவும். கடைசியாக குங்குமப்பூவை பாலில் கரைத்து ஆங்காங்கே தெளித்து விடவும். கலர்பொடி என்றால் இருகலர் பயன்படுத்தலாம். கலர்பொடி சேர்ப்பது உடல்நலத்திற்கு நல்லதல்ல. அதனால் குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளவும்.

பாத்திரத்திலிருந்து நீராவி வெளியில் செல்லாதவாறு மூடி போட்டு கொள்ளவும். இதுப்போல் க்ளாஸ் மூடியில் ஆவி வெளியே செல்லாது. 1/2 மணி நேரம் மிதமான தீயில் வைக்கவும். இடையிடையே திறக்க கூடாது. ஸ்டீம் வெளியே சென்றால் சாதம் அடியில் பிடித்து விடும். (சாதரணமூடி என்றால் அலுமினியம் பாயில் போட்டு ஒட்டி விட்டு அதன் மேல் மூடி போடவும். அல்லது பாத்திரத்தை சுற்றிலும் சப்பாத்தி மாவை ஒட்டி அதன் மேல் மூடி போடலாம்.)

அரைமணி நேரம் கழித்து அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கி விடவும். இப்போது பிரியாணி தயாராகி இருக்கும். வெயிட் அதிகம் இல்லாத கரண்டியினால் சாதத்தை மெதுவாக பிரட்டி விடவும்.

சுவையான ஹைதராபாத் சிக்கன் பிரியாணி தயார். விரும்பினால் முந்திரி, திராட்சை, போன்ற நட்ஸ் வகைகளை பட்டரில் ப்ரை செய்து போடலாம். ஒரு சிலர் இன்னும் நிறைய வாசனை பொருட்கள் சேர்ப்பார்கள். இதில் கொடுத்துள்ளவை மற்றும் சேர்த்தாலே சுவை நன்றாக இருக்கும்.

நன்றி - இணையம் 

Tuesday, January 15, 2013

ரத்தத்தில் சர்க்ககரை அளவை குறைக்கும் பாகற்காய்



பாகற்காய் கசப்பு சுவைமிக்கது. இது உடல் நலத்துக்கான உணவாகக் கருதப்படுகிறது. இதற்கு மருத்துவப் பயன்களும் உண்டு. சம்பலாகவோ, 
கறியாக்கியோ, வறுத்தோ, பொரித்தோ உண்பர். பாகற்காயின் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம்(hypoglycaemic activity) உண்டு.

பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும். பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும். பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். இரண்டு அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே ஒரு அளவு வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப் பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்.

பாகல் இலைச்சாற்றில் சிறிது அளவு குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த ஆகாரப்பை சிறுத்து வந்து விடும். பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும். பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

பாக்டீரியா, டயபெடீஸ், ரத்தப் புற்றுநோய், குடல்புண், ரத்த அழுத்தம், மலச்சிக்கல் என்று பல உபாதைகளுக்கும் பயனளிக்கக் கூடியது.மேற்கிந்திய 
தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.  இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள். பாகற்காயின் விதையிலிருந்து எடுத்த எண்ணெயை காயங்களுக்குப் போடுகிறார்கள்.

சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.
உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

நன்றி:  தினகரன்